Posted on April 04, 2012 by muthukumar
புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இருதய நோய் வரக் கூடிய ஆபத்தானது அப்பழக்கமுள் ள ஆண்களை விட அதிகமாக இரு க்கிறது என முப்பது வருட ஆராய்ச் சிகளில் மீளாய்வு கூறு கிறது.
இருபத்து
நான்கு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்து ப் பார்க்கையில்
புகைக்கும் ஆண்க ளை விட புகைக்கும் பெண் களுக்கு இருதய நோய் ஆபத்து 25
சதவீதம் கூடுதலாக இருப் பதாக லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிக ஆபத்து வருவது ஏன் என்பதற்கான காரண ங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர் கள் சொல்கின்றனர்.
சாதாரணமாக
ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கை யிலான சிகரெ ட்டுகளைத்தான்
பிடிக்கிறார் கள் என்றாலும், அவர்களுக் கு இருதய நோய் ஆபத்து அதிகம் என்ற
கண்டுபிடிப்பு ஒரு எச்சரிக்கையாக வந்துள் ளது என பிரிட்டிஷ் ஹார்ட்
பவுண்டேஷன் என்ற இருதய நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உலகில்
அதிகம் பேரைக் கொல்லும் நோ ய் இருதய நோய்தான் என்றும் ஒவ்வொ ரு ஆண்டும்
இந்நோயின் காரணமாக ஏழுபது லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் உலக
சுகாதார நிறுவனம் கூறு கிறது.
ஆண்
பெண் என இருபாலாரிலுமே புகை ப்பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடு கையில்
புகைப்பவர்களுக்கு இருதய நோய் வருவத ற்கான ஆபத்து இரண்டு மடங்கு அதிகம்
என்பதும் குறிப்பிடத்த க்கது.
No comments:
Post a Comment