Sunday, 12 February 2012

க‌படி (சடுகுடு) விளையாட்டு


கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழர்களால் பல காலமாக, பரவலாக விளையாடப் படும் தமிழர் விளையாட்டுகளுக் குள் ஒன்று. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+ பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளை யாடப்படுகிறது.
இவ்விளையாட்டு இரு அணிகளு க்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ் வொரு அணியிலும் ஏழுபேர் இரு ப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள் சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடு களத்தை ஒரு நடுக்கோட்டா ல் இரண்டாக பிரித்து ஒரு பக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணி யினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழு தும் புற எல்லைக் கோடுக ளைத் தாண்டி செல்லலா காது. இவ்விளையாட்டு க்கு ஒரு நடுவரும் தேவை.
ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட் டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் “கபடிக் கபடி” (அல்லது “சடு குடு”) என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடி படாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணி யிடம் திரும்பிவரும் ஒரு வகை விளை யாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடிக்” என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டு விட்டு அகப்படாமல் திரும்பி வரவேண்டும், அகப்பட்டால் சென்ற வர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடிக்’ என்று சொல் வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட் டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும், பெண் களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.
கபடிப் பாடல்கள்
நாந்தான் வீரன்டா நல்ல முத்து பேரன்டா வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாட வாரன்டா தங்கச் சிலம்பெடுத் துத் தாலிகட்ட வாரன்டா சடு குடு சடுகுடு சடுகுடு சடு குடு.
கீத்து கீத்துடா கீரைத் தண்டு டா நட்டு வச்சன்டா பட்டுப் போச்சுடா போச்சுடா போச்சு டா….
ஆடுகளம்
ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வே ண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ் வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட் டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத் தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment