Posted On March 2,2012,By Muthukumar |
மனிதனை பாடாய்படுத்தும் நோய்களுள் ஒன்று... ஒற்றைத் தலைவலி. பெரும்பாலும் அதிகமான மன அழுத்தம் காரணமாகவே இது வருகிறது.
என்றாலும்,
குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக்
கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும்
ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் இது
வரலாம்.
இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடுகிறது.
ஒற்றைத் தலைவலி தீர எளிய வழிமுறைகள் உள்ளன. அவை...
* எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
* நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்தலாம்.
*
முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி,
அதைக்கொண்டு தலையின் மீது ஒத்தடம் தரலாம். முட்டைக்கோஸ் உலர்ந்து விட்டால்
புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டி பயன்படுத்துங்கள்.
* குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டலாம். பின் கைகளையும் கால்களையும் சுடுநீரில் விடவும்.
* 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.
* வாசனை எண்ணெயால் தலைக்கு ஒற்றடம் தரலாம். தேய்த்தும் விடலாம்.
இவை தவிர, முன்னெச்சரிக்கையாக இருந்தும் ஒற்றைத் தலைவலி வருவதை தவிர்க்கலாம்.
புகை மற்றும் மது தலைவலியை தூண்டக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்த்திடுங்கள்.
மேலும்,
வெயிலில் அலைவது, காரமான உணவு வகைகளை உட்கொள்வது, வயிறு முட்ட
சாப்பிடுவது, தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை கொள்வது போன்றவற்றை
தவிர்த்து வந்தாலும் ஒற்றைத் தலைவலி நம்மை நெருங்காது.
No comments:
Post a Comment