Thursday, 12 January 2012

உலக அதிசயம் - GRAND CANYON - பள்ளத்தாக்குகளின் மேல் - SKY WALK - அழகான புகைப்படங்கள்

Posted On Jan 12,2012,By Muthukumar
பூமி என்பது , சூரியனிடம் இருந்து தெறித்து விழுந்த ஒரு வெப்பத்துளி.  அது சிறிது சிறிதாக குளிர்ந்து - மலைகளும், பாறைகளும், நதிகளும், கடல்களும் - பின்பு உயிரினங்களும் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே தோன்றி இருக்கின்றன, என்கிறது அறிவியல். அப்படிப்பட்ட இயற்கையின் விசித்திர சிருஷ்டியான ஒரு பள்ளத்தாக்கு பற்றி , இன்று நாம் காண விருக்கிறோம்.

நேற்று இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய " சிவம்" நாவலை மீண்டும் ஒருமுறை படிக்க உட்கார்ந்தபோது - ஒரு தகவல் மனதில் பதிந்து விட்டது. அது எவ்வளவு தூரம் உண்மையோ, பொய்யோ தெரியாது..  அமெரிக்காவின் கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்குகளில் - நமது மும்மூர்த்திகளான " சிவா , விஷ்ணு , பிரம்மா " வின் படிமங்கள் - பாறைகளில் படிந்து இருப்பதாக எழுதி இருந்தார். இவ்வளவு பெரிய பள்ளத்தாக்குகளில் - சந்தேகமே இல்லாமல் , ஏராளமான ரூபங்கள் - நம் கண்ணுக்கு தெரியக்கூடும்.     

பொதுவாக இந்திராஜி எழுதிய நாவல்களை , நாம் முதன்முறை படிக்கும்போது - கதையின் விறுவிறுப்பில் , நாம் நிறைய விஷயங்களை மனதில் பதிய வைக்க முடியாது. திரும்ப நீங்கள் படிக்கும்போது , உங்களுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக புலப்படும். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத , அதே சமயம் ஆன்மீக பொக்கிஷங்கள் நிறைய அடங்கியவை அவர் நாவல்கள் .  

உண்மைலேயே , இயற்கையின் ஒரு அதி  அற்புதமான சிருஷ்டி - இந்த பள்ளத்தாக்கு. நம் இந்தியாவிலும், ஏராளமான இடங்கள் இதைப் போல் உள்ளன. வானில் , நம் கண்ணுக்கு புலப்படும் ரூபங்கள் , பூமியில் இருந்தால் எப்படி இருக்குமோ , அதைப்போல - அழகின் உச்சமான இந்த பள்ளத்தாக்குகளை , நம் வாசகர்களும் தெரிந்து கொள்வதற்காக இங்கு பகிர்கிறேன்.


நமது வாசகர்களில், யாராவது நேரடியாக சென்று வந்து இருந்தால் - உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

கிராண்ட் கன்யான் :



இது NGC வெளியிட்டுள்ள கிராண்ட் கன்யான் - sky வாக் - வீடியோ தொகுப்பு. க்ளிக் செய்து பாருங்கள் . பரவசமூட்டும் அனுபவம். சுமார் 4000 அடி உயரத்தில் , கண்ணாடி தரையில் கீழே பார்க்க முடியுமாம்.

http://video.nationalgeographic.com/video/player/news/culture-places-news/grand-canyon-skywalk-vin.html

மேலும் அதிக விவரங்களுக்கு கிராண்ட் கன்யான் official website
: http://www.nps.gov/grca/index.htm











































No comments:

Post a Comment