Posted on January 12, 2012 by muthukumar
ஹோண்டாவின்
உலகத்தரமா ன கார். நீங்கள் அக்கார்டு கார் வைத்திருக்கிறீர்கள் என்றால்,
உலகின் எந்த மூலைக் குச் சென்றாலும் உங்களுக்கான மதிப்பு தனிதான்! 2012-ம்
ஆண் டுக்கான ஹோண்டா அக்கார் டில், பல்வேறு சிறப்பம்சங்களைச் சேர்த்திருக்கிறது ஹோண்டா.
2354 சிசி, V6 இன்ஜின் கொண்ட
அக்கார்டு கார், அதிகபட்சமாக 190 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது.
பர்ஃபாமென்ஸில் மட்டும் அல்லாமல், நான்கு அல்லது ஐந்து பேர் வசதியாக
உட்கார்ந்து பயணிக்கக் கூடிய கார் என்பதால், ஹோண்டா அக்கார்டு ‘டாப் டென்’
பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது!
ரியல்
ஸ்போர்ட்ஸ் கார்! கேமென் காரை பேபி போர்ஷே என்றும் சொல்வார்கள். 6
சிலிண்டர், 3.4 லிட்டர் கொள்ளளவு, 330 bhp சக்தி, 7-ஸ்பீடு கியர் பாக்ஸ் என
த்ரில் விரும்பிகளுக்கான பர்ஃ பெக்ட் கார் போர்ஷே கேமென். 0-100 கி.மீ
வேகத்தை 4.9 விநாடி களில் கடக்கிறது போர்ஷே கேமென். ஸ்போர்ட்ஸ் கார்
என்பதால், காருக்குள் இருவர் மட்டுமே உட்கார முடியும். அதே போல்,
டிக்கியில் பொருட்கள், பைகள் வைக்க எல்லாம் இடம் கிடையாது!
3000
சிசி, 310 bhp சக்தி என பவர்ஃபுல் புள்ளி விவரங்களால் மிர ட்டும் ஆடியின்
அழகான கார், ஆடி எஸ்-7. V6 இன்ஜின், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், 6
காற்றுப் பைகள், 4 வகையான சீட் அட்ஜெஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல்,
காருக்குள் அதிவேக கம்ப்யூ ட்டர் இன்டர்நெட் வசதி, 7 இன்ச் டிரைவர்
இன்ஃபர்மேஷன் சிஸ் டம், ஃபிரேம் இல்லாத பக்கவாட்டுக் கண்ணாடிகள் என
காருக்குள் இருப்பது எல்லாமே ஹை-டெக் வசதிகள்தான்!
தன்னுடைய
எல்லைகளைத் தாண்டி வெற்றி பெறும் கார் என்பது தான் ஃபோர்டு ஃபோகஸின்
சிறப்பு. ஹேட்ச்பேக் கார்தான் என் றாலும், இந்த காரின் பர்ஃபாமென்ஸ் மிரள
வைக்கும். 2000 சிசி திறன் கொண்ட இந்த காரின் பவர் 160 bhp. 5-ஸ்பீடு
மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என இரண்டு வகையான கியர்
பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு. ஆனால், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸைவிட மேனுவல்
கியர் பாக்ஸில் ஓட்டுவதில்தான் இந்த காரை ஓட்டுவதற்கான த்ரில்லே இருக்கிறது
என்கிறார்கள் ஃபோகஸ் ரசிகர்கள்!
Advertisement
No comments:
Post a Comment