Friday, 30 March 2012

தொட்டுத் தொட்டுப்பேசினால்தான் காதல் இனிக்குமாம்

Posted On March 30,2012,By Muthukumar
உங்களது காதலியையோ காதலரையோ மனைவியையோ கண வரையோ அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர் கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவ தோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வ து அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படிப்பவர்க ளோ அல்லது பணியில் இருப்பவர்களோ காதலிக்கும் போது தனியாக சந்தித்துப் பேசும் தருணம் கிடைத்தால் அதற்காக வே காத்திருந்தது போல அநியாயத்திற்கு பேசித் தீர்ப்பார்கள். அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஸ்வீட் நத்திங்ஸ் என்பார்கள்.
இன்றைக்கு செல்போனின் வருகைக்குப் பின்னர் நேரில் சந்திப்பது அவசியமற்றது என்பதைப்போல மணிக்கணக்கில் பேசுகின்றனர். அதுபோலத்தான் திருமணம் நிச்சயம் செய்தவர்களும் திருமணத் திற்கு முதல்நாள்வரை அனைத்தையும் பேசி தீர்த்து விடுவார்கள். இதனால் சின்ன சின்ன ஸ்பரிசங் களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
சின்ன சின்ன ஸ்பரிசம்
காதலிக்கும் பருவத்தில், பேச்சி லிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன் பம் தரும் ஸ்பரிசங்களாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அறிந்தும் அறியாமலும் உரசிக் கொள்ளும் விரல்கள், உடலின் அங்கங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள். அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே கொண்டு செல்லும்
முத்தமிடுங்கள்
திருமணத்திற்குப் பின்னர் கணவ னும் மனைவியும் முதல் இரண் டு வருடங்களிலேயே பேசி முடித் துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌ னமே அவர்களின் உறவை ஆக்கி ரமித்துவிடும்.
தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் ஜோடிகளால் நாள் முழுவ தும் உற்சாகமாக இருக்க முடிகிறது என்கிறது அறிவியல் உண் மை. நம்மூரில் இந்தத் ‘தொடுத ல்’ எனும் அற்புதமான விஷய ம், வெகு சீக்கிரம் ஜோடிகளிடமிரு ந்து விடுபட்டு விடுகிறது. ‘தொடு தல்’ என்றால் உடலுறவு மட்டு மே அல்ல; அது சில நிமிடங்களி ல் முடிந்து போகிற ‘பேஸிக் இன் ஸ்டிங்க்ட்’. ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது. முத் தமிடுவது, அணை ப்பது, விரல் களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகி றது.
சமூக கடமைகள்
நம்மூர் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய இந்த மென்மை யான மொழி தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமா ன்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் பல கணவர் ஜாதிகளுக்குப் புரியாமல் போகிறது. பெண்களும் இந் தத் தொடுதல், கட்டிப்பிடித் தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்ப டை விஷயங்களில் தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கி றார்கள் என்பது மற்றொரு பிரச்சனை.
இன்றைக்கு பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால் இதில் இருக் கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் சம்பிரதாயக் கடமைக ளை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இரு ப்பார்கள். அதாவது குழந்தை களை பெற்று அவர்களை வள ர்த்து ஆளாக் குவதுதான் தலையாய கடமைபோல செயல்பட்டு அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரி யா த சுவர் ஒன்றை எழுப்பிக் கொள் வார்கள்.
அற்புதமான மருத்துவம்
தொடுதல் என்கிற இந்த ‘ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல் களைத் தீர்க்கக் கூடிய மரு த்துவம். அது ஒருவகையான மசாஜ் தான். நவீன மருத்து வத்தின் தந்தை என்று போ ற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்… ‘மசாஜ் மற்றும் தொடுதல் ஆகிய வை பெரும்பாலான நோய்க ளைத் தீர்க்கின்றன’ என்று பிரசாரமே செய்தவர். ‘ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்து வம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போ து… மூளையில் ‘எண்டோர்ஃபின்’ எனும் ரசா யனம் சுரந்து உற்சாகமூட்டுவதாகக் கண் டறிந்திருக்கிறார்கள்.
ரொமான்ஸ் வளரும்
‘தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர் கள் கவிஞர்கள் ஆகிறார்கள்’ என்றார் தத் துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாக வும் ஆகிறார்கள்.
ஆகவே தம்பதியர்களே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்தமிடுங்கள், கரங்க ளைக் கோர்த்துக் கொள்ளு ங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால் உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என் பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment