Posted on March 30, 2012 by muthukumar
வீட்டைக்கட்டிப்பார், திருமணம்செய்துபார் என்பார்கள். திரு
மணம்
செய்வது அந்த அளவிற்கு கடினமாக விசய ம். ஆனால் மனதிற்கு பிடித்த துணையை
பார்த்து காதலிப்பதும், திருமணம்செய்து கொள்வதும் இன்றைய இளையதலைமுறை க்கு
எளிதான காரியமாக உள்ளது.
பெரும்பாலான
பெற்றோர்கள் காதல் திரும ணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை. தங் கள்
குழந்தைகளுக்கு தாங்களாக பார்த்து முடிவு செய்து துணையை தேடித்தருவதைத்
தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் கா தலித்து திருமணம் செய்து
கொண்டவர்களி ன் வாழ்க்கையில் எழும் பல சிக்கல்கள் தான்.
காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்ப்பதற்கான காரணத்தை அலசுகின்றனர் உளவியல் நிபுணர்கள்.
காதல் என்பது உணர்வு ரீதியாக எடுக்கும் முடிவு. இது பெரும்பா
லான
சமயங்களில் தோல்வியில்தா ன் முடிகிறது என்பது பெற்றோர்களின் வாதம். துணையை
தேர்ந்தெடுப்பதில் குழந்தைகள் தவறான முடிவு எடுத்து விட்டு பின்னர் கண்ணை
கசக்கிக் கொ ண்டு நிற்பார்களே என்ற பயம்தான் காதல் திருமணத்தை எதிர்க்க
காரண ம். எனவே பாதுகாப்பான வாழ்க்கை யை தங்களால் மட்டுமே தேர்தெடுத்து தர
முடியும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை.
அனுபவம் போதாது
தங்கள்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் இன்னமும் குழந்தைகள்தான் என்று
பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருப் பார்கள். துணையை தேர்ந்தெடுக்கும்
அளவிற்கு குழந்தைகளுக்கு அ
னுபவம்
போதாது என்பது பெற் றோர்கள் வாதம். எனவேதான் காதல் திருமணத்தை எதிர்க்கின்
றனர். தாங்கள் பார்த்து வைக்கும் பெண்ணையோ / பையனையோ திருமணம் செய்துகொள்ள
வேண் டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இந்திய கலாச்சாரம்
இந்தியாவில் காதல் திருமணங்களை விட நிச்சயம் செய்யப்பட்ட
திருமணங்கள்தான்
சிறந்தது என்று இன்றைக்கும் கருதப்படுகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள
பாதுகாப்புதான். தங்கள் பெற்றோர்கள் தங்களுக்கு சிறந் த வாழ்க்கைத் துணையை
தேர்ந்தெடு த்து கொடுத்ததைப்போல தங்கள் குழந் தைகளுக்கு சிறந்த துணையை
தேர்தெடுத்து தரவேண்டும் என்பது இன்றைய பெற்றோர்களின் நம்பிக்கை.
கண்டதும் காதல்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
திருமணம்
என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். காதலோ, நிச்சயிக்கப்பட்ட தோ
திருமண வாழ்க்கை என் பது தலைமுறை தாண்டியும் சந்தோசமாக இருந்தால் சரி தான்.
No comments:
Post a Comment