Friday, 30 March 2012

விவாகரத்து எளிதில் பெற விரைவில் புதிய சட்டம்!

பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெறும் வகையில், புதிய சட்டமசோதா கொண்டு வரப்படு கிறது. இதற்கு, மத்திய அமைச்ச ரவை நேற்று முன் திம் ஒப்பு தல் அளித்துள்ளது.
திருமண சட்டத்திருத்த மசோதா , கடந்த 2010ல், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்ன ர், இந்த மசோதா சட்டம் மற்றும் நீதித் துறைக்கான பார்லிமென் ட் நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதை பரிசீலி த்த நிலைக் குழு, இந்த மசோதாவில் நான்கு திருத்தங்களை செய்யு ம்படி பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஏற்ப, மசோதாவை மாற்றி அமைக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிரிந்த தம்பதியர் பரஸ்பரம் விவாகர த்துகோரி விண்ணப்பித்தால், குறைந் தபட்சம் ஆறு மாதம் முதல் 18 மாதங்கள் வரை, அவர்கள் விவாகரத்து பெற காத்திருக்க வேண் டும். இனி அந்த நிலைமை இருக்காது.”
இனி சேர்ந்து வாழவே முடியாத திருமணம்’ என்ற புதிய விதிமுறை, சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தால், பிரிந்தவர்கள் விரைவி ல் விவாகரத்து பெற்று விட முடியும். அவர்கள் இனி ஒன் று சேர முடியாது என, கோர்ட் தீர்மானித்தால், உடனடியாக விவாகரத்து வழங்கலாம். இ தன்மூலம், ஆறு மாதம் முதல் 18 மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. பரஸ்பரம் விவாகரத்துகோரி விண்ணப்பித்தால், உடனே கிடைக்கு ம். இதே போல, “சேரவே முடியாது’ என்ற புதிய பிரிவின்படி, கணவ ன் விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க, மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், மனைவி இதே காரணத்திற்காக விவாகரத்து கோ ரும் போது, அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லை.

No comments:

Post a Comment