Thursday, 29 March 2012

இளம் பருவ பெண்களுக்கு ஏற்படக் கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகள்

மனித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பரு வம், வளர் இளம் பருவம், வாலி ப்பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவா று பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ் வொரு பருவகால கட்டங்களி லும் அந்தந்த பருவ நிலைக்கே ற்ப உடல் மற்றும் மன நிலைக ளில் மாறுதல்கள் தோன்றக்கூடும், நலமான வாழ்க்கை என்பது பொதுவாகவே நலமான உடல், நலமான மனம் என்ற இரண் டையும் உள்ளடக்கியதுதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட, நல வாழ்விற்கு உடல், மனம் என்ற தனிமனித பக்கமும் சமூகம் என்ற மூன்றாம் பக்கமும் உண்டு. இந்த மூன்று பக்கங்கள் அல்லது முப் பரிமானங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய காரணத்தினால் ஒன்றின் குறை ஒன்றை பாதிக்க வே செய்யும். உடல் குறை மன தைப் பாதிக்கும், பாதிக்கப்பட்ட மனநிலை உடல் நலனைப் பாதி க்கும். சமூகச் சூழல் உடல், மனம் இவ்விரண்டையுமே பாதிக்கும் தன்மை உடையது.
இது தாண்டிய ஆன்மீக உணர்வு என்பது உடலையும், மனதையும் பாதிக்க வல்லது. தெளிவாக சொல்லப்போனால் மாற்றவல்லது என்றாலும் கூட இக்கட்டுரையில் ஆன்மீக தொடர்பு பற்றி நாம் பேசப் போவது இல்லை. அதிலும் குறிப்பாக வளர் இளம் பருவத்தில் பெண் களுக்கு ஏற்படக் கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே இங்கு தொட்டுச் செல் லப்போகிறோம். மேலை நாட்டு மரு த்துவமான ஆங்கில மருத்துவத்தில் நாம் முன்னர்பேசி ஒருங்கிணைந்த விஷயங்களான உடல்நலம், மன நலம், மூன்றாவதான சமூகநலம் என்ற மூன்றின் ஒருங்கிணைந்த நல ப்போக்கு [integrated health per pective] அவ்வளவாகக் காணப்படு வதில்லை. ஆங்கில மருத்து வத்தில் நல வாழ் க்கை எது என்று கேள்வி கேட்கப்படும் பொழுது அது சிக்கலா ன கேள்வியாக இருக்கிறது.
மனிதர்களின் நல வாழ்வுக்கு பொறுப்புடைய அரசுகள் பெரும்பாலு ம் மேலை மருத்து வத்தின் அடிப்படையிலேயே பார்க்கின்றன. அரசு மருத்துவமனைகள் மேலைநாட்டு தத்துவத்தின் அடிப்படையிலே யே அமைந்திருக்கின்ற காரணத்தினால் பெரும்செலவில் மருத்துவ நிலையங்கள் (மருத்துவ கல்வி + மருத்துவமனைகள்) நடத்தப்படு கின்றன. பல பரிசோதனை ஆய்வு கள், கருவிகள் சார்ந்த தாகவே இருக்கிறது. அதனால் குணப்படுத்துதல் என்பது பணத்தின் அடிப்படையில் அமைந்து விடுகிறது.
எல்லா மக்களுக்கும் சென்றடையக் கூ டிய மருத்துவம் மாற்று மருத்துவம் தான், ஏனெனில் இது ஒரு ஒருங்கிணைந்த நல வாழ்வு கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.
வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்பு கள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொ ள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததா கவே இருக்கின்றது. இது வரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனை களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த வளர் இளம் பருவத் தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திர மான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகு ம். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினைகைக் கொள்ள வேண் டும். குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்கு கின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார் கள். தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொ ள்ளும் காரணத்தினால் அவர்க ளுடைய தோழமை யார், யாரி டம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக் க வேண்டும். நல்ல பழக்க வழக் கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப்படுத்த வே ண்டும்.
ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர் பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது. இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டுவதன் மூலம் பெற்றோ ர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக் கமானமன உறவு நிலையி லிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடும். [Distanting or indifferent attitude] எதிர் பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படு ம். கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங் களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக்கூடா து. அழகு சாதனங்கள் மூலம் தங்கள் அழகை மிகைப்படுத்திக் கொள்ள எண்ணுகின்ற இவர்க ளின் போக்கை வியாபார நோக்கோடு பயன்படுத் துகின்ற விளம்பரங்கள் இன்றைய கால கட்டத் தில் மிக, மிக அதிகம், தொலைக்காட்சி விளம்பர ங்கள் இந்த மனப்போக்கை முதலீடாக வைத்துத் தான் கொள்ளை லாபம் சம் பாதிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.
அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு அது தீவிரமானதாக ஆகும் பொழுது அதனை காதல் என் றும் சொல்லலாம். இந்த அன்பு அல்லது பாசம் பரிமா ற்றத்தின் மூலம் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அன் னை குழந்தையிடம் கொள்ளும் அன்பு, ஆசிரியர்கள் மாணவர் களிடம் கொள்ளும் அன்பு, மனிதர்கள் மிருகங்களிடம் கொள்ளும் அன்பு, குடும்பத் தார்க்கு இடையில் ஒருவருக்கொருவரிடம் ஏற்படுகின்ற அன்பு, மனி தர்கள் கடவுளிடம் கொள்ளும் அன்பு என்பதான இறை அன்பு என பல பரிமாணங்கள் உண்டு. என்றாலும் கூட காதல் என்றவுடன் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற அன்பு என் பதாக மட்டுமே பல சமயங் களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவ துண்டு. வளர்இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக் கவர்ச்சி கூட  பல சமயங்களில் தீவிரமா ன அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண் டு. இவர்களுக்கிடையே ஏற்படக் கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயா னால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழு மை பெறாமல் முறிந்து விடும்போது அது பெருமளவி ல் பெண்களைத் தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.
அதிலும் ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்தி ய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாய்ப்பு என்பது மிகவும் அரிதா கி விடுவதாகவோ அல்லது திரு மண வாழ்வுக்குப் பின் நிம்மதி யற்ற வாழ்க்கையாக அமைந்து விடவோ கூடும்.
எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற் றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெரியவர்களான எல்லாருடைய கடமையும், குறிப்பாக பெற்றோரின் கடமையும் ஆகு ம். இது படிக்கின்ற குழந்தைகள் மற்றும் பணி செய்யும் குழந்தைகள் எல்லோர்க் கும் பொருந்தக் கூடியது ஒன்றுதான், என் றாலும் பணி செய்யும் குழந்தைகளை விட பள்ளிக் குழந்தைகளிடம் இந்த காதல் வய ப்படும் மனநிலை தோன்றும்போது படிப் பில் கவனம் சிதறுதல் காரணமாக தொடர் கல்வி கடுமையாக பாதிக்கப்படும்.
நம்மவர்களிடையே மனநல ஆலோசனை க்காக நிபுணர்களை கலந்து ஆலோசிக் கும் பழக்கம் மிகவும் குறைவு. அடிப்படை நிலை யிலேயே இனம் கண்டு கொண்டா ல் மனச்சிதைவு ஏற்படும் நிலைக்கு தள்ள ப்படாமல் தப்பிக்கலாம். ஆங்கில மருத்து வத்தைவிட ஹோமியோ மற்றும் மலர் மருத்துவங்களில் நல்ல குணம் பெற வாய்ப்புகள் உண்டு என்பதோடு மிகக்குறைந்த செலவி லேயே பூரண மிக்க நலம் பெறலாம்.

No comments:

Post a Comment