Thursday, 29 March 2012

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம் தீர‌

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதுமொழி அனைவரும் அறிந்ததே. நோய் எப்படி உண்டாகிறது?
உடல், மனம், உள்ளம் இம்மூன்றும் பாதிக்கப்படும்போது நோய்கள் தானாக வே மனிதனை ஒட்டிக்கொள்கின்றன. இவை சீராக செயல்பட்டால்தான் மனி தன் நோயின்றி வாழமுடியும்.
மனித உடலானது பல கோடி நரம்பு களாலும், தசைகளாலும், இரத்த நாளங் களாலும், எலும்புகளாலும் பின்னிப் பிணையப் பட்டதாகும். அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பிண் டம் என்ற இந்த மனித உடலிலும் அமைந்துள்ளது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
இப்படி இயற்கையால் உருவாக்கப்பட்ட மனித இனம் நோயின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கிறது.
குறிப்பாக முதுகுவலி, கீழ்த்தண்டு முதுகுவலி, கழுத்துவலி, கை கால் மூட்டு வலி போன்றவற்றால் அதிகம் பேர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக நீரிழிவு, இரத்த அழுத்த நோயாளிகள் இத்தகைய நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த வகையில் கழுத்துவலி என்ற தோள் பட்டை வலி நம்மில் அனேக பேரைப் பாதிக் கிறது.
“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதா னம்” என்பது சித்தர்களின் கூற்று. மனிதர்களின் இயக்கம் அனைத்திற் கும் முக்கிய காரணமாக செயல் படுவது சிரசு என்ற தலைப்பகுதி தான்.
பிரபஞ்ச சக்திகளை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடைபெறுகிறது. இந்த சிரசில் தான் மனிதனை இயக்கும் ஐம் புலன்களும் அமைந்துள்ளன.
இத்தகைய சிறப்புகள் கொண்ட தலைப்பகுதியை உடலோடு இணைக்கும் பாலம் தான் கழுத்துப்பகுதி. கழுத்துப்பகுதி வழியாகத் தான் உடலுக் கும் சிரசுக்கும் நரம்புகள், இரத்த நாள ங்கள் செல்கி ன்றன.
கழுத்தானது உடலின் முக்கிய உறுப்புகள் செயல்படும் பகுதி எனக் கூறலாம்.
கழுத்தின் மையப் பகுதியில் ஏழு தண்டு வட எலும்புகள் உள்ளன. இவற்றைச்சுற்றி தசைகளும், தசை நார்களும் இணைந்து உள்ளன. மேலும் கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம் புகள் வெ ளிவருகின்றன.
இப்படி உடலுக்கும் சிரசிற்கும் பாலமாக இருக்கும் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய அன்றாட செயல்கள் அனைத்தும் கடினமாகிவிடுகின்றன.
இது பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே ஏற்படுகி றது. இந்த எலும்பு இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical Spondylosis) என்று ஆங்கி ல மருத்துவ முறைகளில் கூறுகி ன்றனர்.
இதை வர்ம மருத்துவத்தில் தோள் பட்டை வாதம் என்று அழைக்கின்ற னர். இது குறிப்பாக அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர்களையே அதிகம் பாதிக் கிறது. உடல் உழைப்பின்மை, உட ற்பயிற்சியின்மை, சீரற்ற உணவு முறை, தூக்கமின்மை, இவற்றினாலும் உண்டாகிறது.
கழுத்துவலி வரக் காரணங்கள்
செரியாமை, மலச்சிக்கல், வாயுக்கோளாறுகள், குடல் சூடு, அஸ்த சூடு, மூலச்சூடு இவற்றினாலும்,அதீத சிந்தனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, கோபம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், அதிகமான நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்தல், தொலைக்காட்சி பார்த்தல், போன் றவற்றாலும் இத்தகைய கழுத்து வலி உருவாகிறது.
நேரங்கடந்த உணவு, அளவுக்கதிக மான உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, கோபம், பயம் எரிச்சல் உள் ள போது உண்பது, நீண்ட நாள் பத ப்படுத்தப்பட்ட உணவுகளை உண் பது, பித்தத்தை அதிகரிக்கும் உண வுகள், வாயுவை அதிகரிக்கும் உண வுகள் என பலவற்றை உண்பது போன்றவற்றாலும் கழுத்துவலி உண்டாகிறது.
இப்படிப்பட்ட உணவுகளை உண்பதால் குடலில் நீரானது அதிகம் சுரந்து செரியாமை ஏற்படுகிறது. பின் அது மலச்சிக்கலாக மாறுகி றது. இதனால் குடலில் அபான வாயு சீற்றம் கொண்டு குடல் நீரை மேல்நோக்கித் தள்ளுகிறது.
இந்த குடல் நீர் ஆவியாகி சிரசை நோக்கி சென்று அங்கே தங்கு கிறது. பின்பு தலையின் பின் பகு தி நரம்புகள் வழியாக கீழ் இறங்கி கழுத்துப் பகுதிக்கு வரும்போது அங்கு தசைகளையும் நரம்புக ளையும் சுற்றிக் கோர்த்துக் கொ ள்கிறது.
பின்பு அது பசைத் தன்மையடை ந்து பந்துபோல் கழுத்து தசை எலும்புகளையும், நரம்புகளையும் இறுகச் செய்கிறது. இதனால் கழுத்துப்பகுதி திரும்ப முடியாமல் போகிறது. மேலும் அங்கு கைகளின் நரம்புகள் ஆரம்பிப்பதால் அவைகளும் தோள் பட்டை பாகங்களும் இறுகி வலியை உண்டா க்குகிறது.
உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியா கி மேல் சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீரும் ஆவியாக மாறி சிரசை அடையும்போது அவை நீராக மாறி கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இது அவரவர் உடற்கூறுகளுக்குத் தகுந்த வாறு பாதிப்புகளை உண்டு பண்ணு கிறது.
குறி குணங்கள்
தலைவலி, மூக்கில் நீர்வடிதல், மண் டைக்குத்து, பின் கழுத்துப் பகுதியில் பிடிப்பு போன்றவை உண்டாகும். குனி ந்து நிமிரும்போது தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன் றச்செய்யும். உடல் அதிர்ந்து நரம்புகள் இறுகும். சிலருக்கு எழுந்து நடக்கும்போது தலை சுற்றல் மயக்கம் உண்டாகும்.
கழுத்துப் பகுதியில் கைகளின் நரம்புகள், எலும்புகள் ஆரம்பிப்பதா ல் கைகள் மரத்துப் போகும். சுண்டு விரல் பகுதிகள் செயலிழந்து காணப்படும். மன எரிச்சல் உண் டாகும். எதிலும் விருப்பம் தோ ன்றாது. அதிக கோபம் உண்டாகு ம், தூக்கமின்மை ஏற்படும். கண் எரிச்சல் உண்டாகும். அதிக நேர ம் படிக்கும்போது கழுத்துப் பகு தியில் வலி உண்டாகும். எழுது ம்போது கை விரல்களில் வலி ஏற்படும்.
கழுத்துப் பகுதி தடித்துக் காணப் படும். மேலும் கழுத்து வலியானது உடற்கூறுகளுக்கு தகுந்தவாறு அறிகுறிகள் தென்படும். வாத உடற்கூறு கொண்டவர்களுக்கு கழுத் து இறுகி திரும்ப முடியாத நிலை உண்டாகும்.
பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் தலை சுற் றல் ஏற்படும்.
கப உடற்கூறு கொண்டவர்களுக்கு கழுத்துப் பகுதி தடித்து உப்புநீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாகத் தோன்றும். மேலும், உடற்கூறுகளுக்குத் தகுந்தவா று, ஒருசிலருக்கு ஒற்றைத் தலைவலியை உருவாக்கும்.
இதே நீர், தலையில் (சிரசில்) உள்ள தனஞ்செயனில் நின்று கொண்டு, சித்த பிரம்மையை ஏற்படுத்தும். இதே நீர், மூக்கில் நீர்வடியச் செய்து அதுவே சை னஸ் ஆக மாறிவிடும்.
இதே நீர் அதிக பித்த நீருடன் கலந்துவிடுமானால், பித்த வாதமாக மாறி ரத்த அழுத்தத்தை உண்டுபண்ணுகிறது.
பொதுவாக எந்த உடற்கூறு கொண்டவர்களும் தோள்பட்டை வலி உண்டானால் அது கழுத்துப்பகுதியில் அதிக வியர்வையை உண் டாக்கும். ஒரு சிலருக்கு கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழ் இறங்கி தோள்பட்டைப் பகுதியில் அதிகமான வலியை ஏற்படுத்தும்.
சில சமயங்களில் இது நெஞ்சுவலி என நினைக்கத் தோன்றும். நெஞ்சு வலிக்கும், தோள்பட்டை வலிக்கு ம் உள்ள வித்தியாசத்தை கண்ட றிவது அவ்வளவு சுலபமல்ல. இந் த கழுத்து வலியானது நாளடைவி ல் தலைப் பகுதியான சிரசை ஆட ச் செய்துவிடும்.
கழுத்து வலியைப் போக்க
கழுத்து வலியை எக்ஸ்ரே மூலம் படம் பிடித்து பார்த்து உடனே கழுத்துப் பட்டையை அணிய பரிந் துரைக்கின்றனர் இன்றைய நவீன மருத்துவர்கள். ஆனால் இந்திய மருத்துவமுறையில் கழுத்து வலியை முழுமையாகப் போக்க சிற ந்த சிகிச்சை முறைகள் உள்ளன.
அகத்தியர் அருளிய வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் கொடுத்தும் கழுத்து, தோள்பட்டைப் பகுதி யில் மூலிகை தைலங் கள் தடவி சீராக கழுத் தை வர்ம முறையில் நீவி விட்டு வந்தால் கழுத்துப் பகுதியில் உ ள்ள எலும்புகளைச் சுற் றியுள்ள பசைத் தன் மை இளகி சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். நாளடைவில் வலி நீங்குவதுடன் மேற்கண்ட குறிகுணங்களும் மாறும்.
இதுபோல் சித்தா, ஆயுர்வேத முறைகளிலும் முழுமையாக கழுத் து வலியை குணப்படுத்தலாம்.
கழுத்து வலி வராமல் தடுக்க:
இன்றும் கிராமங்களில் பெண்கள் தண்ணீரை தலையில் சுமந்து செல் கின்றனர். மூட்டைகளையும் சுமக் கின்றனர். 100 கிலோ அளவு எடை யைத்தாங்கும் கழுத்து. எந்தப் பொ ருளும் தூக்காதவர்களுக்கு தலை யைத் தாங்கமுடியாமல் போவதற் கு காரணம் உணவு முறை மாறுபா டும், முறையான உடல் உழைப்பும் இல்லாததே.
உணவு முறை:
நேரம் கடந்த உணவு, அதீத உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, நொறுக்குத்தீனி, மது, போதைப்பொருள், நீண்ட பட்டினி, வாயு பதார்த்தங்கள் உண்பது. அல்லது அதிக குளிர்ச்சியூட்டும் உணவு களை உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கலைப் போக்குவதுடன், தினமும் மதிய வேளையில் ஒரு கீரையை சேர்த்து சாப்பிட வேண்டும். இரவில் கீரை, தயிர் இவற் றை தவிர்க்க வேண்டும்.
இரவுநேர உணவுமென்மை யானதாவும், எளிதில் செரி மானம் ஆகக்கூடியதாக வும் இருக்கவேண்டும். பாதி வயிற்றுக்கு சாப்பிடு வது நல்லது. மேலும் படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும்.
குறிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. இரவு முழுவதும் காலியாக உள்ள வயிற்றில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தா ல் வயிற்றில் வாய்வு தொல்லை உண்டாகும். இதனால் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
பிராய்லர் கோழி, முட்டை, பதப் படுத்தப்பட்ட உணவு, ஊறுகாய் இவற்றை தவிர்ப்பது நல்லது.
உடல் உழைப்பு
உடல் உழைப்பு என்பது பலருக் கு இல்லாமல் போய்விட்டது. காரணம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களே அதிகம் உள்ளனர். இவர்கள் தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி யோகா, உடற்பயிற்சி செய்வது.
யோகா ஆசிரியரை அணுகி முறைப்படி யோகா கற்றுக் கொள்வது நல்லது. மன உளைச்சல், மன எரிச்சல், மனஅழுத்தம், டென்ஷன் இவைகளை குறைக்க தியானம் செய்யலாம்.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது நேரம் எழுந்து நடந்து பின் வேலை செய்யலாம். குறிப்பாக கணினி மு ன் வேலை செய்பவர்கள் சிறிது ஓய் வெடுத்து பின் வேலை செய்வது நல்லது.
படுக்கை
தலையணை அதிக உயரமில்லாம ல் இருக்க வேண்டும். பள்ளம் மேடு இல்லாத படுக்கையிலேயே தூங்க வேண்டும். அதிக குளிர் காற்று உட லில் படும்படியாகத் தூங்கக்கூடாது.
மருத்துவ முறை
கழுத்து வலிக்கு கழுத்துப்பட்டை, அறுவை சிகிச்சை முறை மட்டு ம்தான் சிகிச்சைமுறை என முன்பு பலர் நினைத்தனர். ஆனால் அறுவை சிகிச்சையில்லாமல் வர்ம பரி கார முறையில் இரண்டு வாரங்கள் தொடர்ந்து உள்மருந்தும், தைலம் தட வி ஒற்றடம் கொடுத்தும் தோள் பட் டை வர்மத்தை , (தோள்பட்டை வாத ம்)இயக்கி இறுகிப்போன கழுத்து பகுதி களை சரிசெய்து வலியைப் போக்கி இரத்த ஓட்டத்தை சீர்படுத்தலாம். இது வே கழுத்து வலிக்கு சிறந்த சிகிச்சை முறையாகும்.
மேலும் வர்ம மருத்துவத்தில் வயிற் று உபாதைகளுக்கு மருந்து கொடுத்து மீண்டும் கழுத்தில் நீர் கோர்த்துக் கொ ள்ளாமல் பாதுகாக்கலாம்.
வர்ம சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை மற்றும் கழுத்து பட் டை அணியாமல் கழுத்து வலியை பூரண குணமடைய செய்யலா ம்.
மேற்கண்ட முறைகளை முறையாகக் கடைப்பிடித்து கழுத்து வலி யிலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment