Saturday, 28 January 2012

தாம்பத்தியம் கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள‍ முடியும் – நவீன அறிவியலின் அற்புத சாதனை


இந்த நூற்றாண்டிலேயே அறிவியலில் பல அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. மனிதனைக் குளோனிங் முறையில் உரு வாக்கி விடுவார்கள். அதாவ து ஒரு மனித உடலிலிரு ந்து மற்றொரு மனிதனை உரு வாக்கிட முடியும்.
 ஆண், பெண் உடலுறவு கொண்டுதான் குழந்தையை உருவாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உடலுறவு என்பது உடல் சுகத் திற்காகவே தவிர சந்ததி உற்பத்திக்கு அல்ல என்ற நிலை உருவாகி விடும். உடலுறவினால் கிடைக்கும் சுகத்திற்காக அதை விட்டு விடவும் மாட்டார்கள்.
 வசதி படைத்தவர்கள் தம்மையே நகல் எடுத்த மாதிரி பிள்ளைக ளைப் பெற் றுக் கொள்ள இயலும். ஜெனடிக் குறை பேதங்கள் இன் றிக் குழந்தை களை உருவாக்கிக் கொள்வார்கள்; தம் உட லில் உள்ள மரபியல் (ஜீன்) குறைக ளையும் நீக்கிக் கொள்வார்கள்.
 1978-லூயி பிரவுன் என்ற பெண் குழந்தை சோதனைக் குழாயில் கருவுற்று உருவானது முதல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கட்டி லுக்குப் பதிலாகப் புட்டிகளில்தான் கருவுற்று உருவாகியிருக்கி றார்கள். 1960இல் கருத்தடைச் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் பெண்களுக்கு உடலுறவு வேறாகவும், பிள்ளைப்பேறு வே றாகவும் பிரிந்துவிட்டது.
 சில வகை ஓணான்கள், மீன்கள், மரப் பேன்கள், ரோடிஃபர் என்ற நுண்ணுயிரி கள் உடலுறவு இல்லாமலேயே சந்ததி களை உருவாக் குகின்றன. தாவரங்கள் திசு மாற்றம் செய்யப்படு வதைப் போல மனிதனின் மரபணு மாற்றம் மூலம் மனிதனை உருவாக்கும் நிலை வந்து விடும்.
அப்படிப்பட்ட நிலையில் ஜீன் மருத்துவமும் கலந்து வழுக்கை, நரை, வியாதி, கண் மற்ற உடலுறுப்புக் குறைபாடுகள் எதுவுமில் லாத குழந்தை களை உரு வாக்குவது எளிதாகி விடும். ஆர்கானிக் என்ஸானஸ்மெ ன்ட் புரோட்டோகால் இப்படி ஒரு விளம்பரம் 2020–களி ல் வெளியிடப்படும்.
 கணினி தகவல் தளத்தில் புகுந்து மருத்துவர் ஜென்னி டம் அனுமதி பெற்ற 100 விழுக்காடு குறையற்ற குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள பெண் கள் வரிசையில் நிற்பார்கள். இதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, புற்றுநோய், எய்ட்ஸ், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்து இயற்கையாகவே உடல் எதிர்ப்புடைய ஜீன்க ளைக் குழந்தைகளின் உடலில் ஏற்றித்தரும் ஒரு வாய்ப்புதான் இந்த ஆர்கானிக் என்ஹேன் ஸ்மென்ட் புராட் டோகால்.
 இந்தப் புதிய குழந்தைப் பேறு மருத்துவம், குழந்தையை உருவாக்குவதற்கு அல்ல. ஏற் கெனவே உருவான கருவிற் குள் மேற்கூறிய நோய் எதிர் ப்பு ஜீன்களைச் செலுத்துவது தான். இந்த நூற்றாண்டின் இறுதியிலேயே மனித ஜீனோம் திட்டம் (ஹ்யூமன் ஜீனோம் புரா ஜெக்ட்) நிறைவேறி விடும்.
மனிதனின் அனைத்து ஜீன் களும் வரிசைப்படுத்தி பதிவு செய்யப் படும். எல்லா ஜீன்களின் குறைகளும் நீக்கப்படும். இயற்கையிலே யே நோய் எதிர்ப்புடைய மனிதர்களிடமிருந்து ஜீன்கள் சேகரிக் கப்பட்டு குறைவற்ற மிகச் சிறந்த ஜீனோம் உருவாக்கப்படும்.

No comments:

Post a Comment