Posted on January 23, 2012 by Muthukumar
பதற்றம்!
ஆங்கிலத்தில் இதனை Anxiety என்று குறிப்பிடுகின்றார் கள். அடுத்து என்ன
நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம். இது ஒரு மனித பலவீனம். இதனை நாம்
வென்றாக வேண்டும்.
தனி
மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம்
ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும்
போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது.
ஏனெனில் – பதற்றம் – நமது செயல் திறனை பாதிக்கும் (performance).
பதற்றம் – நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் (interferes decision making).
பதற்றம் – எந்த ஒன்றிலும் நமது கவனத்தைக் குவித்திட இயலாமல் தடுக்கும் (shatters concentration).
எந்த
ஒரு செயலையும் நாம் அழகே செய்து முடித்திட நிதானம் தேவை. அவசரம் கூடாது.
பதற்றம் எந்த ஒரு காரியத்தையும் கெடுத்து விடும். பதறாத காரியம் சிதறாது
என்பது முதுமொழி.
சாதாரண சூழலில் யாரும் பதற்றம் அடைய மாட்டார்கள் தான். ஆனால் சில அழுத்தம் தரும் சூழல்கள் (stressful situations) பதற்றத் தைக் கொண்டு வரலாம். அந்த சமயங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கி றோம் என்பதே நமது ஆளுமையை (personality) நிர்ணயிக் கும்.
இதோ பதற்றம் வரவழை க்கும் சூழல்களில் சில:
மாணவர்கள் தேர்வு எழு தும் முன்பு.
ஏதேனும் அவசியமான பொருள் ஒன்று அவசியமான நேரத்தில் தொலைந்து விட்டால்.
அவசிய வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது Traffic jam ஏற்பட்டால்.
புதிதாக ஒரு இடத்துக்குச் சென்றிருக்கும் போது.
முற்றிலும் புதிதான மனிதர்கள் (strangers) இருக்கும் இடத்தில்.
சொற்பொழிவுக்கு முன்னர்.
நேர்முகத் தேர்வுக்கு முன்னர் – நேர் முகத் தேர்வின் போது.
சரி, இப்படிப்பட்ட தருணங்களில் பதற்றம் தவிர்க்க என்ன வழி?
ஆசுவாசப் படுத்துதல் – Relaxation!
நன்றாக மூச்சை இழுத்து விடுதல்.
நகைச்சுவை உணர்வை வரவழைத்துக் கொள்ளுதல்.
“நல்லதே நடக்கும்” என்ற சிந்தனையை வலிந்து நினைத்தல்.
எது நம் கைகளில் இல்லையோ அது குறித்து கவலைப் படுவதைத் தவிர்த்தல்.
எது நம் கைகளில் உள்ளதோ அது குறித்து ஆகக் கூடிய காரியத்தில் இறங்குதல்.
No comments:
Post a Comment