Posted On Jan 28,2012,By Muthukumar |

இந்தியாவில்
சமையலுக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும், ஏலம், கிராம்பு, பூண்டு,
வெங்காயம், போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுக்கு உடலுக்கு ஊட்டம்
தருவதோடு உற்சாகத்தையும் தரும் என்றும் பாலுணர்வை தூண்டுவதில் முக்கிய
பங்கு வகிக்கின்றன என்றும் ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்
பாலுணர்வு அதிகம்
25
லிருந்து 52 வயது வரை உடைய 60 ஆரோக்கியமான ஆண்கள் ஆய்விற்கு
உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆறுவாரங்களுக்கு வாரம் இரண்டு முறை மூலிகை
உணவுகள் தரப்பட்டன. மூலிகைகளை உண்டவர்களின் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்
அளவு அதிகபட்சமாக 28 சதவிகிதம் அதாவது 16.1 லிருந்து 20.6 சதவிகிதமாக
உயர்ந்திருந்தது.
இந்திய
சமையலில் பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்கள், மூலிகைகள் போன்றவை
மனிதர்களின் பாலுணர்வை தூண்டுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும்
ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவை 'டெய்லி மெயில்' பத்திரிக்கை
வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment