Saturday, 28 January 2012

காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டது – நாசா விஞ்ஞானி எச்சரிக்கை


சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொ ண்டிருப்பதாகவும், இது செயற்கை கோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் எனவும், இதன்மூலம் கணணி, கைபேசி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்கு தல் அச்சம் அதிகம் இருந்தது.
இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல் லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமி யின் காந்த மண்டலத்திற்குள் வந் துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.
பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நோர் வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம் -பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது. இதை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
பூமியின் வடமுனையில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மற் றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இது போன்ற ஒளிவெள்ளம் தோன் றுவது வழக்கம். என்றாலும் இந்த முறை சூரிய காந்த புயலால் ஜன வரி மாதத்தில் இந்த ஒளி வெள்ளக்காட்சி தோன்றிய தாக தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண் டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சூரிய காந்த புயல் கதிர் வீச்சால் பூமியின் வடமுனையில் தகவல் தொடர்பு பாதிக் கப்படலாம் என கருதி அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறு வனம் ஹாங்காங், ஷாங்காய், சியோல் ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானங்களை தென் பகுதி வழியாக வரும்படி பாதைகளை மாற்றியுள்ளது.
 

No comments:

Post a Comment