Posted on October 24, 2014 by Muthukumar
ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம்
பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால்
உடல் நிலை பாதிக்கப்படும் என்பது தான் அது. சித்த மருத்துவத்தில் அது நியாயமாக்கப்பட்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
ஆனால் ஆங்கில மருத்துவம் அதை அப்படியே நிராகரிக்கிறது. உடலுறவில் ஈடுபடுவதற்கும், உடல் நலம் கெட்டுப்போவதற்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது என அது ஆணித்தரமாகக் கூறு கிறது. சரி…
உடலுறவில் ஈடுபடுவதால் நிச்சயமாகப் உடல் பலவீனம் அடைந்து விட மாட்டோம். நாம் வெளியேற்றும் விந்தில் 15 அல்லது 20 கலோ ரிகள் மட்டுமே ஆகும். இதில் கொஞ்சம் புரதம், கொஞ்சம் வைட்ட மின், கொஞ்சம் தாது உப்புக்கள் கலந்துள்ளன நாம் சிறுநீர் கழிக்கு ம் போது வெளியேறும் புரதம், வைட்டமின் சமாச்சாரங்களை விட இது மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் 10 அடி தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவாகுமோ அவ்வளவு சக்தி தான் நாம் ஒரு முறை வெளி யேற்றும் விந்தில் உள்ள சக்தி.
ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம், விந்தை வெளியேற்றாமல் சேமித்து வைத்தால் தெய்வீகத் தன்மை அடைய முடியும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் வெறும் கட்டுக் கதைகள். உடலுறவு ஒரு சந்தோஷமான அனுபவம். நிறைவு தரும் நிகழ்வு. இதில் பலவீனம் அடைந்து விடுவோமாம் என்ற பயம் வேண் டாம்.
No comments:
Post a Comment