Posted On March 8,2012,By Muthukumar
ஏழை, செல்வந்தன் என்ற வித்தி யாசம் இல்லாமல் இன்று எல்லோ ரும் செல்போன் வைத்திருக்கி றார்கள் சிலர் சதா நேரமும் செல் போனில் பேசிக் கொண்டிருப்ப தைப் பார்த்தால் அவர்கள் கைகள் காதுகளில் ஒட்டிக் கொண்டு விட் டதோ என்று சந்தேகப்படும் அள வுக்கு இருக்கும். அந்த அளவு செல் போன் நம் தினசரி வாழ்க் கையில் நம்முடன் இணைந்த அம்சமாகி விட்டது.
இந்த நிலையில் செல்போன் சம்பந்தமாக உலகமெங்கும் நடந்து வரும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நம்மை திடுக்கிட வைக்கின்றனஎன்றே சொல்ல வேண்டும். அந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொ ல்கின்றன என்று பார்ப்போம்:
ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நரம்பியல் பேராசிரிய ராக இருக்கும் டாக்டர் ஓல்லெ ஜோ ஜன்சன் (Dr. Olle Johansson) செல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் குறி த்த ஆராய் ச்சிகளை பல ஆண்டுகளா க செய்து வருகிறார். அதிகமாக செல் போனை உபயோகிப்பவர்கள் மூளை சம்பந்தமான நோய்கள், மர பணுக்க ளுக்கு சேதாரம், உறக்க சம்பந்தமான பிரச்சனைகள், மனதை ஒரு மைப்படுத்துதல் முடியாமை போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார் கள் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்.
கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா மருத்துவக் கல்விநிலையத்தைச் சேர்ந்த உல கப் புகழ்பெற்ற மூளை விஞ் ஞானியான ரோஸ் அடே (Ross Adey) செல்போனில் இருந்து வெளிப்படும் நுண் ணிய அலைகள் கேன்சர் உட் பட பல நோய்களை உருவா க்க வல்லது என்று கூறுகி றார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) 13 நாடுகளில் நடத்திய ஒரு ஆராய்ச்சி நீண்ட காலம் அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர் களுக்கு மூளைக்கட்டி நோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த லென்னார்ட் ஹார்டெல் (Lennart Hardell) என்ற பேராசிரியர் கதிரியக்க ஆரா ய்ச்சி தொண்டு நிறுவனம் லண்ட ன் ராயல் சொசைட்டியில் ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் 20 வயதுக்கு முன்பே செல்போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு நரம்பு மண் டலத்தைத் தாக்கும் ஒருவித கான்சர் நோய் வர மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் டென்மார்க் நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் கருத்தரித்த பெண்கள் அதிகமாக செல்போன் உப யோகிப்பது பிறக்கும் குழந் தைகளின் மரபணுக்களில் கோளாறை ஏற்படுத்துகி றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.
பல்வேறு நாடுகளில் இப்படி செல்போன் உபயோகப்படுத் தும் போது வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் உருவா கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறப்பட்டதை மறுத்து அமெரிக்கா வைச் சேர்ந்த செல்போன் கம்பெனிகள் 28 மில்லியன் டாலர்கள் செலவில் டாக்டர் ஜார்ஜ் கார் லோ (Dr George Carlo) என்ற விஞ்ஞானியிடம் முழுமை யான ஒரு ஆராய்ச்சி செய் யுமாறு பணித் தனர்.
துவக்கத்தில் அந்த விஞ்ஞா னியும் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறி னாலும் தொடர்ந்த ஆராய்ச் சிகளில் செல்போனில் வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய் கள் வர வாய்ப்பு இருப் பதை ஒத்துக் கொண்டு அதைக் குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். தங்களுக்கு எதிராக அவர் வெளியிட்டகருத்துகளை அந்த கம்பெனிகள் எதிர் த்து அவர் மீது அவதூறுப் பிரசாரத்தை மேற்கொண்டாலும் அவர்களால் ஏற் பாடு செய்யப்பட்ட ஒரு விஞ்ஞானி யே வேறுபட்ட கருத்தை வெளியிட்ட து ஒரு ஆணித்தரமான உண் மையாக பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் செல்போன் இன்றைய மனித னின் அத்தியாவசியத் தேவையாகிவி ட்ட சூழ்நிலையில் அதை அறவே ஒது க்கி விட முடியாத நிலையில் அனை வரும் இருக்கிறோம். அதே நேரத்தில் இந்த நோய்கள் குறித்த ஆராய்ச்சிக ளும் நம்மை பயமுறுத்து வதாக இருப்பதையும் நாம் மறுக்க முடி யாது. எனவே செல்போனைப் பயன்படுத்தவும் வேண்டும், நோய்க ளால் பாதிக்கப்படவும் கூடாது என்று நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள்:
செல்போனில் மணிக்கணக்கில் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிரு ங்கள். உங்கள் பேச்சு சுருக்கமாக வும், தேவையின் பொருட்டாகவு மே இருக்குமாறு பார்த்துக் கொள் ளுங்கள். நேரில் பார்க்கும் போது பேசுவது போல எல்லா முக்கிய மல்லாத விஷயங்களையும் செல் போனில் பேசுவதைத் தவிர்க்கவு ம். குறைவான செலவுதான் ஆகிற து என்ற எண்ணத்தில் அதிகமாக நீண்ட காலம் பயன்படுத்தினால் பல மடங்கு செலவை மருத்துவத்திற்கு பிற்காலத்தில் செய்ய நேரிடும். அளவாகவும், சுருக்கமாகவும், தேவையுள்ள சமயத்தில் மட்டும் செல்போனைப் பயன்படுத்து வதே மிகுந்த பாதுகாப்பும் பயன்பா டும்.
குழந்தைகள் மற்றும் சிறு வயதினரை செல்போனை மிகுந்த அவசியமல்லா மல் உபயோகப் படுத்த விடாதீர்கள். அவர்கள் மண்டை ஓடு லேசாக இருப் பதால் அந்தக் கதிரியக்க பாதிப்புகள் அவர்கள் மூளையை ஆழமாக பாதிக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் கருத் து. எனவே அவர்கள் கையில் செல் போனைத் தராதீர்கள்.
செல்போனை பேண்ட் பாக்கெட்களிலோ, பெல்டுகளிலோ வைத்து க் கொள்ளும் இளைஞர்களின் விந்து எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மனித உடலில் கீழ் பகுதி மேல் பகுதியை விட அதிகமாக செல்போனின் கதிரியக்கத்தால் பாதிக்கப் படுவதாகக் கூறுகிறார்கள். எனவே அணைத்து வைக்காத செல்போனை அந் த இடங்களில் இளைஞர்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
சிக்னல் குறைவாக இருக்கும் போது பேசு வது வலிமையாக கதிரிய க்கம் வெளிப் படுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. என வே அந்த சமயங்களில் பேசுவதைத் தவி ருங்கள்.
மூடிய வாகனங்களுக்கு உள்ளே இருந்து பேசும் போதும் இணைப் பை ஏற்படுத்த செல்போன்கள் அதிக சக்தி யை செலவிட வேண்டி யிருக்கும் என்பதால் கூடுமான வரை அத னைத் தவிர்ப்பது நல்லது.
நம் உடல் செல்போனின் கதிரியக்க சக்தி யை எந்த அளவு உள்ளி ழுத்துக் கொள்கி றது என்பதை அளவிட SAR என்ற அள வீடு செல்போன்களில் பயன்படுத்தப்படு கிறது. புதிய செல்போன்களின் இயக் கக் குறிப்பேடுகளிலும், கம்பெனி இணைய தளங்களில் அந்த வகை செல்போன் கரு வி குறித்த குறிப்புகளிலும் அந்த SAR அளவீட்டை இப்போது தர ஆரம்பித்திருக் கிறார்கள். குறைவான SAR அளவீடு உள் ள செல்போன் சாதனங்களை வாங்கி பயன் படுத்துங்கள்.
காது கேட்கும் சாதனம் அணிந்திருப்பவர் கள் செல்போனை பயன்படுத்துவது நல்ல தல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதுபோல மருத் துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு அறையினுள்ளும் செல் போன் உபயோகிப்பது அங்குள்ள நோயா ளிகளின் உடல்நிலையை அதிகம் பாதிக் கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கர்ப்பவதி களும் செல்போனை கூடுமான அளவு பயன் படுத்தாமல் இருப்பது நல்ல து.
முடிந்த சமயங்களில் எல்லாம் தரை வழி தொலைபேசியைப் பயன் படுத்துவதற்கு முன்னுரிமை தாருங்கள்.
அளவான, குறைந்த, புத்திசாலித்தனமா ன பயன்பாட்டால் மட்டுமே நாம் செல் போன் மூலம் நோய்களை நீக்கிய உண் மையான பயனை அடைய முடியும் என்ப தை நாம் என்றும் நினைவில் வைத்திரு ப்பதுடன் இந்த உண்மையை நாம் அக்கறை வைத்திருக்கும் நபர் களுக்கும் அறிவுறுத்துவோமாக!
No comments:
Post a Comment