Posted on March 8, 2012 by muthukumar
கண் எரிச்சலைப் போக்க
கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை
ஏற்படுத்தும். இத னைத் தவிர்க்க தினமும் அதி காலையில் குளித்து விடு வது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத் துணர்ச்சி தருவதோடு உடலு க்கு மேலும் அழகு சேர்க்கும்.
தலையில் தேங்காய் எண் ணெய் தேய்த்து விரல் நுனி யால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளி ர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அத னை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்
றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்ட த்தை அதிகரித்து சோர்வை போக்கும்.
புத்துணர்ச்சி பெற
வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோ ர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ் சை நனைத்துக் கண்களை மூடிக்கொ ண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்ப டியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்க ள் புது ஒளி பெற்றுவிடும்.
வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணி யில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்க ளை மூடிக்கொண்டுமேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத் துணர்ச்சி பெறும்.
கருவளையம் போக்க
வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக்
கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடி யாதது. கறிவேப்பிலை யை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத் து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசி னா ல் கருவளையம் மறைந்து விடும்.
கண்கள் குளிர்ச்சி பெற
உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல் லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உட லும் குளிர்ச்சிபெறும்.
உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல் லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உட லும் குளிர்ச்சிபெறும்.
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன் றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கி னால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
வசீகர கண்கள்
ப்ளீச் வேண்டாமே
உங்கள் கண்கள் எடுப்பாக தெரியவேண்டுமெனில், டிரஸ்சிற்கு
ஏற் ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம். பெரிய கண்கள் உடையவர்கள் டார் க் கலரில் ஐ ஷேடோ போட் டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன் படுத்தும்போது, சிறிய கண் கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக் கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த்தியாகவும், சிறிய கண்கள் உடை யவர்கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.
No comments:
Post a Comment