Sunday, 8 July 2012

புற்றணுக்களை கண்டறியும் நுண்ணிய வேகத்தடை கருவி!

Posted On July 8,2012,By Muthukumar
திருடர்களைப் பிடிக்கும் போலீஸ்காரர்களின் நிலைமை எப்படியோ தெரியாது. ஆனால் புற்றணுக்கள் தோன்றிய சிறிது காலத்திலேயே அவற்றை கண்டுபிடித்து தரும் மருத்துவக் கருவிகளைக் உருவாக்கும் விஞ்ஞானிகளின் பாடு திண்டாட்டம்தான். ஏனென்றால் புற்றணுக்களை தொடக்கத்திலேயே கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!
உதாரணமாக, லட்சக்கணக்கான ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு மத்தியில் நல்ல பிள்ளை போல் சுற்றித்திரியும் பண்புடையவை புற்றணுக்கள். அவற்றை இனம் கண்டு அழிப்பதற்கு புத்தி சாதுர்யம் மட்டும் போதாது. ஆரோக்கியமான உயிரணுக்களை பாதிக்காத வண்ணம் புற்றணுக்களை அழிக்கும் லாவகமும் அவசியம்.
இந்த நோக்கத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு சோதனை கருவிகள் நம்மிடையே உண்டு என்றாலும், புற்றணுக்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து நோயாளிகளின் உயிரைக் காக்க மேலும் சக்திவாய்ந்த பரிசோதனைக் கருவிகள் அவசியப்படுகின்றன.
இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்ல வந்திருக்கிறது மிகவும் சக்திவாய்ந்த, ஒரு புதிய கருவி. `நுண்ணிய வேகத்தடை கருவி' என்றழைக்கப்படும் இந்த கருவியை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இரு பொறியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மைக்ரோ ப்ளூயிடிக் கருவி வகையைச் சேர்ந்த இந்த புதிய கருவி புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் நுண்ணிய பொருட்களை இனம் பிரித்து கொடுக்கக் கூடியது. சாலைகளில் உள்ள வேகத்தடையைப் போல, மைக்ரான் (ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பகுதி) அளவுள்ள வேகத்தடைகளைக் கொண்ட இந்த கருவி நுண்ணிய பொருட்களை அவற்றின் எடை, அளவு அல்லது இதர பண்புகளின் அடிப்படையில் பிரித்து கொடுக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேகத்தடை கருவியை கண்டுபிடித்துள்ள ஆய்வு மாணவர் ஜோர்க் பெர்னேட்டின் நோக்கம், தினசரி மருத்துவப் பரிசோதனைகளுக்கு உதவும் வகையில் ஓர் எளிமையான கருவியை உருவாக்குவதுதானாம்.
கோடிக்கணக்கிலான ஆரோக்கியமான ரத்த உயிரணுக்களுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டு உயிர் வாழும் தன்மையுடையவை சுழலும் புற்றணுக்கள். இவை ரத்த ஓட்டத்தின் மூலம் பிற பகுதிகளுக்கு பரவும் முன்னரே இவற்றை இனம் கண்டுபிடிப்பதன் மூலம் எண்ணற்ற மக்களின் உயிரைக் காக்க இந்த வேகத்தடை கருவி உதவும் என்கிறார் மாணவர் பெர்னேட்!
அது சரி, இந்த வேகத்தடை கருவியை வைத்துக் கொண்டு புற்றணுக்களை எப்படி இனம் கண்டு கொள்வது?
இந்த மைக்ரோ ப்ளூயிடிக் கருவியின் உள்ளே வெவ்வேறு உயரங்கள் கொண்ட வேகத்தடை போன்ற வடிவமுள்ள பொருட்கள் கோணலாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீது உயிரணுக்கள் மற்றும் இதர பொருட்கள் கலந்த திரவத்தை ஓடவிடும்போது இலகுவான பொருட்கள் போல கனமான பொருட்களால் இந்த வேகத்தடையை கடந்து செல்ல முடியாது.
வேகத்தடையை கடந்து செல்ல முடியாத அத்தகைய பொருட்கள் தங்கள் திசையை மாற்றிக்கொண்டு கோணலாக வைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் திசையிலேயே பயணிக்கத் தொடங்குகின்றன. இந்த நிகழ்வு தொடரத் தொடர, இறுதியில் வெவ்வேறு கனமுள்ள, அளவுள்ள பொருட்கள் வேவ்வேறு திசையில் செல்வதன் மூலம் சுலபமாக பிரிக்கப்படுகின்றன என்கிறார் பெர்னேட்.
இந்த கருவியிலுள்ள வேகத்தடையை கடந்து செல்ல முற்படும் பொருட்களின் வேகத்தை குறைக்க புவி ஈர்ப்பு விசை மட்டுமல்லாது வேறு யுக்திகளும் கையாளப்படுகின்றன. உதாரணமாக, மின்சார சக்தி அல்லது காந்த சக்தி உடைய பொருட்கள் மின்சாரம் அல்லது காந்த சக்தி செலுத்தப்பட்ட ஒரு சூழலில் வேகத்தடையை கடந்து செல்வது கடினம். இதனால், காந்த சக்தி செலுத்தப்பட்ட ஒரு கருவியில் காந்த மணிகளைக் கொண்டு புற்றணுக்களை கவர்ந்து பின்னர் அவற்றை இனம் பிரித்து விட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
மைக்ரோ மற்றும் நானோ அளவுள்ள நுண்ணிய பொருட்களை இனம் கண்டு பிரிக்கும் திறன் சோலார் சக்தி முதல் உயிர் பாதுகாப்பு வரையிலான பல துறைகள் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், இந்த வேகத்தடை கருவியின் உடனடிப் பயன் மருத்துவ பரிசோதனைக் கருவிகள் உருவாக்கத்தில்தான் இருக்கக்கூடும் என்கிறார் ஆய்வு மாணவர் பெர்னேட்.
மொத்த ரத்தத்தையும் அதன் ஒவ்வொரு உருப்படிகளாக சுலபமாக இனம் பிரித்து கொடுத்துவிடும் இந்த வேகத்தடை கருவி காப்புரிமைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் புற்றணுக்களை இனம் கண்டு பிரித்துணரக்கூடிய இதன் திறன் காரணமாக உலக மக்களின் உயிரைக் காக்கும் கருவியாக மாறி பயன்படவும் இந்த நுண்ணிய வேகத்தடை கருவி காத்துக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!!
1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது மனநிலையைப் பொறுத்ததே ஆகும்.
2. பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் ‘பெண்கள் உணர்ச்சிவசப்பட்டால் அழுவார் கள்’ என்று சொல்கின்றனர். உண் மையில் ஆண்களே உணர்ச்சி வய ப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்த மாட்டார் கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ் டம் என்றால் அழுது வெளிப்படு த்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.
3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆ னால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன் றவற்றை வைத்து துன்புறுத் துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவ ர்களது ஒரு வகையான அன் பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செ ய்வது ஒரு அன்பின் காரண மாக என்று நிறைய பெண்க ளுக்கு தெரியாது.
4. நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனைவருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப்போதும் அந்த சிந்தனையிலேயே இரு ப்பர். ஆனால் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்ப தில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண் டுகிறது. இது நிறைய ஆராய்ச்சி யில் கூட நிரூபிக்கப்பட் டுள்ளது.
5. ஆண்களுக்கு வாயாடுவது என்ப து பிடிக்காது என்று நிறைய பெண் கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வ ளவாக வாயாடவில்லை என்றால் கூட ஓரளவாவது வாயாடுவர். அதி லும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப் பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.