Tuesday, 29 October 2013

அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்க . . .

அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்க . . .

ற்கால ஃபேஷன் ஆடைகள் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆகவே வருகின்றன. அக்குள் கருமையாக இருப்பவர் களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இவ் வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக் கும் சக்தி வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது. அந்தவகையில், அக்குள் கரு மையை இயற்கை முறையில் போக்குவத ற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
01. எலுமிச்சை
அக்குளில் உள்ள கருமையைப் போக்குவத ற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெ னில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்கு ளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர் நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
02. மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாக வே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்கு ளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்க லாம்.
03. தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்துவந்தால், நல்ல பலன் கிடைக் கும்.
04. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து 1/2 கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வை த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டு ம். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல வித்தியாசம் தெரியும்.
05. சந்தனப்பவுடர், பால்

சந்தனப் பவுடரை பால் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கல ந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.
06. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அத னை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வை த்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தின மும் செய்துவந்தால், அக்குளில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகி விடும்.
07. கடலைமா, பால், மஞ்சள்

கடலைமா, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.

08. உருளைக்கிழங்கு
இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக் கிழங்கை அரைத்து, அதனை தின மும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய் து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்.

ஆஸ்துமா – ஏற்படுவதற்கான‌ காரணங்களும் தீர்வுகளும்!


உலகத்தில் மனிதன் தோன்றியது முதல் ஆஸ்துமாவும் உள்ளது. ஒருவருக்கு தொடர்ந்து சளிப் பிடித்தால் அவர்களுக்கு 50% முதல் 70% வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி, அதனை தொடர்ந்து தும்மலும், இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி, இருமல் தாக்கி, நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாயை கிருமிகள் தாக்குகிறது.
இதனால் மூச்சுக் குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி பாதிப்பு அடைகிறது.அந்த இடத்தில் வீக்கமும் உண்டாகிறது.இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் தாக்குவதால் மூச்சுக் குழாய் கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது.
இதன் காரணமாக சுத்த காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளியே வரவும் முடியாமல் தடங்கல் ஏற்படுகிறது.காற்று, மூச்சுகுழாயின் உட்புறத்தில் நீரை கிழித்துக் கொ ண்டு போவதும், கிழித்துக் கொண்டு வெளி யே வரும்போதுதான் ‘வீசிங்’ என்கிற மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டா ல் ஆஸ்துமாவிலிருந்து தப்பலாம். உடலு க்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை தவிர்ப்பது மூலம் ஆஸ்துமாவை தவிர்க்க லாம்.
உதாரணமாக குளிர்ச்சி அளிக்கும் பழங் கள், தயிர் போன்ற உணவு பொருட்களையு ம், செல்ல பிராணிகளை வளர்ப்பதை அல் லது கொஞ்சுவதை ஆஸ்துமா நோயாளி கள் தவிர்க்க வேண்டும். தூசு பறக்கும் ஆலைகளில் வேலை பார்ப்பவர் களுக்கும், தூசி மற்றும் வாகனப் புகை பறக்கும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் மூக்கை மூடாமல் அதிகமாக பயணம் செய் பவர்களை ஆஸ்துமா தாக்கும் அபாயம் உள்ளது.
ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம். ஆஸ்துமா முற்றிவிட்டால், பிராண வாயு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உயி ருக்கே கூட ஆபத்தாக முடியும். எனவே, ஆஸ்துமாவை ஆரம்பத்திலே யே கட்டுப்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம்.
சிகரெட் பிடிப்பதால் ஆஸ்துமா வர அதிக வாய்ப்புள்ளது.புகை பிடிப்ப தால் மட்டும் உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 5 கோடி பேர் இறக்கின்ற னர்.
உலகம் முழுக்க 23.5 கோடி பேர் ஆஸ்து மாவால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். இந்தியாவில் சுமார் 2 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். (இந்தியாவில் 5 லட்சம் பேர் இறக்கிறார்கள்.) ஆஸ்துமாவினால் இறப்ப வர்களில் சுமார் 80% பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானப்பிரிவினராக இருக்கிறார்கள்.
இது சிறுவர்களிடம் அதிகம் காணபடுகிற து.மற்றவர்கள் விடும் புகையை சுவாசிப்ப வர்களுக்கும் இந்த நோய் வருகிறது. இந்தி யாவில் 10 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது.இதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதில்லை. எனவே, ஆண்டுக்கு ஒரு முறையா வது நுரையீரல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 
ஆஸ்துமா நோய் வராமல் இருக்க, குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தி ல் இருந்து 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொ டுக்க வேண்டும் .தொடர்ச்சியாக 2 ஆண்டு வரைகூட தாய்ப்பால் கொடுக்கலாம்; தப்பி ல்லை.இதனால் ஆஸ்துமா போன்ற கொடிய நோய்கள் தாக்காது.அரசு மருத்துவமனைகளில் ஆஸ் துமா நோயை குணப்படுத்த நவீன வசதி கள் உள்ளன.
ஆஸ்துமா & சிகிச்சை
தியானம் (Meditations) ஆஸ்து மாவை குறைக்க உதவியாக இருக்கிறது. 
ஆஸ்துமாவை மூச்சுப் பயிற்சி மூலம் சுலபமாக விரட்டி விடலாம். மூச்சுப் பயிற்சி என்பது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது தான். மூச்சை ஒரு நிமிடம் உள்ளே இழுத்தால்,வெளியே விடும் போது இரண்டு நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலைக் கடன்களை முடித்து விட்டு மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டால் ஆஸ்துமாவை விரட்டி விடலாம்.
பதற்றம் இல்லா எளிய வாழ்வுமுறை மூலமும், சுகாதார வாழ்க்கை முறை மூலமும் ஆஸ்துமா பாதிப்பை குறைக்கலாம்!

மூச்சுத்திணறலை விரட்டி அடிக்கும் அபூர்வ‌ மூலிகைகள்!


ம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலை க்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தை யும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கி ன்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையி ல் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்ற றைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கி ல் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கல ந்து உண்ணலாம்.
ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.
ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீ ர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.
கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.
கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.
பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத் து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.
தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.
ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.
சதகுப்பை இலைப்பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற் கண்டு சேர்த்து அருந்தலாம்.
ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.
ஊமத்தையும் சுக்கையும் சமஅளவு எடுத்துப் பொடித்து, அதை அரைஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.
50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊற வை த்து வடித்து அருந்தலாம்.
திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரை ஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.
வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.
வெளிப் பிரயோகம்:
சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.
லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத் து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இட லாம்.
செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க் கலாம்.
அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.
கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த் து அரைத்துப் பற்று போடலாம்.
சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும் படி லேசாகக் காட்டலாம்.
சேர்க்க வேண்டியவை:
தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி.
தவிர்க்க வேண்டியவை:
குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம்.

வ‌யதுக்கு ஏற்ப உடலுறவு இச்சையில் ஏற்படும் மாற்ற‍ங்கள்


உண்ண உணவும், சுவாசிக்க காற் றும் மனிதன் உயிர்வாழ அத்தியவ சிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவு ம் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வய தான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய கோளாறு கள், போன்ற நோய்கள் குணமடைவதாக ஸ் வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்ட வர்க ள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சா கம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவ தாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வயதுக்கு விடை கொடுங்கள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறு பாடு எதுவும் இல்லை. ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகை யிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமா கும். மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரை யிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார் மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடு ம் இருக்கும் என்கின்றனர் மருத் துவர்கள்
மனநிறைவும் திருப்தியும்
உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக் குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியா கவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப் பிட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையை யும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மன நிறைவான உணர்வையும் தருகின்றன. நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியை யும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலை க்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத் துவக் கழகம் கண்டறிந்துள்ளது.
நோய்கள் குணமடையும்
தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களி ன் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத் தம், இதய நோய் உள்ளவர்க ளின் இரத்தக்குழாய் இறுக்க மும் தளர்த்தப்பட்டு விடுகிறது. நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என் றுமருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகி ன்றன. டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைக ளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார் கள் என்று கூறுகிறது. எனவே வயது எதுவாக இருந்தாலும் நிறை வான தாம்பத்யமும், உறவும் தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் சந்தேகமில் லை.

Sunday, 4 August 2013

சித்தர்கள் வகுத்த‍ உறுப்புக்களும் நோய்களும்!

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்நோய் கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொ ன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்க ளின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிரு ப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டை யும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறு வது இல்லை என்பது கருதுதற்குரியது.
கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்க ளின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளை ப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பல வாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற் றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந் தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினா ல் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள் உருவாகக் காரணம்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமி கள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமே கம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவ ரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டா க்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செய ல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
கண் நோய் :
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத் தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.
பொதுக் காரணங்கள் :
வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல்கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண் நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினா ன்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவா சம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மல ம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்ப டையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவ னெனப் படுவான்.
சிறப்புக் காரணம் :
சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலு ம், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய் கள் உண்டாகும்.
காசநோய் :
கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாச ம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரண காசம் என எட்டாகும்.
வெள்ளெழுத்து
கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.
முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இரு க்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கி யும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மை யான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேரா ய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொரு ள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழு த்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறை வதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.
கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண் ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.
தலைநோய் :
உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளி ல் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோ யைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனி வர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தே ழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறி ப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண் பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற் றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண் டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.
கபால நோயின் வகை :
வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள் 10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.
தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள் ளப்படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுட ன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாக ச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங் களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திரு ப்பது கருதுதற்குரியதாகும்.
அம்மை நோய் :
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பி டக் காணலாம்.
மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்க ளும் வழங்கப்படுகின்றன.
அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உட லில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத் துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகி றது.
இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.
அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங்க ளைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.
சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,
1. பனை முகரி 2. பாலம்மை
3. மிளகம்மை 4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை
7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை
என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளி கள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலை க் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரு ம்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவு ம் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.
ஆண், பெண், அலியாவது ஏன்?
“பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே”
(திருமந்திரம் 480)
ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண்குழந்தை தரிக்கும். இடது நாசி யில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளி லும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.
குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)
அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.
கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரு ம் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறு மாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலு றவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்த லே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும் போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கு ம் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற் றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனா கவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?
“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)
சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுற வின் போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவா சத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கு ம். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக்குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக் கும்.

Tuesday, 30 July 2013


உடலின் எல்லா நோயையும் கட்டுப்படுத்தும் ஒரே பழம்....


புற்றுநோயில் இருந்துமனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக"காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன..

புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதா ன் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக் கும்,ஆராய்ச்சியாளர்க ளுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும்உண்டு.

புற்றுநோய் வந்தபிறகுகொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ்,மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்க ு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள் ளனர்.அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும ், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும் , தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும்விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிற
 து.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்கள ைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட் டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளு ம்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும்உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது.அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூட ியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

Tuesday, 9 July 2013

நிலவைதேடி: உங்கள் மொபைலில் இருந்து இலவசமாக பேச உதவும் மென்பொர...

நிலவைதேடி: உங்கள் மொபைலில் இருந்து இலவசமாக பேச உதவும் மென்பொர...: நாம் இதுவரை நிறைய ஆப்ஸ்களை பார்த்திருப்போம், அவையனைத்தும் நிச்சயம் உங்களுக்கு போர் அடித்திருக்கும். மேலும், இதுவரை பல்வேறு இலவச சர்வீஸ் ஆ...

தாம்பத்யம் திருப்தி அடையவும் நீடித்த உறவுக்கும் சில வழிகள்!


உறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்ப த்தை மட்டுமே நோக்கமாக கொண் டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித் தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்த வரை சீக்கிர மே கிளைமே க்ஸுக்கு வந்து விடு வார்கள். ஆனால் பெண்கள் நிச்சயம் அப்படி இல்லை, அவர்கள் உறவின் உச்சநிலையை அடைய சிறிது நேரம் ஆகும். அவர்கள் உச்சத்தை ஆண்கள் தாக்குப் பிடிக்க வேண்டும ல்லவா எனவே நீடித்த இன்பத்திற்கான வழிகளை யோசித்துப் பார் த்து அதைக் கடைப்பிடித்தால் நல்லது..
அதுகுறித்த சில யோசனைகள்
 கண்ட்ரோல் யுவர்செல்ஃப்
உறவின் போது சீக்கிரமே உயிரணு வை வெளியேற்றுவதைத் நிச்ச யமாக தவிர்க்க வேண்டும். இதற்கு சில பயிற் சிகள் உள்ளன. சிலரு க்கு உறுப் புகள் சந்தித்தவுடனேயே விந்தணு முந்திக் கொண்டு வந்து விடும். இதைத் தடுக்க வேண்டியது மிக முக்கியம். உறவில் ஈடு படும்போதும் சரி அல்லது சுய இன்பம் அனுபவிக்கும்போதும் சரி, வி்ந்தணுவை வெளியேற்றுவ தை கட்டுப்படுத்தி தாமதப்படுத்துங்கள். இவ்வாறு செய்து வந்தா லே உங்கள் உறுப்பு உங்கள் கட்டு பாட்டில் வந்துவிடும்.
 
நீடித்த முன்விளையாட்டில் ஈடுப டுங்கள்
தம்பதியர் முன்விளையாட்டில் ஈடுப டும்போது அதை நீண்ட நேர மாக நீட்டியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாடு ங்கள். உணர்ச்சிகள் கட்டுக்கடங்கா மல் அதிகரிக்கும் வரை விளையாடுங்கள். குறிப்பாக பெண்கள் உணர்ச்சியில் கொந்தளித்துக் கொதிக்கும் வரை விளையாடுங் கள். இங்கு பெண்களின் உணர்ச்சிகளுக்குத்தான் ஆண்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதுக்கு மேல தாங்காதுடா சாமி என்று பெண்கள் உங்களிடம் குமுறும் வரை விளையாடுங்கள். அதற்குப் பிறகு உள்ளே போங்க.
மெதுவாக ஆரம்பித்து வேகத்தை அதிகரியு ங்கள்
உறவில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் முதலில் வேகத்தை கட்டுப்படு த்துங்கள். தாம்பத்யத் தில் மேலே இருந்து உறவில் ஈடுபடும் நபர் தான் டிரைவர் போல. எனவே அவர்தான் பார்த்துப் பதமாக, கவன மாக இயங்க வேண்டும். எப்போது வேகமாக போக வேண்டும், எங் கு ஸ்லோவாக வேண்டும் என்பதைஅவர்தான் முடிவு செய்து இய ங்க வேண்டும். நிதானமாக ஆரம் பித்து பின்னர் படிப்படியாக வேக மாக இயங்குங்கள். வேகம் அதிக மாவது போல தோன்றினால் உறுப்பை வெளி யே எடுத்து விட்டு சில விநாடி தாமத த்திற்குப் பின்னர் மீண்டும் இயங்க லாம். இது உற வை நீட்டிக்க உதவும்.
துணையின் மூடுக்கு ஏற்ப முன்னேறுங்கள்
ப்போது உறவில் ஈடுபட்டாலும், துணையின் மூடையும் அறிந்து செயல்படுவது நல்லது. பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் முதலி ல் கிளைமேக்ஸ் வரும், பெண்களுக்குப் பின்னால் தான்வரும். சில சமயங்களில் பெண்கள் முந்திக் கொள்வார்கள், ஆண்கள் ஸ்லோவாக இருப் பார்கள். எனவே இருவரும் அவரவர் மூடை அறிந்து அதற்கேற்ப உறவில் ஈடுபடுவது நல்லது.