Saturday, 30 June 2012

உணவில் கலந்துள்ள ஆபத்தான கலப்படப் பொருட்களை கண்டு பிடிப்பது எப்படி?

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண் ணால் கண்டுபிடிக்க முடியாதபடி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படு கிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக்கொள்கிறோம். தவறான வழி யில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவ ர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார் கள்? அதை கண்டு பிடிப்பது எப்படி
இதோ பட்டியல்
 
பெருங்காயத்தில் . . . 
பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரை த்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும். கலப்படமற்ற  பெருங் காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.

சர்க்கரையில் . . .
சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந் தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

ஏலக்காயில் . . .
ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கிவிட்டு முகப்பவுடர் சேர்க்கி றார்கள்  இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக் கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

மஞ்சள் தூளில் . . .
மஞ்சள் தூளில், பருப்பு வகைகளில்  மெட்டானில் (Metanil) மஞ்ச ள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமி லத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமா கி விடும்.

மிளகாய் தூளில் . . .
மிளகாய் தூளில்  மரப்பொடி ,செங்கல் பொடி,Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப் பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிற முண்டாக்கும். செங் கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட் டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml  acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றி னால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்ய லாம்.
  
காபித்தூளில் . . .
காபித்தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக் கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

கொத்துமல்லி தூளில் . . .
கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத் தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

கிராம்பில் . . .
கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்க ப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

சீரகத்தில் . . .
சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டி ருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.
நெய்யில் . . .
நெய்யில் வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ கு ளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக் கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.
வெல்லத்தில் . . .
வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கல க்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்ச ளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

ரவையில் . . .
ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட் டினால் இரும்பு த்தூள் ஒட்டிக்கொள்ளும்
பாக்குத்தூளில் . . .
பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீ ரில் வண்ணம் கரையும்

பாலில் . . .
பாலில், மசித்த உருளக்கிழக்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார் கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந் தால் 5 ml பாலில் இரண்டு துளி bromothymol blue சொ லுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியா கலந்தி ருப்பதை உறுதி செய்யலாம். பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான  செங்குத்து தளத்தில் வழிய விட் டால் தூய பால் வெள்ளை கோ ட்டிட்டது போல் வழியும்  கலப்பட பால்  எந்த அடையாளமும் ஏற் படுத்தாது  உட னடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லா ம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

தேயிலைத்தூளில் . . .
தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக் கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர் த்திருந்தால் காந்தம் மூலம் கண்டு பிடிக்கலாம்

சமையல் எண்ணெயில் . . .
சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிதுசிறிதா க  ஃபெர் ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர் ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.
குங்குமப்பூவில் . . .
குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கி றார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கல ப்பட நார் எளிதில் முறிந்து விடும்.
ஜவ்வரிசியில் . . .
ஜவ்வரிசியில்  மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.

நல்ல மிளகில் . . .
நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க் கிறார்கள். முட் டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற் றவை.

தேங்காய் எண்ணெயில் . . .
தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங் காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந் த .பிற எண்ணெய் உறையாது தனி த்து இருக்கும்
“கம்பு “வில் . . .
“கம்பு “வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மித க்கும்.
இலவங்கப்பட்டையுடன் . . .
இலவங்கப்பட்டையுடன்  (தால்சினி)  தரங்குறைந்த கருவாய் பட் டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட் ட வண் ணம் நீரில் கரையும்.
சாதாரண உப்பில் . . .
சாதாரண உப்பில் வெள்ளைக்கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.
தேனில் . . .
தேனில் சர்க்கரைபாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத் திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனி ல் எரியாது வெடி ஒலி உண்டாகும்

கடலை எண்ணெயில் . . .
கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய்  கலக்கிறார்க ள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடுபடுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ்  நிறமுண்டாகும்.
ஐஸ் கிரீமில் . . .
ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்ய லாம் 
விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.

No comments:

Post a Comment