Saturday, 30 June 2012

டேட்டிங்”: பருவ குழந்தைகளுக்கான ஓர் எச்ச‍ரிக்கை

“டேட்டிங்” என்ற சொல் மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி இந்தியா விலும் சகஜமாகிவிட்டது. முன் பின் தெரியாத ஒருவரு டன் செல்வது டேட்டிங் கிடை யாது. நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண் பரின் வற்புறுத்தலின்பேரில் அல்லது இருவரும் சம்மதித் து செல்வதுதான் டேட்டிங். இப்படி செல்லும்போது கண் ணியப்பேச்சுடன் கட்டுப்பாட் டு க்கு மீறிய செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தங்களின் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு டேட்டிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுண ர்கள்.
டேட்டிங் செல்வது என்றாலே அந்த ஆணின் மனதில் 90சதவீதம் செக்ஸ் பற்றிய சிந்தனை தா ன் இருக்கும். உடல்ரீதியான உரிமைகளை எடுத்துக் கொ ள்ளவே பெண் நண்பிகளை ஆண் நண்பர்கள் வெளியே அழைத்துச் செல்கின்றனர். டேட்டிங் என்பது அவர்களுக் கு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்ப மாக நினைக்கி ன்றனர்.
நண்பருடன் செல்ல நண்பி தயார் என்று கூறிவிட்டாலே,அந்த நண் பி எதற்கும் சம்மதிப்பாள் என்று அந்த ஆண் நண்பர் நினைத்துக் கொ ண்டு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள தவறுவதில் லை. தொடர்ந்து தவறு நடந்துவிட்டாலும் அந்த நண்பியை த் திருமணம் செய்துகொள்வார் என்பத ற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.சில ஆண் நண்பர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருந்துவிட்டுச் செல்கின்றனர். டேட்டிங் என்பது முட்கள் நிறைந்தது. முட்கள் குத் தாமல் பார்த்துக்கொள்வது அவரவர்களு டைய பொறுப்பு,கடமை என்கின்றனர் நிபுணர்கள்.
இன்றைய சூழ்நிலையில் ஆணுடன் பெ ண்ணோ,பெண்ணுடன் ஆணோ உறவு வைத்திருந்தால்தான் சரியான மன நிலை யில் அவர்கள் இருக்கின்றனர்.அல்லது அவர்களுக்கு ஏதோ மன நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக்கொள்கின்றனர்.
இந்த உந்துதல் கட்டாயம் இவர்களை நண்பர்களாகத் தூண்டுகிறது. பெரும்பாலும் 16வயது முதல் 25வயதுக்கு ஆண், பெண்கள் டேட்டிங் செல்வதை தங்க ளது செக்ஸை வெளிப்படுத் திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றனர் .டேட்டிங்கில் ஆண் பெண் தனியே சந்தித்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போது உடல் ரீதியாக ஏற்படும் மாற் றங்கள் இவர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளத் தூண்டுகிறது.
ஆண் நண்பருடன் டேட்டிங் செல்ல தயாராகும் பெண்களில் சிலர் எதற்கும் துணிந்துதான் செல்கின்றனர்.அந்த ஆண் நண்பரை நாம் இழந்துவிடுவோமோ என்ற பயம்-ஆதங்கம் அவர்களை எந்தக் கட்டு ப்பாட்டையும் மீறிச் செல்லத் தூ ண்டுகிறது.செக்ஸ் உறவுக்கு ஆண் நண்பரால் தூண்டப்படும்போது அப் பெண்ணுக்கு அதில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியில் லாமல் சம்மதம் தெரிவிக்கிறார்.
சமீப காலமாக தொலைக்காட்சி, நாவல்கள்,திரைப்படங்கள் ஆகிய வை டேட்டிங்கில் நடக்கும் சமாச் சாரங்களை வெட்ட வெளிச்சமாக் குகின்றன.காதல் வயப்படுவதற்கு ஊக்குவிக்கின்றன. இந்த விஷயத்தில் ஆணை மட்டும் பழி சுமத்தக் கூடாது.பெண்ணும் இதற்குச் சம்மதித்துத்தானே செல்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தனிமையி ல் இருக்கும்போது எல்லைமீறிச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். சில ஆண் நண்பர்கள் நீ என் னிடம் அன்பாக இருப்பது உண்மையா னால் இதற்கும் சம்மதிக்க வேண்டும் என்று பிளாக்மெயில் செய்கி ன்றன ர். இங்கேதான் அந்தப்பெண், தன்னுடைய பாதுகாப்பு, எதிர் காலம் நற்பெயர் குறித்து சிந் தித்து முடிவு எடுக்க வேண் டும். முடிவு உணர்ச்சிகரமா னதாக இருக்ககூடாது.
இவற்றை தவிர்க்க டேட்டிங் செல்லவேண்டாம் என்று ஒரு வரியில் கூறிவிட்டால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிட முடியாது. பொறுப் பான நடவடிக்கை மூலமே பெண் கள் தங்களைக் காப்பாற்றிக் கொள் ளவேண்டும். அதே சமயம் அனைத்து நண்பர்களும் இதுபோன்று இருப்பா ர்கள் என்ற முடிவுக்கு வந்து பெண்க ளுக்கு தவறான வழி காட்டலைக் கொடுக்கக்கூடாது.அப்படிக் கொடுத் தால் பாலியல் பாகுபாடு, வெறுப்பு கள் ஏற்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் கிடைத்து விடவில்லை.டேட்டிங் என்ற கலா சாரமே ஆண் பெண் இருவரும் ஒரு வரை ஒருவர் புரிந்துகொண்டு மனம்விட்டுப் பேசி, ஆரோக்கியமான முறையில் நட்புச் செலுத்துவதற்காகவே ஏற்பட்டது. இந்த உறவில் குழப்பம் ஏற்படும்போதோ ஆண்மீது பெண் கவர்ச்சியோ,பெண் மீது ஆண் கவர்ச்சியோ, ஏற்படும் போது தான் வழி மீறல்,விதி மீறல் எல்லாம் ஏற்படுகின்றன.
எப்பொழுதுமே நாம் சரியாக இருந்தால் எல்லாமே நலமாக இருக்கும் என்பதை குழந்தைக ளுக்கு புரியவைக்கவேண்டும். ஆண் நண்பர்களுடன் தனித்திரு க்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நமது உள் மனம் கூறும் வார்த் தைக்கு மதிப்பு தரவேண்டும். இந்த சூழ்நிலை நமக்கு சரிப்பட்டு வராது. தடம் மாறிவிடுவோமோ என்று உள்ளுணர்வு எச்சரித்தால் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை தவிர்த்துவிடுமாறு குழந்தைகளு க்கு அறிவுறுத்தலாம்.
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் கூடாவே கூடாது என் பதில் தெளி வாக இருங்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். உறவு க்கு வற்புறுத்தினால் கண்டிப் பாக நோ சொல்லிவிடுங்கள் என்று அவர்களுக்கு அறிவுறு த்துங்கள். தனியாக சந்திக்கும் சந்தப்பங்களில் பாலியல் உணர்வுகளை தூண்டுவது போன்ற பேச்சுக்களை தவிர்த்து விடு மாறு உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.

No comments:

Post a Comment