Wednesday, 2 December 2015

‘ஸ்ட்ரெச் மார்க்’ நீங்க


"ஸ்ட்ரெச் மார்க்’ என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்னையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்ற காரணங்களால், சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும்.
அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை மற்றும் கை பகுதிகளில் இதனை காணலாம். இந்த ஸ்ட்ரெச் குறிகள், சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழப்பதால் உண்டாகிறது. இது அழகை பாதிப்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இவ்வகை மார்க்குகளை நீக்க பல க்ரீம்களும், மருந்துகளும் சந்தையில் கிடைத்தாலும், அவைகள் எல்லாம் விலை உயர்ந்ததாக உள்ளது. அதில் கலக்கப்பட்டுள்ள சின்தடிக் ரசாயனங்கள் சருமத்திற்கு ஆபத்தாக கூட முடியும். தொடர்ந்து பயன்படுத்தினால், பக்க விளைவுகள் இன்னும் மோசமாகத்தான் இருக்கும். சரும பிரச்னைகளுக்கு தீர்வு காண, மிகவும் எளிய மருந்தாக விளங்குகிறது தண்ணீர். இது சருமத்தை நீர்ச்சத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஈரப்பதம் இருப்பதால், சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழக்காமலும், வறட்சி அடையாமலும் இருக்கும்.
அதனால் கர்ப்ப காலத்தில் தினமும், 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையை குறைக்கும் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதனால் சருமம் சுலபமாக விரிவடையவும், சுருங்கவும் செய்யும். விரிவடையும் குறிகள் உண்டாகாமல் தடுக்கலாம்.
இயற்கை எண்ணெய்கள் மற்றும் பாதரச கலவைகளை, பல வகையாக கலந்து மசாஜ் செய்ய வேண்டும்.
அதிலும், 30 மில்லி அளவு அவகேடோ, ஜோஜோபா, ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய், 6 சொட்டு சீமை சாமந்தி எண்ணெய் அல்லது, 4 டீஸ்பூன் சுத்தமான ஆலிவ் எண்ணெய், 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து செய்த பேஸ்ட்டை பயன்
படுத்தி மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம். குறிப்பாக இதனை குளிக்கும் முன்பாகவோ அல்லது படுக்கும் முன்பாகவோ, இந்த கலவையை நன்றாக கலந்து, ஸ்ட்ரெட்ச் குறிகளின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். சீரான முறையில் மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஸ்ட்ரெட்ச் குறிகள் நீங்கும்.
பாதிப்படைந்த பகுதிகளில் ஓட்ஸ் அல்லது ஆப்ரிக்காட் மூலம் செய்த ஸ்க்ரப்களை தேர்ந்தெடுத்து, சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கி விட வேண்டும்.
எலுமிச்சை ஸ்கரப்பையும் இதற்கு பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன் எலுமிச்சையை நன்றாக சருமத்தின் மீது தேய்த்து, 1-2 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். இதனால் அதிலுள்ள வைட்டமின் சி, சரும துளை வழியாக ஆழமாக உள்ளேறும். இது கொலாஜென்,எலாஸ்டிக் பைபர்கள் பாதிப்படையாமல் உள்ளிறங்கும். காலப்போக்கில் ஸ்ட்ரெச் குறிகள் நீங்கும்.

No comments:

Post a Comment