Sunday, 10 July 2016

உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை

Posted By Muthukumar ,On July 10,2016

இந்த உலகத்தில் உள்ள‍ அனைத்து மக்களும் இறப்பே இல்லாத பெரு வாழ்வு வாழவே விரும்புகின்றனர். ஆனால் இறப்பு எப்போது எப்ப‍டி எந்த ரூபத்தில் வரும் என்று

யாராலும் கணிக்க‍முடியவில்லை. இறப்பு பெருமளவிலானவிபத்து மக்க‍ ளின் அஜாக்கிரதையால்தான் ஏற்படுகின்றது. அது விபத்து, நோய்போன் றவற்றில் மக்க‍ளுக்கு உள்ள‍ அஜாக்கிரதை உணர் வே அவர்களுக்கு மரணங்களை ஏற்படுத்துகின்ற ன• இந்நோயினால் ஏற்படும் மரணம்கூட அவர்க ளின் அஜாக்கிரதையால்தான் நிகழ்கிறது. மிகுந்த எச்ச‍ரிக்கை உணர்வு உங்களுக்கு இருந்தால், நிச்ச‍ யம் உங்கள் இறப்பை நெடுநாள் தள்ளிப்போடலாம். எப்ப‍டி என்பதை உங் களுக்கு சொல்வதுதான் இந்த பதிவின் முழு நோக்க‍ம்.
உலகில் எத்தனை பேர் புற்றுநோய், நீரிழிவு மற்று ம் இதர தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்படுகின்றனர் என்று தெரியுமா? சமீபத்திய நிலவரப்படி, சுமார் 7.8 பில் லியன் மக்கள் இதுபோன்ற பல பிரச்சனைகளை சந்திப்பதோடு, இந்த பிரச்சனைகளுக்கு எடுத்துவரும் மருந்துமாத்திரைகளுடன் தவறான உ ணவுகளையும் உட்கொண்டு வருவதால் இறப்பையும் சந்தி த்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என தெரியுமா?
உதாரணமாக, ஆஸ்துமா அல்லது சுவாச பிரச்சனைகளை சந்திப்பவர்கள் காபியை அளவுக்கு அதிகமாக உட்கொள் ளக்கூடாது, அப்படி எடுத்தால் அதில்உள்ள காஃப்பைன், நுரையீரலின் தசைகளுக்கு அதிக வேலைக்கொடுத்து, நிலைமையை இன்னும் மோசமடையசெய்யும். இதுபோன்று பல தவ றான உணவுகளை, ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்க ள் உட்கொண்டு வருகின்றனர்.
‘ரா’வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
இங்கு எந்த மருந்து மாத்திரைகளை எடுக்கும்போது, எந்த உணவை சாப் பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனை இருந்து, அதற் காக மருந்து மாத்திரைகளை எடுத்துவரும்போது பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுக்கக்கூடாது. இருப்பதி லேயே வாழைப்பழத்தில்தான் பொட்டாசியம் வளமானஅளவில் உள்ளது. இதனை இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் உட்கொண்டால், இதயசெயல்பாடு அதிகரித் து, அதனால் நிலைமை மோசடைய வாய்ப்புள்ளது.
நீங்கள் ஆன்டி-ஹிஸ்டமைன்கள், சர்க்கரைநோய் ம ருந்துகள் அல்லது வலிநிவாரணிகளை எடுப்பவரா யில், ஆல்கஹால் பருகுவதைத் தவிர்ப்பது நல்ல து. ஏனெனில் இந்த மருந்துகளை எடுத்துக் கொண் டிருக்கும்போது ஆல்கஹாலை அதிகம் பருகினால் , ஆல்கஹாலில் உள்ள உட்பொருட்களை உடைப் பதற்கு கல்லீரல் சற்று அதிகமாக செயல்பட வேண் டியிருக்கும். இப்படி கல்லீரலில் வேலைப்பளு அதி கரித்தால், அதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற் படும் வாய்ப்புள்ள து. எனவே கவனமாக இருங்கள்.
இரத்த உறைவு தடுப்பு மருந்துகளை எடுத்து வருபவர்கள், பச்சை இலைக் காய்கறிகளானகேல், பசலைக்கீரை ப்ராக்கோலி போன்றவ ற்றை அதிக ம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த மருந்துகளை எடுக்கும்போது, இவற்றை உட்கொண் டால் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் K இரத்த உறைய வழிவகுக்கும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளாதீர்கள்.
இதய பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்து வருபவர்கள், அதிமதுரத்தை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் பொட்டாசிய த்தின் அளவைக் குறைத்து, நோயாளிகளை பலவீனப் படுத்தி, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக் கும்.
உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க மருந்துகளை எடுத்துவரும்போது, கிரேப்ஃபுரூட்/பப்பளிமாஸ் பழத் தை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கெமிக்கல்கள், உடலில் உள்ள கொழுப்புக்களை உடைக்க முடியாமல் செய்யும். மேலும் கொழுப்பு குறைப்பு மருந்துகள் உயர் இரத்த அழுத்தத் தையும் குறையும் உதவும் என்பதால், சிட்ரஸ் பழங்க ள் அதிகம் எடுப்ப தைத் தவிர்ப்பது நல்லது.
ஆன்டி-பயாடிக்குளான சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் டெட்ராசைக்ளின் போன்றவற்றை உணவு உட்கொள் வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அல்லது உணவு உட்கொண்ட 2மணிநேரத்திற்கு பின்தான் உட்கொள் ள வேண்டும். அதிலும் இந்த மாத்திரைகளை தண்ணீருடன்தான் எடுக்கவேண்டும். டீ அல்லது பால் உடன் எடுக்க க்கூடாது. ஒருவேளை பாலுடன் எடுத்தால், அந்த மாத்திரை யின் சக்தி குறைந்து விடும்.
உங்களுக்கு சளி (அல்) இருமல் இருந்து, அதற்கு டெக்ஸ் ரோம்த்ரோபன் உள்ள மருந்துகளை எடுக்கும்போது, சிட்ரஸ் பழங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலமும், டெக்ஸ்ரோம்த்ரோ பனும் ஒன்று சேர்ந்தால், அது மயக்க உணர்வை உண்டாக் கும்.

மகத்தான மருதாணி

Posted By Muthukumar ,On July 10,2016

ருதாணி வைத்துக்கொள்வது நம் பாரம்பரியப் பழக்கம். இன்று, செயற்கை மருதாணி வந்துவிட்டாலும், இன்னமும் கிராமங்களில் மருதாணிக்கே தனி மவுசு. மருதாணியின் இலை, பூ, பட்டை அனைத்தும் பலன்கள் தரக்கூடியவை. `அழவனம்’, `ஐவனம்’, `சரணம்’ என வெவ்வேறு பெயர்கள் இதற்கு உண்டு.
எலுமிச்சைச் சாறு அல்லது புளித்த காடி நீர்விட்டு, மருதாணி அரைத்துப் பூசினால், மூட்டுவலி, கை கால் வலி, குடைச்சல், உடல் எரிச்சல் சரியாகும்.
உள்ளங்கையில் எரிச்சல் ஏற்பட்டால், இரவு படுக்கும்போது மருதாணி இலையை எடுத்து அரைத்து, தேய்த்துவிட்டுப் படுத்தால், காலையில் எரிச்சல் நீங்கிவிடும்.
நகப்புண், சுளுக்கு, மற்ற புண்களின் மீது இதன் இலையைக் கசக்கிவைத்துக் கட்டுப்போட்டால், புண்கள் குணமாகும்.
மருதாணி இலைச்சாறு அரைக் கரண்டி எடுத்து, 90 மி.லி பாலில் கலந்து குடித்தால், கை, கால், உடல்வலி நீங்கும். அதே அளவு சாற்றைப் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரில், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கலந்து குடித்தால், தாதுஉற்பத்தி பெருகும்.
ஆறு கிராம் மருதாணி இலையை எடுத்து, ஒரு பூண்டு, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, காலை தோறும் ஐந்து நாட்கள்  உப்பு இல்லா பத்தியத்துடன் சாப்பிட்டுவர, மேகத்தழும்புகள் நீங்கும்.
மருதாணி இலையை அரைத்து, கண்ணை மூடி, கண்களுக்கு மேல் துணிவைத்துக் கட்ட, மூன்று நாட்களில் கண் எரிச்சல், சூடு நீங்கிக் குளிர்ச்சி அடையும்.
கடைகளில் நகச்சாயங்கள் வாங்கிப் பயன்படுத்துவதால், வேதிப் பொருட்களால் நகம் பாதிக்கப்படக்கூடும். மருதாணி இலையை அரைத்து, நகங்கள் மீது பூசி, காயவைத்து அகற்றினால், நகத்துக்கு அழகான நிறம் கிடைப்பதோடு, நகத்தில் இருக்கும் அழுக்குகள், பூஞ்சைத் தொற்றுகள் அகன்றுவிடும்.
கூந்தல் வளர்வதற்கான சித்த மருத்துவத் தைலங்களில் மருதாணி இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது.