Wednesday, 19 October 2011

ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் உள்ள‍ வித்தியாசம்


(டாக்டர். சு.ரகுபதி எம்.எஸ்., எம்.சி எச்., (இதயம்) ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை)
ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உட னே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்த னை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரி ந்து மனிதன் இறந்து போக நேரி டும். 1928வது வருடம் வரை இ தய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட் லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கரு வியுமில்லாமல் மார்பின் இடது புறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரி வடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவ தும் நடந்து கொண்டிருந்தன.
1956ம் வருடம் அமெரிக்க பேராசி ரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக் குப் பிறகு, இதய துடிப்பை (இயக்க த்தை) நிறுத்தி 5 மணி நேரம் கூட இத யத் துடிப்பில்லா மல் ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை முறையை முத லில் செய்து காண்பித்தார். இந்தியா வில், 1970 ல் சென்னை பொது மருத் துவமனையில் இந்தியாவின் முதல் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்யப் பட்டது.
ஓபன் ஹார்ட் ஆபரேஷன்:
இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது. சாதாரண மாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம். ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத் திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறு படியும் இதய இயக்க த்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடி யும்.
இந்த, ‘ஓபன் ஹார்ட்’ (திறந்த முறை) இத ய அறுவைச் சிகிச்சை முறையில் செயற் கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடி கிறது. இந்த சிறந்த முறை அறுவைச் சிகி ச்சை முறையில் உடம் பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசு த்த ரத்தம் செயற்கை நுரையீ ரல் மிஷினில் செலுத்தப்படுகிறது.
செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப் பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.
இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹை போதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப் படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும். அந்த சமயத்தில் ஆபரே ஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத் தன்மை  மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச் சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையு ம் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலி ருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத் தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணை த்துவிடலாம்.
ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வத ற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துக ளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றி லும் குணப்படுத்தி விடலாம்.
பைபாஸ் சர்ஜரி:
பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடு வதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இத ய ஆபரேஷன்.
இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற் கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம்.
இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்ய லாம்.
பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக் குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல் லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மை யைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப் படுகிறது.
பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்ய க்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொது வாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜ ரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொரு த்தமானதாக இருக்கும்.

Monday, 3 October 2011

செக்ஸ் எக்சைஸஸ்


Post image for செக்ஸ் எக்சைஸஸ்
மனிதர்களின் பாலியல் செயல்பாடுகள் சிக்கலானவை. உடலும் மனமும் இணைந்து செய்ய வேண்டிய செயல் ஆண் – பெண் உடலுறவு. உடலுறவு திருப்தியாக இருக்க எண்ணங்கள், உணர்ச்சிகள், ஹார்மோன்கள், சூழ்நிலை, பார்வை, ஸ்பரிசம், வாசனை போன்ற பலவற்றின் சரியான செய்கைகளே பாலுணர்வை தூண்டி பாலியல் உறவுக்கு உதவுகின்றன.
ஆண்களில் பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. பாலுறவின் போது நுகர்தல் (வாசனையை உணரும் திறன்) மற்றும் உணர்தல் (தொடுவதை உணரும் திறன்) ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன இதனை சிறப்பாகச் செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான் பெண்கள் மாதவிலக்கின் போது பாலுறவில் அதிக நாட்டம் கொள்வதும் இந்த நுகரும் திறன் அதிகரிப்பது தான் காரணம் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
பார்வை நரம்புகளும் பெரிய அளவில் பாலுணர்ச்சியை தூண்டக் கூடியவை பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான் எதிர் பாலினரைக் கண்டவுடன் பாலுணர்வு அதிகமாகின்றது. இரவு தூங்கும் பொழுதும் கனவில் பாலுறவு கொள்வது போல கனவு வருவதும் இந்த பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான்.
தொடு உணர்வு தான் ஆணுறுப்பிற்கு விரைப்பைத் தருகிறது ஆணுறுப்பின் முன் புறமுள்ள டார்சஸ் நரம்புகள் அதிக தொடு உணர்வு கொண்டவை எனவே தான் ஆணுறுப்பைப் பிறர் தொட்டவுடன் விரைப்பு ஏற்படுகின்றது.
அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் கூட. பெரும்பாலானவை இரண்டின் கலவையே ஆகும். உடல்ரீதியாகக் தோன்றக் கூடியவை மனரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக்கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றிடக்கூடும்.
பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு என்பது கீழ்க்கண்ட வகைகளாக ஏற்படுகிறது.
1. விருப்பமின்மை – பாலியல் உணர்வை தூண்டும் எல்லா செயல்களாலும் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்க முடியாமல் போதல்.
2. செயல் திறன் குறைபாடு, இயலாமை, குறைந்த வீர்யம் – குறைவான வேகமும், செயல் திறனும் கொண்டவர்கள் நாளடைவில் உடலுறவைப் பற்றி சிந்திப்பதையே குறைத்துக் கொள்கின்றனர்.
3. விரைப்பின்மை – இது ஆணின் இனப்பெருக்க உறுப்பு பெண்ணுடன் உடலுறவு கொள்ள ஏதுவாக பெரிதாக ஆக முடியாமல் விரைப்பில்லாமல் இருப்பதையே குறிக்கும். விரைப்பு ஏற்பட கலவியின் போது ஆணுறுப்புக்கு அதிக ரத்தம் பாய வேண்டும்.
4. விந்து முந்துதல் – ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்பினுள் நுழைந்த உடனேயே விந்து வெளியேறிவிடுவதாகும்.
5. விந்து வெளிப்படாமை – இந்த நிலையில் விந்து ஆணுறுப்பு வழியே வெளியேறாமல், பின்னோக்கி சிறுநீர்ப்பையில் விழுதல்
உடல் மற்றும் மனோரீதியான காரணங்கள்
1. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் குறைபாடு
2. இரத்த நாளங்கள், நரம்புகளின் குறைபாடுகுள், பாதிப்புகள்
3. சத்துணவு குறைபாடு
4. நீரிழிவு, நரம்பு மண்டல நோய்கள்
5. படபடப்பு, பேராவல், மனவிசாரம், துணைவியை திருப்திப்படுத்த முடியாதோ என்ற பயம், (கிஸீஜ்வீமீtஹ்), மனச்சோர்வு (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ).
6. அறியாமை, பாலியல் பற்றிய தவறான கருத்துகள்
7. பிடிக்காத மனைவி, ஒத்துழைக்க மறுக்கும் மனைவி
8. பால்ய பருவத்தில் ஏற்படும் மனபாதிப்புகள்
9. பயம், தன்னம்பிக்கை இல்லாதது.
பெண்களின் குறைபாடுகள்
1. உடலுறவின் போது வலி (ஞிஹ்sஜீணீக்ஷீமீuஸீவீணீ)
2. பிறப்புறுப்பு தானாகவே சுருங்குவதால் உடலுறவு முடியாமல் போதல். அடிப்படை பயத்தால், பெண்ணின் பிறப்புறுப்பு “மூடியது” போல் சுருங்கி விடும்.
3. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்
4. உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.
பெண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்
1. அறியாமை, உடலுறவு என்றாலே ஒரு ‘கெட்ட’ விஷயம் என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்
2. பரபரப்பு, மனச்சோர்வு
3. கணவரை பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு
4. குழந்தை உண்டாகி விடுமோ என்ற பயம்
5. யௌவன பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்கள் / தெரியாதவர்கள். உறவினர்களால் தெரியாதவர்களால் கற்பழிக்கப்படுவது.
ஆயுர்வேத சிகிச்சை மருந்துகள்
ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படும். பிறகு திரிதோஷக் கோளாறுகள் சீராக்கப்படும். இதில் சத்துணவு, யோகா, மூலிகைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களையப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமான்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத வைத்தியரை அணுகி, பயனடையவும்.
யோகாவும் செக்ஸ் குறைபாடுகளும்
பலருக்கு யோகாவும் யோகாசனங்களும் ஆன்மீக தேவை உள்ள சந்நியாசிகள் போன்றவர்களுக்கே ஏற்றவை என்ற அபிப்பிராயம் உள்ளது. யோகா பாலயலங உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்கிறது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் குறையும். செக்ஸ் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

ஆயுர்வேத மருந்துகள்


Post image for ஆயுர்வேத மருந்துகள்
Posted On Oct 3,2011,By Muthukumar

ஆயுர்வேதம் மிக பழமையானது. வேதங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு வரும் ஆயுர்வேதம், நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் நீண்ட கால வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை.
ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். அலோபதி முறையில் உள்ள மாத்திரைகள், கேப்ஸ§ல்கள், இன்ஜெக்ஷன், சிரப் போலவே ஆயுர்வேதத்திலும் பல வகைகளாக மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்
1. அர்க்கங்கள் – திரவப் பொருட்களுடன் மருந்து சரக்குகள் கொதிக்கும் போது எழும் நீராவி பல மருத்துவ குணங்கள் உடையது. மூலப்பொருட்களில் உள்ள சில குறைகள் (துர்வாசனை போன்ற) இந்த முறையில் நீக்கப்படுகிறது. நீராவியை குளிர வைத்து நீராக்குவதால் மருந்துகள் உட்கொள்வது சுலபமாகிறது. சாதாரணமாக கொதிக்க வைக்கும் போது நஷ்டமாகும் சில சத்துக்களை, அர்க்க முறையால் நஷ்டமாகாமல் தடுக்கலாம். தவிர பல மருந்து சரக்குகளை திரவ ரூபத்தில் வடித்து பல நாட்கள் சேமித்து வைக்கவும் இந்த முறை உதவுகிறது.
2. ஆஸவங்கள் – இந்த முறையில் சீதோஷ்ணத்தாலும், காலபோக்கினாலும் கெட்டு விடும் மருந்து சரக்குகளின் சக்தியை, எப்பொழுதும் கிடைக்குமாறு பாதுகாக்கப்படுகிறது. மருந்து சரக்குகளுடன் வெல்லம், சர்க்கரை, தேன் போன்ற இனிப்புப் பொருட்களையும் சேர்த்து, மண் பாண்டங்களில் வைத்து “சீல்” செய்யப்படுகின்றன. இந்த மண் பாண்டங்களை குறிப்பிட்ட காலம் வரை அப்படியே வைக்கப்படும். வெளிநாடுகளில் ‘ஒயின்’ (கீவீஸீமீ) தயாரிப்பது போல், இந்த மண்பாண்டங்களை சுரங்கங்களில், பூமியின் அடியிலோ வைக்கப்படும். இதனால் மருந்துப்பொருட்கள் புளித்து, நுரைத்து பொங்கும் காடியாகும். ஆங்கிலத்தில் ‘திமீக்ஷீனீமீஸீtணீtவீஷீஸீ’ என்று சொல்லப்படும் முறை தான் இது. முடிந்தவுடன் மண் கலங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் மேலே நிற்கும் திரவம் எடுக்கப்பட்டு வடிகட்டி வைக்கப்படும். அடியில் தேங்கிய வண்டல் தவிர்க்கப்படுகிறது. வடிகட்டி வைக்கப்பட்ட திரவம் தெளிந்தவுடன், அதை பாட்டில்களில் அடைத்து வைக்கப்படுகின்றன. பெரிய அளவில் தயாரிக்கும் போது பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேக்கு மர பீப்பாய்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
அரிஷ்டம் – அரிஷ்டங்கள் பெரும்பாலும் கஷாயங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மருந்து சரக்குகளை அப்படியே அல்லது ஒன்றிரண்டாக பொடித்து கஷாயமாக காய்ச்சி உபயோகிப்பது தான் இம் முறைக்கும் ஆஸ்வ முறைக்குமுள்ள வித்தியாசம். அரிஷ்டங்கள் தயாரிக்கு முன், அதற்கு தேவையான பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவைகள் தயாரிக்கப்படும் இடங்கள் பூச்சி, கொசு, ஈரம், குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
கஷாயச் சரக்குகளை, பொடித்து அவற்றை இரண்டு பங்கு, கொதிக்க வைத்த நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், கலவையை கசக்கி, வடிகட்டிய தண்ணீரை எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். வடிகட்டப்பட்ட மருந்து சரக்குகளுடன் மீண்டும் தண்ணீரை, இரண்டு பங்காக, சேர்த்து கொதிக்க வைத்து, ஒரு பங்காக வற்றியவுடன் வடிகட்டி, இந்த நீரை எடுத்து முன்பு சேகரித்த, பத்திரப்படுத்திய நீருடன் கலக்கவும். கஷாயத்தில் சேர்க்கப்படும் மருந்துப் பொருட்களின் தன்மைக்கேற்ப, தண்ணீரை குறைத்தோ அதிகரித்தோ, வேண்டிய அளவு வற்றச் செய்தும் தயாரிக்கலாம். தெளிந்த பின், மேல் நிற்கும் தெளிவை எடுத்து, சர்க்கரை முதலியவற்றை கலக்க வேண்டும். இவ்வாறு வண்டலை நீக்கி கஷாயத்தை சேகரித்து அதில் தேவையான அளவு சர்க்கரை அல்லது சுத்தீகரிக்கப்பட்ட வெல்லம் சேர்த்து கரைத்து வைக்கவும். பிறகு, அதே மருந்தின் வண்டலை சேர்த்து கலங்களில் இட்டு துணியில் கட்டி வைக்கவும். அதே மருந்தின் வண்டல் கிடைக்காவிட்டால் திராக்ஷ£ரிஷ்டத்தில் அடி வண்டலை எல்லா மருந்துகளுக்கும் பயன்படுத்தலாம்.
3. சூரணங்கள் – மருந்து சரக்குகளை நன்றாக இடித்து, பொடியாக்கி, சலித்த நிலையில் தயார் செய்யும் மருந்து சூரணம் எனப்படுகிறது. சூரணங்கள் இரு வகைப்படும் – நன்றாக பொடித்து பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படும் சூரணம் முதல் வகை. இதை பொதுவாக சூரணம் என்றே குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது வகை சூரணம் “க்வாத சூரணம்” என்று அழைக்கப்படுகிறது.
சூரணங்கள் தயாரிப்பில் முதலில் தேவையான மருந்து சரக்குகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன. நன்கு உலர்ந்ததும் இயந்திரங்கள் மூலம் பொடிக்கப்படுகின்றன. பழங்காலத்தில் உரல்களில் பொடி செய்யப்பட்டது. பிறகு சலிக்கப்படுகிறது. சில பொருட்களை தனியாக பொடித்துக் கொள்வது அவசியம். உதாரணமாக சர்க்கரை, கல்கண்டு, கற்பூரம், திராட்சை, பெருங்காயம், படிகாரம் போன்றவை தனியாக பொடிக்கப்பட்டு பிறகு சேர்க்கப்படுகின்றது. சிலவற்றை வறுத்து பொடிக்க வேண்டும்.
க்வாத சூரண வகையில் சில வற்றை கஷாயமாக செய்து உட்கொள்ள வேண்டியிருக்கும். வாய்கொப்பளித்தல், புண்களை கழுவுதல், குளித்தல் போன்ற வெளி உபயோகங்களுக்கு க்வாத சூரணம் பயன்படும். கஷாயமாக செய்யப்படும் போது, பெரும்பாலும் ஒரு பங்கு க்வாத சூரணத்திற்கு 16 பங்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி, எட்டில் ஒன்றாக குறுக்கி வடிகட்டி கஷாயம் தயாரிக்கப்படுகிறது. நீராவிக் கலங்களை உபயோகித்தும் கஷாயம் தயாரிக்கப்படுகிறது.
4. மாத்திரைகள் – மருந்துகளை மாத்திரைகளாக எடுத்துக் கொள்வது சுலபமானது. இதற்கு மருந்துப் பொருட்களை ஒன்றிரண்டாக (ரவை போல்) உடைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் “நைசாக” பொடித்தால் மாத்திரைகள் சரியாக உருவாகாது. துகள்கள் ஒட்டிக் கொள்ள பெரும்பாலும் வேலம் பிசின் உபயோகிக்கப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
5. பானகம் – இது கலவையின் நீர்ப்பகுதியை குறுக்கி “பாகு” போல் தடிக்கச் செய்து தயாரிப்பது என்ற செய்முறை. லேஹியங்கள், வடகங்கள், இவற்றுக்கு பொதுவானது. கற்கண்டு, சர்க்கரை, வெல்லம், பனைவெல்லம் போன்றவற்றுடன் தண்ணீர் அல்லது கஷாயம் கலந்து, நன்கு கரைத்து, வடிகட்டி, கொதிக்க வைத்து, குறிப்பிட்ட அளவு கலவை கெட்டியானவுடன் அதில் நெய், பொடித்து சலித்த பொடிகளை சேர்த்து கலந்து, ஆறியவுடன் தேன் சேர்த்து லேஹியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
6. லேஹியங்கள் – ஆயுர்வேத மருந்துகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மருந்து “லேஹியம்”. லேஹியங்கள் நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி, நோயாளியின் உடல் தேறவும், பழைய பலத்தை அடையவும் உதவுகின்றன. லேஹிய தயாரிப்புக்கு ஆதாரமாக இருப்பது மேலே சொன்ன பானக பாகுபதமாகும். பாகுடன் நெய், பால், தேன், மருந்து சரக்குகள், இவற்றை சேர்த்து சேர்த்து பக்குவப்படுத்தி லேஹியமாக்குவார்கள். மருந்து, இதர பொருட்களை கலப்பதற்கு, பாகு சரியான பதத்தில் இருக்க வேண்டும். சரியான பக்குவ நிலைக்கு பாகு வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி நெய், மருந்து சூரணங்களை கலந்து, ஆற விட வேண்டும். ஆறிய பின் கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், தேன் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும். தயாரிக்கப்பட்ட லேஹியங்களை கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளில் பத்திரப்படுத்தி வைக்கவும்.
7. க்ருதம் (நெய்) மற்றும் தைலம் (எண்ணை) – நெய்யும் தைலமும் இதர மருந்துப் பொருட்களுடன் சேர்ந்து வியாதிகளை கண்டிக்க பக்குவப்டுத்தப்படுகின்றன. இந்த விதமாக இவற்றை பக்குவப்படுத்த கல்கம், திரவம், ஸ்நேஹம் என்ற மூன்றும் அத்தியாவசியமாகின்றன.
கல்கம் – தேவையான மருந்துகள் நன்கு விழுதாக அரைக்கப்பட்டு
எண்ணையுடன் கலக்கப்படுகின்றன. இந்த பசை போன்ற பொருளே, ‘கல்கம்’ எனப்படும்.
திரவம் – கல்கத்துடன் கஷாயம், சாறு, தண்ணீர், பால் தயிர், மாமிச ரஸம்,
முதலியன கலக்கப்படுகின்றன. இந்த கலவைக்கு திரவம் என்று பெயர்.
ஸ்நேஹம் – நெய், எண்ணை, கொழுப்பு, எலும்பில் உள்ள ஜவ்வு போன்ற
மஜ்ஜை ஆகியவை ஸ்நேஹம் என்று கூறப்படுகின்றன.
கல்கம், திரவம், ஸ்நேஹம் ஒன்று சேர்த்து காய்ச்சி, நீர்வற்றியவுடன்
இறக்கி, வடிகட்டி “க்ருதம்” “தைலம்” முதலியன தயாரிக்கப்படுகின்றன.
மேற்சொன்னவை தவிர இன்னும் பல முறைகளில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

Saturday, 1 October 2011

நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள்


பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயி ராக மாறியிரு க்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடை ந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன் றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடி கட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய் யா னது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இரு ந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலி கைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுரு வக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன் படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந் தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொ டுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொ டுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற் கும் நெய்யையே பயன்படுத்தி வந்து ள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழு ப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதி யை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட் கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோ கித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய் களை தடுக்கிறது.
நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பரும னாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள் ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக். 
நெய்யில் Saturated fat – 65%
Mono – unsaturated fat – 32%
Linoleic – unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்  வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி….
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடு வதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ண த்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண் ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறை த்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களு க்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிக மாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின் மையே…
வர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலு க்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசி யின்மையால் அவதியுறுவார்கள். சரி யான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலு ம், அதிக பட்டினியாகவும் இருப்பவர் களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள் ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போ தை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களு க்கும், மன அழுத்தம் கொண்டவர்க ளுக்கும் குடல் புண்ணாகிவிடும். இத னால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சா ப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவ ர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச் சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன் டும்.

Tuesday, 27 September 2011

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொ ண்டால் ஆபத்துதான். தீ விபத் துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத் துகளில் இருந்து உங்கள் உட மை, உயிர், உறவினர்கள் யாவ ரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்….
* நீங்கள் அறிந்து எங்காவது தீப் பற்றிக்கொண்டால் உடனே தீய ணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியு ங்கள்.
* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முய ற்சி செய்யு ங்கள்.
* விபத்தின்போது தீப்பி டித்து எரியும் நபரின் அ ருகில் நீங்கள் இருந்தா ல் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர் வை, கோணி இதில் ஏ தாவது ஒன்றினால் அவ ரை இறுகச் சுற்றி னால் தீ பரவாமல் அணைந்து விடும்.
* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினா ல் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண் டும்.
* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொ திக்கும் சூடான எண்ணெ ய் தெறித்து விழுவதினா லோ, சூடான பொருள் உடலின் மீது விழுவத னாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்க ளை கையினால் தேய்ப் பதோ, நகத்தால் கிள்ளு வதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’ மருந் துகளை வைத்து லேசாக கட்டுப் போட வேண்டும்.
* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காய த்தின் மீது தடவலாம். முட் டையின் வெள்ளைக் கரு வை புண்ணின் மீது தடவி னால் எரிச்சல் குறையும்.
* கடுமையான தீக்காயங்க ளுக்கு அதன் மீது காற்றுப்ப டாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணி யை அகற்றக் கூடாது.
* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வை த்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூட லாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலா ம்.
* தீக்காயம் பட்டவருக்கு அடிக் கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற் றைக் கொடுக்கலாம்.
* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண் டும்.

குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..

குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..

கருவில் வளரும் குழந்தை சீராக வளர தாயின் உணவு மு றை சீராக இருக்கவேண்டும். அது போல் மனமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 
மேலும் குழந்தை பிறந்து அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை தா யின் உணவு முறையைப் பொறு த்தே குழந்தையின் ஆரோக்கியம் இருக்கும்.  ஆனால் குழந்தை வள ர்ந்து 3 வயது க்கு மேல் தான் உட ல் வளர்ச்சியும், மன வளர்ச்சி யும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.  எலும்புகள் வலுவடைய ஏற்ற தருணமு ம் இதுதான்.
மூன்று வயதுக்கு மேல் தான் குழந்தைகண்ணால் காண்பதை உட்கிரகித்துக் கொள்ளும்.  நன்றாகப் பேசும் பருவமும் இது தான்.
இந்த வளரும் வயதில் உள்ள குழந்தைகள் எப்போதும் துறு துறுவென்று ஓடிக்கொ ண்டே இருக்கும்.   ஒரு இடத்தில் உட்கார வை த்து உணவு கொடுப்பது என்பது மிகவும் கடினமா னதாக இருக்கும்.  
இதனால் சில தாய்மா ர்கள் அந்த குழந்தையின் பின்னாடியே ஒடி வித விதமான விளையாட்டு காட்டி, வாயில் உணவு வைப்பது அந்த குழந்தைக்குத் தெரி யாமல் ஊட்டி விடு வார்கள்.    
இது தவறான செயலாகும்.  இப்படியே பழக்கப்படுத்தி விட் டால், நாட்கள் செல்லச் செல்ல ஊட்டிவிட்டால்தான் சாப்பிட முடியும் என்ற நிலை க்கு குழந்தை வந்துவி டும்.  எனவே, குழந் தையை அனைவரு டனும் அமர்ந்து சாப்பி டும் பழக்கத் தைக் கொண்டு வர வே ண்டும்.   தனக்கு பசித் தால் தானே வந் து அமர்ந்து உணவு கேட் கும் வகையில் குழந்தையை பழக் கப்படுத்த வேண்டும்.  
இந்த நேரத்தில்தான் குழந்தைக்கு நிதானமான எல்லா  முழு வளர்ச்சியும் உண்டாகும்.  குழந்தை ஓடியாடி விளையாடுவ தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.   மேலும், இந்த நேர த்தில் குழந்தைகள் தனக்குப் பிடித்த உண வை தேர்ந்தெ டுத்து உண்ணுபவர்களாக இரு ப்பார்கள்.
அதற்காக ஒரே வித மான உணவுகளை தினமும் கொடுக்கக் கூடாது. அது உணவி ன்மீது குழந்தைகளுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கி விடும். விதவிதமான உணவுகள் குழந்தைகளுக்கு உண் ணும் விருப்பத்தை உண்டாக்கும்.  
எனவே,  இக்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவானது, அவர்க ளுக்கு பிடித்தமானதாக வும், வளர்ச்சிக்குத் தே வையான சத்துகளைக் கொடுக்கக் கூடியதாகவு ம், வயிறு நிறையும்படி யும் இருப்பது  அவசி யம். 
சத்தான உணவு என்ற வுடன் சிலர் வைட்டமின் மாத்திரை, டானிக் என பலவற்றை வாங்கிக் கொடுக்கிறார் கள்.  
இது முற்றிலும் தவறான நடவடிக்கை ஆகும்.  குழந்தை க்குத் தேவையான வைட்டமின், மினரல், தாதுப் பொருட்கள் அனைத்தும் உணவின் மூலம் கிடைத்தால் தா ன்  பக்க வி ளைவுகள் ஏதும் இல்லாத நீண்ட ஆரோக்கியம் கிடைக் கும்.
இயற்கையாகக் கிடைக் கும் கீரை, காய்கறிக ளில் இத்தகைய சத்துக் கள் நிறைந்துள்ளன. இவற்றை தவறாமல் குழந்தை களுக்கு உணவாகக் கொடு த்து வந்தால் அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி யின்படி, இந்த ஐந்து வயதில் சாப்பிடக் கூ டிய உணவுதான் ஐம்ப தில் ஆரோக்கியத்தை க் கொடுக்கும்.  இதில் குறைபாடு கண்டால் ஐம்பதில் ஆரோக்கிய த்திற்கு கேடு உண்டா கும் என அறியலாம்.  தினமும் மதிய உண வில் முருங்கைக் கீரை, ஆரைக்கீரை, தண்டுக்கீரை, கரிச லாங் கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, இவற்றில் ஏதா வது ஒன்றைக் கொடு க்க வேண்டும்.
சிறு குழந்தைகளுக்குமுளை கட் டிய பயறு வகைகளை அவி த்து க் கொடுப்பதுடன், உருளைக் கிழங் கையும் மசித்துக் கொடுப்பது நல் லது. அதுபோல் காய்கறி சூப் செய் து கொடுப்பது நல்லது.  
இந்த வயதில் சில குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் தேறாமல் நோஞ்சானாகக் காணப் படுவார்கள்.  இன்னும் சில குழந் கைள் சோர்வாகவும் புத்திக் கூர் மை இல்லா மலும் இருப்பார்கள்.
இவர்களுக்கு
ஆரைக்கீரை – 1 கைப்பிடி
கொத்தமல்லி – சிறிதளவு
மணத்தக்காளிக்கீரை- 1 கைப்பிடி
 கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 2 பல்
மிளகு – 5
சின்ன வெங்காயம் – 3
சீரகம்- 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப்பாக்கி வாரம் இரு முறை கொடுத்து வந்தால் இளைத்த உடல் தேறுவதுடன், குழந்தைகள் வயிற்றுப் பூச்சி நீங்கும்.

Thursday, 22 September 2011

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்

நமது முன்னோர்கள், எதைச் செய்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் பார் ப்பதுண்டு என்று முந்தைய பகுதியி ல் அறிந்தோம். அது போலவே அவ ர்கள், தங்கள் மனதையும் நன்றாக ப் பழக்கி இருந்தார்கள். அதனால் செக்சைப் பொறுத்தவரையில், அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்று தேர்ந்திருந்தார்கள்.
காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள் ள வசியச்சக்கரம், ஏ, ஐ, அ, இ, உ- என்ற 5 எழுத்துக்களைக்கொண்டது. மேற்படி எழுத்துக்கள் அடங்கிய சக்க ரத்தை ஒருவர் தன் கண்களால் கரும்பு வில் லாக பாவனை செய்ய வேண் டும். பாவனை செய்து நாயகியின் மார்பு, முலை, கண், உச்சி, நிதம்பம் போ ன்ற இடங்களில் முறையே ஒவ் வொரு எழுத்தாக எழுதி மனதா லே சாஸ்திரம் செய்து அம்பு எய்து வது போல எண்ணினால், நாயகி மனம் மகிழ்வாள்.
மன்மதனுக்கு 5 மலர் அம்புகள் உ ண்டு. அவை, தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற் பல ம். இதையே ஒரு பெண்ணின் நெஞ்சில் தாமரை இருப்பது போன்று ம், விழிகளில் அசோக மலர் இருப்பது போன்றும், தலையில் முல்லைப் பூ இருப்பது போன்றும் பாவனை செய் து, தனது கண்களாகிய அம்பால் எய்து வார் என, மதனநுல் ஆய்ந்தோர் கூறு வார்கள். இதனால் இந்த 5 மல ர்களும் மக்களை வருத்தும் என்பார் கள்.
மதனநூல் கற்றோர், தாமரைப் பூவா ல், பெண்களுக்கு இன்பம் ஏற்படும், மாம்பூவால் கண்களுக்கு துன்பம் ஏற் படும், முல்லைப்பூ மயக்கத்தை அளி க்கும் என்று கூறுவார்கள். நீலோற் பல மலர், உயிர் போவது போல தன் நிலையைக் கெடுத்து மயக்கம் தரும். அந்த 5 வகை அம்புகள் ஒன்றையொன்று மிஞ்சி மன்மத விகாரத் தை, ஆண், பெண்ணின் மனத்தில் எழுப்புத் தன்மை கொண்டதாகும் என வும் கூறப்படுகிறது.
இப்படியே காமன் தனக்குள் மலர் அம்புகள் எய்து கொண்டி ருப்பதாக எண் ணிக்கொண்டி ருந்தால், கணவன், மனைவி க்கு இன்பம் பெருகும் எனவும் காமசாஸ்திரம் கூறுகிறது. இதனால் சிறந்த மகப்பேறும் கிடைக்கும் எனவும் அது சொல்கிறது.
thanks vidhai2virutcham

Wednesday, 21 September 2011

பாலுறவு பரிமாணங்களை அதிகரிக்க …

பாலுறவு பரிமாணங்களை அதிகரிக்க …

நேருக்கு நேர் பார்த்தபடி ஆணும், பெண்ணும் முறையே வலது புறம், இட து புறம் அல்லது ஆண் இடது பெண் வலம் படுத்தபடி புணரும் முறை இது. ஒருவர் எடை இன்னொருவர் மீது விழாது. நெகிழ்ந்த நிலை யில் நிதானமாக வருடல், கொஞ்சுதல் ஆகிய செயல்கள் நடைபெறும். ஒவ் வொருவரும் ஒரு கையைச் சுதந்தி ரமாகக் கையாளலாம்.
ஆனால் இம்முறையில் ஆண் குறி யின் நுழைவு கொஞ்சம் கடினம். அதனால் அடிக்கடி பெண் குறியை வி ட்டு வெளியே நழுவி வர வாய்ப்பு. விரைவான புணர்ச்சி இயக்கமும், இந் நிலையில் சாத்தியமில்லை நிதான மான முன் விளையாட்டுக்கு இந் நிலை சிறந்தது.  நேரம், வேகம், இடம், நிலை ….
மேற்கூறிய நிலைகளைக் கற்பனைக் கேற்றபடி மாற்றி அமைப்பதன் மூலம் எண்ணற்ற வகையான முறைகளில் புணர்ச்சி நடக்க வழியுண்டு. அவ்வாறே படுக்கை அறையில் மட்டும்தான் புணர வேண்டும். என்னும் கட்டாயமில் லை. கூடம், இடைவழி, தோட்டம், திறந்தமாடி, படிக்கட்டு கள் முதலிய இடத் திலும் வேறெhருவரும் பார்க்க மாட் டார்கள் என்று உறுதி செய்து கொண்டே பிறகு பாலுறவு கொள்வதன் மூலம் பாலுறவின் பரிமாண ங்களை அதிகாரித்துக் கொள்ளலாம்.
இருட்டில்தான் உறவு என்று வைத்து க்கொள்ளாமல் இலேசான வெளிச் சத்தில், பட்டப்பகல் சூரிய ஒளியில் எந்தச் சூழ்நிலையிலும் உறவு கொள் ளலாம். உறவின் போது மெல்லிய இசை பின்னணி அமைக்கலாம். ஏரா ளமான தலையணைகளை வைத்து க் கொள்ளலாம். வசதி நிரம்பியவர் கள். தண்ணீர்ப்படுக்கை வாங்கி அதி ல் உறவு கொள்ளலாம். குளிய றைத் தொட்டியில் கூட உறவு வைத்துக் கொள்ளலாம்.

Tuesday, 20 September 2011

உடல்நலக் குறிப்புகள்




உடல்நலக் குறிப்புகள்

Health Tips - Tips for Women
உடல்நலக் குறிப்புகள்
* கையில் மருதாணி நிலைத்து நிற்க...
மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும்.
* முகத்தில் அல்லது உடம்பில் கருமையாக தேமல் படர்ந்தால் மருதோன்றி இலையை அரைத்து வைத்துக் கொண்டு, அதனுடன் சின்னத்துண்டு சவுக்காரம் சேர்த்துப் பிசைந்து தொடர்ந்து பூசிக் கொண்டு வந்தால் கறுந்தேமல் நிறம் மாறி விடும்.
* உடம்பில் பருமன் ஏற முக்கிய காரணம் இரவுச்சாப்பாடு தான். இரவுச் சாப்பாட்டை லேசாக்கி கொள்ளுங்கள். அல்லது விலக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்மாக உடல் எடை குறைந்து வருவீர்கள்.
* உங்கள் கை நகம் பார்க்கச் சிறிதாவும், விகாரமாகவும் இருந்தால் மூன்று நான்கு நாள் அவற்றின் மீது ஸ்பிரிட் பூசி வரவும், அவை அழகாகவும் பெரிதாகவும் வளரும்.
மருத்துவக் குறிப்புகள்
* எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து இடித்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளணும். தினசரி அப்பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து பல்துலக்கி வரணும். பல் பளபளவென்று ஆவதோடு வாய் நாற்றமும் நீங்கி விடும்.
* சுக்கையும், கல் உப்பையும் சம அளவு பொடி செய்து காலை இரவு உணவோடு கலந்து கொண்டால் வாந்தி, சோர்வு, ஆகியவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.
* தினசரி உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு தினமும் பச்சை வெங்காயத்தை கொடுத்து வந்தால் ஜலதோஷம், காய்ச்சல் வராது

Saturday, 17 September 2011

கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.


கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.

Posted On September 17,2011,By Muthukumar


மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள்.  அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
இந்த  வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.
இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.
ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது.  இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர்.  இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.  மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும்.  எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது.  கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.  நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்.  இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.  அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள்.  இது உடனடி நிவாரணமாகும்.
மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும்.  இது சுவாசக் காற்றை உள்வாங்கி  அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.  நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும்.  இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது.  இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.
ஆடாதோடை இலை, தூதுவளை இலை (2010 மார்ச் இதழில் இதுபற்றி விரிவாகக் கூறியுள்ளோம்) சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.  சளித் தொல்லை அணுகாது.  நுரையீரல் பலம்பெறும்.  மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.
ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும்.  நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.
ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும்  தொண்டைப் புகைச்சல் குணமாகும்.
ஆடாதோடை இலை, தூதுவளை,  துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், சுவாச காச நோய்கள் நீங்கும்.  ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம்கிடைக்கும்.  ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால், நெஞ்சுச்சளி அறவே நீங்கும்.
ஆடாதோடை இலை     – 2,  வெற்றிலை – 2,  மிளகு – 5, சுக்கு – 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்.
இண்டு, இசங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், ஈளை, இழுப்பு, இருமல், சுவாசகாசம், போன்றவை குணமாகும்.
காயவைத்த ஆடாதோடையிலை – 5, அதிமதுரம்-2 கிராம்,  திப்பிலி-1 கிராம், தாளிச பத்திரி – 1 கிராம், சிற்றரத்தை 1/4 கிராம் எடுத்து  இடித்து பொடியாக்கி அதனை 500 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து அது 200 மி.லி.யாக வரும்போது இறக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி நீங்கும்.  கோழை வெளியேறும்.  இரைப்பு நீங்கும்.
கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன்  வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் கிளி பொட்டலமாகக்  கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.
ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை நீங்கும்.  இந்த பொடியை தேனில் கலந்துகூட அருந்தலாம்.

Monday, 12 September 2011

வயாகரா

                                                                         வயாகரா
Posted On Sep 12,2011,By Muthukumar

பொதுவாக erectile dysfunction ஏற்படக் காரணம் PDE5 -ன் செயல்பாடுகள் cGMP-க்கு எதிராக செயல்படுவதால் தான்.
வயாக்ரா, லெவிட்ரா மற்றும் சியாலிஸ் போன்ற மருந்துகள் PDE தடுப்பான்களாக செயல்பட்டு, உறுதியான விறைப்புத் தன்மையை உருவாக்குவதற்காக cGMP அதிகரித்து PDE5 தடை செய்கின்றன.
இதனால்தான் வயாகரா உட்கொண்டவர்களுக்கு விந்து வெளியாகிய பிறகும் விறைப்புத்தன்மை தொடர்ந்து நீடித்திருக்கிறது.
இது ஆணுறுப்பில் உள்ள மெல்லிய திசுக்களைப் பாதித்து நாளைடைவில் நிரந்தர ஆணுறுப்பு எழுசியின்மையை ஏற்படுத்திவிடும்.
வயாகராவில் உள்ள Sildenafil citrate நேரடியாக PDE5 ல் இணைந்து அதன் செயல்பாட்டை நிறுத்துவதில்லை. உடலில் உள்ள இரத்தம் முழுதும் பரவிவிடுவதால், இதயத் துடிப்பு அதிகரிக்கும். இதனால் இதய பாதிப்பு உள்ளவர்கள் மரணத்தைத் தழுவும் அபாயமும் வயாகராவில் உள்ளது.
வயாகராவைவிட சியாலிஸ் 36 மணி நேரங்களுக்கு ஆணுறுப்பின் விரைப்புத்தன்மையை நீடிக்கச் செய்கிறது.
ஆனால் இந்த மருந்துகள் பிரபலமடைந்துவிட்டதால், இவற்றில் போலித் தயாரிப்புக்கள் உருவாகி, மேலும் இதன் அபாயத்தை அதிகரித்துள்ளதால், இவற்றை வாங்க விரும்புபவர்கள், ஒரிஜினல் மருந்துதானா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது நல்லது.

Saturday, 10 September 2011

சுயமாய் விந்து வெளியேற்றல் பற்றிய கேள்விகளும் பதில்களும்


சுயமாய் விந்து வெளியேற்றல் பற்றிய கேள்விகளும் பதில்களும்

ஓர் இணையத்தில் வெளிவந்த மருத்துவக் கட்டுரை
தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட் டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளி யேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர்.
பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடை வது என்றால் என்ன?
பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடை வது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்து விடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடை ய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய் விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.
இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சி யுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இரு ப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உண ர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறி யது)
ஆகவே சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல
சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.
இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலி யல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கை க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விரக்தியை வெளிப்படுத்தும் ஓர் அம்சமே. இது பாலியல் பிரச்சினை என்று கொள்ள இயலாது. விருப்பம் இல்லாத ஆசிரியர் ஒருவரோடு பழ குகின்ற நிலையே. விரைவில் பிள் ளைகள் சுயமாக விந்தை வெளியே ற்றுவது நல்லதோர் உணர்வைத் தருகிறது என்றும் சலிப்பு ஏற்படு வதை நீக்கும் நிவாரணி ஒன்று என்றும் கருதுகிறார்கள். பல மாதங்க ளுக்கு இதனைத் தொடராதே இருப் பர்.
ஏன் பெற்றோர் சுயமாக விந்தை வெளியேற்றுவதைத் தவறு என்கி றார்கள்?
பிள்ளை ஓமோன்களால் வழி நடத்திச் செல்லும் போது பெற் றோர்களால் தம்பிள்ளைகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திரு க்க முடிவதில்லை. பிள்ளைகளில் பெரியமாற்றம் ஏற்படுகிறது. பிள்ளை மாற்றம் காரணமாக பருவமாகி ன்றபோது பாலியல் உந்தல்களுக்கு ஆட் பட்டு விடக்கூடாதே என்று நினைத்து பெற்றோர்கள் பிள்ளைகளை அடக்கி ஆள முயலுகிறார்கள். எல்லாப் பெற்றோர் களுக்குமே இப்படிப்பட்ட போக்கு இருப்ப தில்லை. பிள்ளைகளின் விந்து வெளி யேற்றும் போக்கு பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.
மற்றது பெற்றோரின் பாலியல் வேட்கை தணிந்து வரும்பொழுது பிள்ளைகள் பருவ மாகியவர்கள் விந்து வெளியேற்ற ஆரம்பிக்கின்றார்கள். பருவம் ஆனவர் களுக்கு பாலியல் தாகம் தம்மைப் போலக் குறைவாக இல்லையே என்று பெற்றோர் நினைக்கிறார்கள்.
வருத்தமான சம்பவம் அல்லது விஷயம் என்னவென்றால், பாலி யல் உந்தல்கள் வெட்கப்படத்தக்கவை என்றும் தூய்மையற்ற செயல் என்றும் கருத்து புகுத்தப்பட்டுள்ளதால் பருவம் ஆனவர் களின் பாலியல் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது.
click me
விந்தை வெளியேற்றுவது பையன் களைப் பலமற்றவர்கள் ஆக்கிவி டாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்து விடாது. சுயமாக விந்து வெளி யேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச் சிக்கும் பாலியல் வேட்கைக் கும் காரணமாகும்.
பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரு ம்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது.
விந்து வெளியேறியதும் ஓய்வு கொ ண்டால் தான் மறுபடியும் ஆண் உறுப்பு புடைத்தெழும் என்பதில்லை. அடுத்த புடைத்தெழும் நிகழ்வு சில நிமிட நேரங் களுக்குள் அல்லது சில மணி நேரங் களுக்குள் ஏற்பட்டு விடும். இது பாலு ணர்வு அற்ற நிலைக்குக் கொண்டு சென் று விடும் என்பதும் இல்லை. முழுநாளும் எந்திரங்களைப்போல இதைத்தான் செய் து கொண்டிருக்க வேண்டும் என்பதில் லை. உங்களுக்கு வேறு பல வேலை களும் உண்டு.
அநேக விளையாட்டு வீரர்கள் பெரிய விளையாட்டுப் போட்டி க்குமுன் பாலியல் உறவில் ஈடுபடக் கூடாது என்று நினைப்பதேன்?
அவர்கள் பாலியல் உறவுகொள்வதை யோ சுயமாகவோ விந்து வெளியேறு வதையோ விரும்புவதில்லை. இத னால் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நன்மை இருக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடவில்லையே என்ற ஆத்திரத்தில் ஆவேசமாக விளையாட இடமுண்டு. இன்பம் துய்த்த சந்தோசத்தோடு விளையாடச் சென்றால் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
சுய வெளியேற்றத்தின் பயனால் விந்தின் தொகை குறைந்து விடுமா?
ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை வெளியேறினால் தொகை கு றையக் கூடும். சில தினங்களுக்கு தடிப் பாக இருக்கும். வெளியேற்றப்படாதிரு ந்தால் இது எல்லா வெளியேற்றங்களு க்கும் பொருந்தும். சுயமாக வெளியேற் றும் போது நீங்கள் விந்துவின் தன்மை யை அறிந்து கொள்ள இயலும். அதே வேளை பாலியல் உறவு கொள்ளும் போது வெளியேறுவது கண்ணுக்குப் புலப்படாது. நீங் கள் சுயமாக விந்தை வெளியேற்றுவதில்லை. ஏனெனில் விந் தை மீதப்படுத்தவிரும்புகிறீர்கள். விந் தை ஆண்தன்மையே அற்ற கணவன் மார்களின் மனைவியருக்கு செயற்கை சினைப்படுத்தல் செய்ய தானம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுகிறீர்கள் அவ்விதம் செய்ய விரும் புவதால் கவலைப்பட வேண்டாம். சில மணி நேரங்களில் சகஜமான தொகையை மீண்டும் பெற்றுவிடுவீர்கள். உங்கள் விந்து எண்ணிக்கைக்கு ஏற்ப சுயமாக விந்தை வெளியேற்றுவதால் பாலியலில் ஈடுபடத் தகுதியற்றவர்கள் ஆகிவிடமாட்டீர்கள். குழந்தைகளை உருவாக்கும் ஆசை யும் முயற்சியும் அற்றுப் போகாது.
ஒன்றை மற்றதாக்குவது என்றால் என்ன?
பாலியல் உறவுமூலமோ அல்லது சுயவெளியேற்றுதல் முறை மூல மோ விந்தை வெளிவர விடாது பாலியல் உறவைத் திசை திருப்பும் நோக்கில் விளையாட்டிலோ சங்கீ தத்திலோ இலக்கிய முயற்சியிலோ திசை திருப்பி விடலாகும். விரக்தி முயற்சிக்கு உத்வேகம் ஊட்டுகிறது.
திசை திருப்பிவிடுவது பாலியல் உறவாலோ சுயமாகவோ விந்து வெளியேற்றுவதைத் தவறான செயல் என்ற கருத்தினைக் கொண் டதாலோ அல்ல. திசை திருப்பி விடுவது இரண்டாம் வகைச் செய லாகவே கருதுகிறார்கள்.
இது பிரம்மச்ரியத்தைப் போன்ற செயல்தானா?
அப்படி ஒன்றும் இல்லை. ஆரம்ப கட்டங்களில் பிரம்மச்சரிய பயி ற்சி பெறும் இளம் வயதினர் விரக்தி நிலை அடைவர்.
பிரம்மசாரியாவது பற் றிய இந்து சமயக் கொ ள்கை என்ன வென்றால் இதில் ஈடுபடுவோர் பா லியல் உணர்வுகளை ஒதுக்கி விட வேண்டும் என்பதாகும். சிற்றின் பம் மிருகங்களுக்கே உரியது. இதை விட உய ர்வான பேரின்பம் பிரமச்சரியத்தால் கிடைக்கின்றது எனப்படும்.
ஒரு துளி விந்து நூறு துளி இரத்தத்திற்குச் சமம் என்கின்ற கருத்து உணர்த்துவது என்ன?
இதுவும் ஒரு மூடநம்பிக்கைதான். முன்னொரு காலத்தில் பூமி தட்டையானது என்று ஒரு கருத்து நில வியது. புதிய தகவல்களின் அடிப்ப டையில் இக்கருத்துகள் தவறானது என்று அறிந்து கொண்டனர்.
உண்மையில் உங்கள் உடல் விந்தைத் தயாரித்தபடி இருக்கும். நீங்கள் சுய மாகவோ பாலியல் உறவு மூலமாக வோ விந்தை வெளியேற்றாவிட்டால் தேக்கம் ஏற்பட்டு தொகை பெருகி இரவில் கனவில் பாலியல் சிந்தனை ஓங்கி படுக்கையை ஈரமாக்குகின்றனர். இதனை ஈரமாக்கிய கனவு என்பர். இத்தகைய வீணடிப்புக்களைப்பற்றி இயற்கை பதட்டப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் புடைத் nழுந்து விந்து வெளியாகும் போது நூற்றுக்கணக்கான மில்லியன் விந்துக்கள் வெளியாகின்றன. இவற்றில் ஒன்றோ இரண்டோ மட்டுமே தேவைப்படுகிறது. அநேக சந்தர்ப்பங்களில் ஒன்றுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் குழந்தை ஒன்றுக்கு உரிய வராக விரும்ப வி ல்லை.
சுய விந்து வெளி யேற் றுவது நிரந் தரப் பழக்க மாகப் போய் விடும் என்கி றார் களே?
உண்மையி ல் நடப்பது இ துதான். சுய விந்து வெளி யேற்றம் சதா காலமு ம் செய்து வ ந்து ஓமோ னின் செயல்பாடு ஓய்ந்து விட பல நாட்களுக்கோ வாரங்களுக்கோ சுய விந்து வெளியேற்றம் நிறுத்தப்படுகிறது. ஓமோன் செயல்பாடு நிலையாக இருப்பின் சுய விந்து வெளியேற்றம் தொடர்ந்தபடி இருக்கும்.
இதனைப் பழக்கமான செயல் என்று கொள்ள முடியாது. மனவுறுதி அற்றவர் என்று கூறவும் முடியாது. பாலியல் உந்தல்கள் குறைவாகவுள் ளவர் குறைவாகவே சுயமாக விந்து வெளியேற்றத்தில் ஈ டுபடுவார்கள். கூடுதலான அளவு பாலியல் உந்தல்கள் உடையோர் அதிகமாக சுய விந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடு படுகிறார்கள். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே வித மானதே.
ஒரு பருவமானவர் சுயமாக விந்து வெளியேற்றுவதற்கு எப்பொ ழுதும் வெறுப்புற்று இருப்பதற்குக் காரணம் தீர்க்க முடியாத மன உளைச்சலே. இப்படிப்பட்ட நிலையில் ஆலோசகர் ஒருவரை அணுகி உதவி பெறுவது நல்லது.
சுயமாக விந்து வெளியேற்றுவது பரு க்கள் தோன்றவும் பார்வை குன்றவும் காரணமாகுமா?
பருவமாகின்ற போது பொதுவாக பிள் ளைகளுக்கு பருக்கள் தோன்று வதும், கண்பார்வை பாதிக்கப்படுவதும் சாதார ண சம்பவங்களே. பருவமானவர்கள் சுயமாக விந்து வெளியே ற்றத் தொடங்குகிறார்கள்.
இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே வேளையில் நடக்கின்றதால் சுயமாக விந்து வெளியேற்றுவதுதான் மற்ற இரண்டுக்கும் காரண மென்று கொள்ள முடியாது. அல்லது பார்வைக் குறைபாடு தான் பருக்கள் தோன்றக் கார ணம் என்று கொள்ள முடி யாது. இவை மூன்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது காரண ம் ஆகாதல்லவா?
சுயமாக விந்தை வெளிப் படு த்தினால் சித்தசுவாதீனம் ஏற் படும் என்று கூறக் காரணம் என்ன?
சித்த சுவாதீனம் உற்றவர்கள் புத்தி பேதலித்து இருக்கும் போது மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற சிந்தனை இன்றி வெளிப் படையாவே சுயமாக விந்தை வெளியேற்றுகிறார்கள். இச்செய லுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தியே காரணம்.
இத்தகைய சித்த சுவாதீனம் பாரம்பரியமானதே. உங்களிடம் பரம் பரை அலகு இல்லாவிட்டால் இது ஏற்படும். பரம்பரை அலகு இரு ப்பின் இந்நிலை ஏற்படாது. சுயமாக விந்தை வெளியேற்றுவதால் இத்த கைய கோளாறுகள் ஏற்படாது. ஆ னால் இவை அனைத்தும் பருவம் ஆன பிறகே ஏற்படுகிறது.
சுயவிந்து வெளியேற்றம் இடைவி டாது செய்து வருவதற்கு குழம்பிய மனநிலையே காரணமாகிறது. வேறு காரணங்களாகவும் இரு க்கக் கூடும். நன்கு பயிற்றப்பட்ட மன நோய் வைத்தியரை அணுகி இத்த கையோர் ஆலோசனை பெறுவது நல் லது. மனவேதனை க்குரிய காரணத்தை அறிந்து கொண்டால் அதனை நிவர்த்தி செய்து கொள்ள இயலும். இதனை அறிந்து நிவ ர்த்தி செய்த பிறகு அடிக்கடி சுயமாக விந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது.
சுயமாக விந்து வெளியேற்றிவருபவர் வெறொரு பெண்ணோடு பாலுறவு கொள்வது கடினமானதா?
இல்லை. உங்கள் உடலைப் பற்றி நன்கு அறிந்த பிறகு வேறொரு வரோடு பாலுறவு கொள்வது சுலபமாகிவிடும்.