Friday 30 March 2012

கை கோர்த்துச் சொல்லுங்கள் காதலை…!

Posted On March 30,2012,By Muthukumar
இல்லற வாழ்க்கையில் ஆரோக்கியமான தாம்பத்திய உறவு அவசியமானது. அது மகிழ்ச்சியோடு தம்பதியரிடையே உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும். எனவே இல்லற வாழ்க்கையில் இடைவெளி ஏற்படாமல் இருக்க பெண்களுக்கு ஆலோசனைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

வேண்டியதை கேளுங்கள்
உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பது தவறில்லை. ஒருவேளை தவறாக நினைத்து விடுவாரோ என்ற அச்ச உணர்வும் அவசியமில்லை. உங்களின் தேவையை தவறாமல் தெரிவிக்கலாம், அதனால் உங்களவர் கூடுதல் உற்சாகமடைவார் என்கின்றனர் உளவியாலாளர்கள்.
ஆரோக்கியம் அவசியம்
உடலை கவனமாக பராமரிக்கவேண்டும். அது ஆரோக்கியம் கூட. எனவே உடலை சுத்தமாக பராமரிப்பதோடு சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். தினசரி குளித்து அதற்கேற்ப பெர்ப்யூம் போட்டாலே அந்த வாசனையே தெரிவித்துவிடும் உங்களின் தேவையை.
கை கோர்த்து தெரிவியுங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு பரிபாஷை உண்டு. தனியான தருணங்களில் சந்திக்கும் போது உங்களின் தேவையை கைகோர்த்து தெரிவிக்கலாம். அந்த நெகிழ்ச்சியுடனே, ஒரு வித எதிர்பார்ப்புடனே அன்றைய தினம் கழியும். மனதிலும், உடலிலும் உற்சாக பேட்டரி உற்பத்தியாகும்.
உற்சாக விளையாட்டு
உறவின் போது எப்பொழுதுமே அவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். முன் விளையாட்டுக்களை நீங்கள் தொடங்கினால் உங்களவர் உற்சாகமடைவார். அவரின் ஆர்வத்தை அதிகரிக்கும்.
அழகாய் உணருங்கள்
இது மிகவும் முக்கியமானது. நீங்கள் எப்பொழுதுமே உங்களை அழகானவராய் உணருங்கள். ஏனெனில் உங்களவருக்கு நீங்கள்தான் உலக அழகி. அந்த எண்ணமே உங்களை உற்சாகமுடன் செயல்பட வைக்கும்.
யோகசனம்
தினசரி யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தோடு மனம் ஆரோக்கியமடையும் உறவிற்கு உற்சாகம் தரும் எனவே தினசரி யோகா செய்வது நலம் என்கின்றனர் நிபுணர்கள்.
பாதுகாப்பான உறவு
நமது உடல் நலத்திற்கு ஏற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ளவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் மேலான அறிவுரையாகும். இவற்றை பின்பற்றினால் உங்களவர் உங்களின் தலையணை மந்திரத்திற்கு கட்டுப்படுவது உறுதி என்கின்றனர் நிபுணர்கள்

No comments:

Post a Comment