Saturday 25 February 2012

உலக மக்க‍ளால் கொண்டாடப்படும் அதி முக்கிய தினங்கள்

ஜனவரி

26 – உலக சுங்க தினம்
30 – உலக தொழுநோய் ஒழிப்பு தினம்


பிப்ரவரி

14 – உலக காதலர் தினம்


மார்ச்

08 – உலக பெண்கள் தினம்
15 – உலக நுகர்வோர் தினம்
20 – உலக ஊனமுற்றோர் தினம்
21 – உலக வன தினம்
22 – உலக நீர் தினம்
23 – உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 – உலக காசநோய் தினம்
28 – உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்

05 – உலக கடல் தினம்
07 – உலக சுகாதார தினம்
12 – உலக வான் பயண தினம்
18 – உலக பரம்பரை தினம்
22 – உலக பூமி தினம்
30 – உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே

01 – உலக தொழிலாளர் தினம்
03 – உலக சக்தி தினம்
08 – உலக செஞ்சிலுவை தினம்
12 – உலக செவிலியர் தினம்
14 – உலக அன்னையர் தினம்
15 – உலக குடும்ப தினம்
16 – உலக தொலைக்காட்சி தினம்
24 – உலக காமன்வெல்த் தினம்
29 – உலக தம்பதியர் தினம்
31 – உலக புகையிலை மறுப்பு தினம்

ஜூன்

04 – உலக இளம் குழந்தைகள் தினம்
05 – உலக சுற்றுப்புற தினம்
18 – உலக தந்தையர் தினம்
23 – உலக இறை வணக்க தினம்
26 – உலக போதை ஒழிப்பு தினம்
27 – உலக நீரழிவாளர் தினம்
28 – உலக ஏழைகள் தினம்

ஜூலை

01 – உலக மருத்துவர்கள் தினம்
11 – உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்

01 – உலக தாய்ப்பால் தினம்
03 – உலக நண்பர்கள் தினம்
06 – உலக ஹிரோஷிமா தினம்
09 – உலக நாகசாகி தினம்
18 – உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்

08 – உலக எழுத்தறிவு தினம்
16 – உலக ஓசோன் தினம்
18 – உலக அறிவாளர் தினம்
21 – உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 – உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 – உலக சுற்றுலா தினம்

அக்டோபர்

01 – உலக மூத்தோர் தினம்
02 – உலக சைவ உணவாளர் தினம்
04 – உலக விலங்குகள் தினம்
05 – உலக இயற்கைச் சூழல் தினம்
08 – உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 – உலக தபால் தினம்
16 – உலக உணவு தினம்
17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
24 – உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 – உலக சிந்தனை தினம்

நவம்பர்

18 – உலக மனநோயாளிகள் தினம்
19 – உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 – உலக சட்ட தினம்

டிசம்பர்

01 – உலக எய்ட்ஸ் தினம்
02 – உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 – உலக மனித உரிமைகள் தினம்
14 – உலக ஆற்றல் தினம்

தங்கத்தில் முதலீடு!

Posted On Feb 26,2012,By Muthukumar
முதலீடுகள் பலவிதம். அதில் தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு விதம். உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை லிக்விட் அசெட் (Liquid Asset) என்கிறோம். எனவே, தங்கத்தை நேரடியாக வாங்கி சேமிக்கலாம்.
கடந்த 2011 ஆம் ஆண்டில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார சீர்குலைவு நம் நாட்டு பங்கு சந்தைகளிலும் எதிரொலித்து பங்கு சந்தை குறியீட்டு எண் (சென்செக்ஸ்) ஏறத்தாழ 24 சதவீதம் சரிவினை எதிர் கொண்டது.
அப்படிப்பட்ட நிலையிலும், 2011 ஜனவரி மாதத்தில் 10 கிராமுக்கு ரூ. 20,600 ஆக இருந்த தங்கத்தின் விலை நவம்பர் மாதத்தில் ரூ. 28 ஆயிரமாக உயர்ந்தது. அதாவது இந்த வளர்ச்சி 40 சதவீதமாக இருந்தது.
சமீப காலம் வரை நம் நாட்டில் தங்கத்தை ஆபரணங்களாக வாங்கி முதலீடு செய்வதையே அதிகம் விரும்பி வந்துள்ளோம்.
ஆனால், வேறு விதத்தில் தங்கத்தில் முதலீடு செய்யத்தக்க அளவில் கோல்டு ஈ.டி.எப் (Gold Exchange Traded Fund) என்னும் திட்டம் தற்போது பிரபலமாகி வருகிறது.
இத்திட்டத்தின்படி, தொழில் நிறுவனங்களின் பங்குகளை எப்படி பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை கோல்டு ஈ.டி.எப். திட்டங்கள் மூலமாகவும் வாங்கலாம்; விற்கலாம். இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அது வாங்கிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும் போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணமாகவோ தங்கமாகவோ வாங்கிக்கொள்ளலாம்.
இம்முறையில் வாங்கப்படும் தங்கத்தின் அளவு, தரம், அதன் பாதுகாப்பு குறித்த எந்த கவலையும் முதலீட்டாளருக்கு இல்லவே இல்லை. அதே நேரம், மிக குறைந்த அளவான அரை கிராம் அல்லது ஒரு கிராம் கூட இதன் மூலம் வாங்க முடியும். தங்கத்தை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பற்றதாக கருதப்படுவதால், நேரடியாக தங்கத்தை வாங்குவதை காட்டிலும் கோல்டு ஈ.டி.எப். திட்டங்கள் வாயிலாக வாங்கும் மனோபாவம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்து வருகிறது.
கடந்த 2011 ஏப்ரல் மாதம் நம் நாட்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் முதலீடு செய்திருந்த தொகை ரூ. 4,800 கோடி. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் இவ்வகை முதலீடு ரூ. 9,500 கோடியாக அதிகரித்துள்ளது. இது இத்திட்டம் பிரபலமாகி வருவதை எடுத்துக்காட்டுகிறது.
காகிதத் தங்கம் எனப்படும் இந்த கோல்டு ஈ.டி.எப். திட்டத்தை விரும்பாதவர்கள், சேமிப்பு என்ற அடிப்படையில் தங்கம் வாங்கினால் நாணயங்களாக வாங்குவது நல்லது. தங்க நாணயமோ, தங்க நகையோ வாங்கும் போது கீழ்க்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்வது அவசியம். அவை:-
1) தங்க நாணயம் அல்லது தங்க நகை வாங்குவதாக இருந்தால் அவை ஹால் மார்க் முத்திரை 916 தரச்சான்று கொண்டவையா? என்பதை கவனிக்க வேண்டும்.
2) முதலீடு நோக்கத்தில் தங்க நாணயத்திற்கு பதிலாக கோல்டு இ.டி.எப். மற்றும் இ-கோல்டு போன்றவையாகவும் வாங்கலாம். இது வாங்குவது எளிது. சில நிறுவனங்கள் மாதம் ரூ. 500 முதல் செலுத்தி தங்கம் வாங்கும் வசதியை அளிக்கின்றன. சில தங்க நகைக்கடை நிறுவனங்கள் மாத சேமிப்பு திட்டத்தில் கூட தங்கமாக சேமிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளன. அவற்றை பயன்படுத்தி மாதம் தோறும் தங்கமாக சேமிக்கலாம்.
3) நகை வாங்கும் போது சேதாரம் எவ்வளவு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் நகையில் அதிக நுண்ணிய வேலைப்பாடு இருந்தால் மட்டுமே அதிக சேதாரம் இருக்கும். எனவே சாதாரண நகைகளுக்கு அதிக சேதாரம் இருந்தால் கவனத்தில் கொள்ளுங்கள்.
4) நகைகள் வாங்கும் போது அதிக கற்கள் பதித்த நகைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏன்என்றால் அந்த நகையை மீண்டும் விற்கும் போது குறைந்த மதிப்பில் தான் பணம் கிடைக்கும். நகையில் பதிக்கும் சாதாரண கற்களுக்கு மதிப்பு கிடையாது.

மருந்துக்கடை (Medical Shop) வைக்க‍ என்னென்ன நடைமுறைகள்?

ஆலோசனை வழங்குகிறார் பார்மஸிஸ்ட் மற்றும் சர்ஜிகல் டீலர்.
‘யார் வேண்டுமானாலும் வை க்கலாம். குறைந்த பட்சம் 150 சதுர அடியில் ஒரு இடம். இரு பது ரூபாய் முத்திரைத்தாளில் அந்த இடத்துக்கான வாடகை ஒப்பந்தம். இடத்தின் வரி ரசீது, திட்ட வரைபடம் இரண்டு நகல், கடை வைப்பவரின் கல் விச் சான்றிதழ் மற்றும் மூன்று புகைப்படம் போன்றவற்றை முதலில் தாயார் செய்துகொள்ளவும்.
பின்பு சென்னை தேனாம் பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள
DMS in Chennai
டிரக் கண்ட்ரோல் அலுவலகத்தில் வழங்கப்படும் Form 19 என்கிற விண்ணப் பத்தைப் பூர்த்தி செய்து, அத்துடன் இர ண்டு ரூபாய்
கோர்ட் ஃபீஸ் ஸ்டாம் ப், ரூ.1500_க்கு அரசு கரு வூலத்தில் பணம் கட்டிய ரசீது ஆகியவ ற்றை இணைக்க வே ண்டும்.
இறுதியாக ஒரு பார்ம ஸிஸ்ட்டிடம் ஒரு டிக்ள ரேஷன்… அதாவது அந் த மெடிக்கல் ஷாப்புக்கு பார்மஸிஸ்ட் நான்தா ன் என்று ஒருவர் டிக்ள ரேஷன் தரவேண்டும். பின் அனைத்து சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து ஒரு கெஸ ட்டட் ஆபீஸரிடம் அட்டஸ்ட் வாங்கி ஃபார்ம் 19உடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அந்தப் பகுதி டிரக் இன்ஸ் பெக்டர் உங்கள் இடத்தைப் பார்வையிட்டு நீங்கள் தந்த தகவல் களை உறுதி செய்ததும் உங் களுக்கு லைசென்ஸ் வழங்கப்படும்.’’

Sunday 19 February 2012

வேலை வாய்ப்பு தகவல்

Posted On Feb 19,2012,By muthukumar

வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற புதிய வேலை வாய்ப்பு திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாகவும் வேலை வாய்ப்பு தகவல்களை பெறலாம்.

மின்னஞ்சல் வழியாக பெற http://feedburner.google.com/fb/a/mailverify?uri=EcareerspaceRecentJobs இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்துக் கொள்ளவும்.

வேலை வாய்ப்பு தகவல்களை Facebook வழியாகவும் பெறலாம்.
Facebook page: http://www.facebook.com/pages/Jobs-in-India/262035010496887

வேலை வாய்ப்பு திரட்டி இணைய தள முகவரி: www.ecareerspace.com