Thursday 8 March 2012

அலைபேசியின் தயாரிப்பைப் பற்றி அறிய வழிசொல்லும்


Posted On March 8,2012,By Muthukumar
அலைபேசியின் தயாரிப்பைப் பற்றி அறிய வழிசொல்லும் இந்த செய்தியைப் பலரும்  மின்னஞ்சல் வடிவிலோ, குறுஞ்செய்தி வழியாகவோ பெற்று இருக்க வாய்ப்பு உண்டு (தமிழாக்கம்):

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் 
தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள். 
00 ==> தரமான தொழிற்சாலையில் தயாரித்தது (செல்போன் தரம் மிக மிக நன்று) 
01 அல்லது 10 ==> தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து (மிக நன்று) 
08 அல்லது 80 ==> தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி
(நன்று) 
02 அல்லது 20 ==> ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். (சுமார்) 
13 ==> ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான் (மோசம்)

உண்மை என்னவென்று பார்ப்போமா??


உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 - 17 இலக்கங்களில்
தெரியவரும்.. இதுவரை உண்மை தான்...

ஆனால் அதன் பிறகு உள்ளதை கவனிக்க:

அந்த எண்ணை கீழ்காண்பது போல் பிரித்துக் கொள்ளுங்கள்
AA-BBBBBB-CCCCCC-D**

AA - IMEI எண்ணை வழங்கும் அமைப்பின் எண்
BBBBBB - அலைபேசி மாதிரி எண் (Model No)
CCCCCC - அலைபேசி வரிசை எண் ( Serial No)
D** - checksum

இதில் AA-BBBBBB என்பது Type Allocation Code (TAC) எனப்படும்..

உங்கள் அலைபேசி தொலைந்து போனால், வரிசை எண்னைக் கொண்டே அலைபேசியைக் கண்டறியும் முயற்சி நடக்கிறது!!

இதில் உள்ள அலைபேசி மாதிரி எண் IMEI அமைப்பினால் வழங்கப்படுகிறது..
(ஒவ்வொரு அலைபேசி modelக்கும் ஒவ்வொரு எண்).. வரிசை எண் மட்டும் தயாரிப்பு நிறுவனம் தருவது..

எனவே, இந்த எண்ணைக் கொண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கலாம் என்பது வெறும் கற்பிதமே!!!

(உ.தா:
நீங்கள் நோக்கியா அலைபேசி பயன்படுத்தினால், AA என்பது 35 ஆக இருக்கும்..
ஒரே மாடல் பேசிகள் (ஒரே கால கட்டத்தில் வாங்கியவை) இரண்டை வாங்கி பாருங்கள்
- BBBBBB ஒன்றாக இருக்கும்)

உங்கள் அலைபேசி எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய விருப்பமா?

உங்கள் அலைபேசியின் மின்கலத்தை (battery) வெளியே எடுங்கள். மின்கலம் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு முத்திரைச் சீட்டு (label) ஒட்டப்பட்டு
இருக்கும்.


 அதில் உங்கள் IMEI எண்ணும் (*#060# அடித்தால் வரும் அதே எண்) , எங்கு தயாரிக்கப்பட்டது என்கிற விவரமும் இருக்கும்!!








குறிப்பு:

நீங்கள் அரத பழசான அலைபேசியைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியெனில், இது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு..

மேலே சொல்லப்பட்ட IMEI எண் இலக்கணம் 2004 ஆம் ஆண்டிற்கு பின் தயாரிக்கப்பட்ட அலைபேசிகளுக்கே பொருந்தும்!!
அதற்கு முந்தைய எண்களுக்குப் பொருந்தாது!

அப்போதைய IMEI எண் இலக்கணம் AA-BBBB-EE-CCCCCC-*

இதில் AA-BBBB என்பது மட்டுமே என்பது Type Allocation Code எனப்படும்..
(பின்னாளில் மாடல்கள் எண்ணிக்கை உயர்ந்ததும், மேம்பட்ட தொழில்நுட்பமுமே எண்ணிக்கையை மாற்ற காரணம் ஆனது)

EE என்பது எந்த நாட்டில் தயாரானது என்பது.. Factory Allocation Code (FAC)

அப்போதும் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் தவறு.. அவை அலைபேசிகளின் நிறுவனங்களைப் பொறுத்து மாறியது

தயாரிப்பு நாடுகள் வரிசையில் கொரியா, ஜப்பான் (முண்ணணி அலைபேசி தயாரிப்பாளர்களின் நாடுகள்) இல்லை என்பதை கவனிக்க!!

ஆதாரம்: நோக்கியா தளம், GSMவிக்கிபீடியா

பி.கு:
தங்கள் அலைபேசியின் IMEI எண்ணைப் பற்றி மேலும் அறிய வேண்டுவோர் கீழ் காணும் தளத்திலும் அறிந்து கொள்ளலாம்...
IMEI ANALYSIS

No comments:

Post a Comment