Friday 13 July 2012

முடியாது… ஆனால் முடியும்!

Posted On July 13,2012,By Muthukumar
தினமும் சாப்பிட வேண்டிய நேரத்தைத் தாண்டி, உணவு உட்கொள்ளும்போது, படபடப்பை அதிகரிக்கும், "கார்ட்டிசோல்' ஹார்மோனின் சுரப்பு, உடலில் அதிகரிக்கிறது. இதனால் உடல், சீரான நிலையிலிருந்து மாறுபடுகிறது.
காலை எழுந்ததும், நாம் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன எனத் திட்டமிடுதல், உண்ணும் உணவு, உடலைப் பராமரிப்பது, உடை ஆகிய விஷயங்களில், நாம் நிறைய, "கோட்டை' விடுகிறோம் என்கின்றனர், மன நல மருத்துவர்கள். அவை என்னென்ன எனப் பார்ப்போம்:
சரியான நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்
நமக்கு அதிகம் படபடப்பை வரவழைக்கும் விஷயம் எது தெரியுமா? பணப் பிரச்னையோ, திருமண உறவுப் பிரச்னையோ அல்ல... சரியான நேரத்தில் உணவு உண்ணாமையே! தினமும் சாப்பிட வேண்டிய நேரத்தைத் தாண்டி, உணவு உட்கொள்ளும்போது, படபடப்பை அதிகரிக்கும், "கார்ட்டிசோல்' ஹார்மோனின் சுரப்பு, உடலில் அதிகரிக்கிறது. இதனால் உடல், சீரான நிலையிலிருந்து மாறுபடுகிறது. எனவே, குறிப்பிட்ட நேரத்திற்குச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, தூங்குவதைப் பின்பற்றுங்கள்.
உண்ணும் உணவில் அக்கறை வேண்டும்
"யார் நடையாய் நடந்து கடைக்குச் செல்வது...' என, அலுப்புத் தட்டி, பக்கத்தில் உள்ள கடையில் காய்கறி, பழம் வாங்கும், பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காசு குறைவு என்ற யோசனையும், பக்கத்துக் கடையிலேயே கால் பதிய வைக்கும். ஒரு காய்கறியை, காய்த்த இடத்திலிருந்து விற்பனைக்குக் கொண்டு வரும் வரை, அது வாடாமல் இருக்க, அதன் மீது ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இந்த மருந்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே, எந்தக் கடையில், மருந்து தெளிக்கப்படாத காய்கறி, பழங்கள் கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அங்கிருந்து அவற்றை வாங்கிச் சமைப்பதே நல்லது.
உடற்பயிற்சி தேவை தான்; மற்ற நேரங்களில்?
"அவளைப் பாரேன்... பீப்பாய் மாதிரி கெடக்கா...' என, யாராவது கிண்டல் செய்து, அதை மாற்றிக் கொள்ள, வீராப்புடன் உடற்பயிற்சி செய்கிறீர்கள்... வாழ்த்துக்கள்! தினமும், அரை மணி நேரம், உடற்பயிற்சி செய்வீர்களா? அதன் பின்...? "டிவி' முன் ஐக்கியம்... கண்டதையும் கொறித்து, கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, சாப்பிடும்போதே, "அதான்... "எக்சர்சைஸ்' செய்கிறோமே...' என, மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு... - இதெல்லாம் சரிப்படாது. சரியான உணவும், உடற்பயிற்சியும் தான், உங்கள் உடலைச் சீராக வைக்கும்.
இறுக்கமான உடை, "ஹை ஹீல்ஸ்' வேண்டாம்
சிலர், மிகவும் இறுக்கமான உடை அணிகின்றனர். "பிளவுஸ்' மற்றும் உள்ளாடையை, மிகவும் இறுக்கமாகப் போட்டால், நாளடைவில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். புடவை கட்டுபவர்கள், உள் பாவாடையை, மிகவும் இறுக்கமாகக் கட்டினால், இடுப்புத் தோலில் புண் ஏற்பட்டு, விபரீதங்களை விளைவிக்கும். குதிகால் உயரச் செருப்பு அணிந்தால், இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேண்டாமே இந்தச் செருப்பு... மனதை உயரமாக வைத்துக் கொள்ளுங்கள்... செருப்பு ஒரு பொருட்டல்ல!

No comments:

Post a Comment