Friday 16 March 2012

பெண் – பூ வாசம் வீசும் வாடா மலரவள்!!



“பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும், “மங்கை அவள் வாய் திறந்தால்

மல்லிகை பூ வாசம்’ என்றும், பெண் வாசம் பற்றி பெருமை பேசும் பாடல்கள் நிறைய. நிஜத்திலும் அது சாத்தியமாக
இதோ சில வாசனை டிப்ஸ்…:
பெண்ணின் உடலமைப்பு, செயல்பாடு கார ணமாக பலருக்கும் உடல் துர்நாற்றம் என் பது தவிர்க்க முடியாமல் போகிறது. நாற்ற த்துக்கு காரணங்கள் பல. முதலில் வியர் வை. இது ஆண், பெண் எல்லாருக்கும் பொது. வியர்வைக்குத் தனியே எந்த வாச னையும் கிடையாது. அது, பாக்டீரியாவுடன் சேரும் போதுதான், ஒரு வித துர்நாற்றம் வெளிப்படுகிறது. வியர்வையை அசுத்தமா க நினைப்பவர்கள் பலர்; ஆனால், அது ஆரோக்கியத்தின் வெளிப்பா டு. வியர்வையின் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பும் வெளி யேறும். சருமத்தில் ரோம வளர்ச்சி அதிகமுள்ள இடங்களில், வியர்வை அதிகம் சுரக்கும். தினம் இருவேளை கள் குளிப்பது, டியோடரன்ட் உபயோகிப்ப து, காட்டன் உடைகளை அணிவது போன் றவை இப்பிரச்னைக்கு தீர்வளிக்கும்.
மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்ற வற்றின் காரணமாகவும், பெண்களின் உடலில் துர்நாற்றம் வரும். மாதவிலக்கு நாட்களில் தரமான சானிட்டரி நாப்கின்க ளை உபயோகிப்பது, அடிக்கடி அவற்றை மாற்றுவது போன்றவை இம்மாதிரி துர் நாற்றங்களை தவிர்க்கும். தினம் இரண்டு வேளை பல் தேய்த்தாலும், சிலருக்கு வா ய்நாறும்; இவர்கள், மவுத் வாஷ் உபயோ கிக்கலாம். கிராம்பை ஊற வைத்த தண்ணீரால் அடிக்கடி வாய் கொ ப்பளித்து வந்தாலும் நாற்றம் அகலும். அதே மாதிரி ஏலக் காயையும் மெல்லலாம்.
உடலை நாள் முழுதும் நறு மணத்துடன் வைத்திருக்க …: குளிக்கும் தண்ணீரில் வேப்பிலை, கற்பூரம் அல்ல து எலுமிச்சை பழத்தின் தோல் ஆகியவற்றில் ஏதே னும் ஒன்றை போட்டுக் குளிக்கவும்; உடல் மணக் கும். ரொம்பவும் வாசனை யான சோப்புகள் சருமத்து க்கு நல்லவையல்ல. சோப்புக்கு பதிலாக பச்சைப்பயறு மாவு அல் லது கடலை மாவுடன், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், வெட்டி வேர், பூலாங் கிழங்கு, ரோஜா இதழ் போன்றவ ற்றை காய வைத்து, அரைத்து, உடம்புக்கு தேய்த்து குளிக்கலாம். இது, சரும அழ கையும் அதிகரிக்கும்; உடலையும் இயற் கை நறுமணத்துடன் வைக்கும்.

No comments:

Post a Comment