Tuesday 31 January 2012

அடிஸன் நோய்!

Posted On Jan 31,2012,By Muthukumar
அலுவலகத்தில் இருந்து வீடு வரும் அவர் சோர்ந்து காணப்படுகிறார். அலுவலகத்தில் வேலை செய்யும்போது கூடச் சோர்வு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைகிறது. சில நேரங்களில் வாந்தியும் ஏற்படுகிறது. தோல் வறண்டு, நிறம் மாறுகிறது. சில நாட்களாகத் தனது உடலில் வலிமை குறைந்த மாதிரி உணர்கிறார்.
இவை எல்லாவற்றுக்கும் என்ன காரணம் என்று கேட்டு மருத்துவரிடம் செல்கிறார். அப்போதுதான், அட்ரினல் சுரப்பி சரியாகச் சுரக்காமல் போனதால்அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.
இந்த நோய்க்கு என்ன காரணம் என்பதை அடிஸன் என்பவர் முதன்முதலில் கண்டறிந்து வெளியிட்டார். அட்ரினலின் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் சுரப்புத் தன்மை குறைவதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார். அதனால் `அடிஸன் நோய்' என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.
அடிஸன் நோய் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. இது ஆண்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும். நோயாளிகளுக்குப் பலவீனம், தோல் வறண்டு போதல், சோர்வு முதலியவை உண்டாகும். பிறகு சிறிது சிறிதாக அது அதிகரித்துக்கொண்டே போகும். உற்சாகம் குறையும். வளர்ச்சி இல்லாமல் மெலிந்துவிடுவார். தசைகள் ஒடுங்கிவிடும். கையில் `ஜில்'லென்று ஆகிவிடும்.
ஆரம்ப நிலையாக இருந்தால், சாதாரணமாக உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டாலே போதும். விரைவில் குணம் ஏற்பட்டுவிடும். டாக்டர் நிர்ணயிக்கும் அளவில் கார்ட்டிசோன் மாத்திரைகளை உட்கொண்டாலே போதும்.
ஆனால் சோர்வடையும் அனைவருமே தங்களுக்கு அடிஸன் நோய் ஏற்பட்டிருப்பதாகக் கருதக் கூடாது. இது ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியது. எனவே மருத்துவரை நாடாமல் நோயை முடிவு செய்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment