Sunday 12 August 2012

எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும் என்று உங்களுக்கு தெரியுமா?


இன்றைய காலத்தில் தலைவலி வராமல் இருக்கும் மனிதர்களை பார்க்கவே முடியாது. ஏனெனில் ஆரோக்கிய மற்ற வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்த மே, அந்த தலைவலிக்கு காரணம் என்று நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் அத னால் மட்டும் தலைவலி வரு வதில்லை, ஒரு சில உணவுகளை உண்பதாலும் தலைவலி வரும். சிலருக்கு உண்டப்பின் தலைவலி அதி கம் வரும், ஆனால் அப்போது அவர்கள் டென்சனால்தான் தலை வலி வருகின்றது என்று எண்ணுவர். மேலும் தலைவலி வரும்போ து அதற்கான மாத்திரைகளை அடிக்கடி போடுவர். ஆகவே இத்தகை ய தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள் என்ன என்பதை அறிந்து, அவற்றை அதிகமாக உண்பதை தவிர்த்து, தலைவலி ஏற்படாமல் தடுக்கலாமா!!!
சாக்லேட்: நிறைய பேருக்கு சாக்லேட் மிகவும் பிடித்ததாக இருக்கு ம் என்பதால், அவற்றை அடிக்கடி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போ து சாக்லேட் நிறைய ஆராய்ச்சியி ன்மூலம் சாக்லேட் கெட்டபெயரை வாங்கிக் கொண்டு வருகிறது. அத் தகைய ஒரு ஆராய்ச்சியில்தான், தலைவலியை ஏற்படுத்தும் உண வுப்பொருட்களில் சாக்லேட் ஒன்று என்று தெரியவந்துள்ளது. அந்த சாக்லேட்டில் இருக்கும் பினைல் தைலமின் மற்றும் தியோ புரோ மின் என்னும் பொருட்கள் உடலில் இருக்கும் இரத்தக் குழாய்களின் அளவை நீட்டிக்கச் செய்து, தலைவலியை ஏற்படுத்துகின்றன.
சீஸ்: சீஸ் கூட தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் சீஸில் இருக் கும் நொதிப்பொருளான தைரமின், உடலி ல் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். அதன் விளைவு தலைவலியில் முடியும். அதிலும் பழைய சீஸில் அதிகமான அளவு தைரமின் இருக்கிறது. ஆகவே பழைய சீஸ் சாப்பிடுவதை தவிர்த்து, புதியதை எப்போதாவது மட்டும் சாப்பிட்டால் நல்ல து.
மதுபானம்: அனைத்து மதுபானங்களும் தலைவலியை ஏற்படுத்தும், அதிலும் ரெட் ஒயின் சொல்லவே வேண்டாம். ஏனெனில் மதுபானங் கள் இரத்த ஒட்டத்தை சரியாக அளவில் ஓடச் செய்யாமல், அதிக மான அளவில் மூளைக்கு பாயும் படிச்செய்யும் இதனால் தான், அதைக் குடித்தபின் வரும்தலை வ லியைத் தாங்க முடியாமல் இருக் கும். மேலும் ரெட்ஒயினில் தலை வலியை ஏற்படுத்தும் பொருட்களில் ஒன்றான சல்பைட் அளவுக்கு அதிகமாக உள்ளது.
காபி: அலுவலகங்களில் தலைவலி குறையும் என்று நினைத்து, காபியை அதிகம் குடிப்பர். ஆனால் அது முற்றி லும் தவறு. காபியில் இருக்கும் காப்பைன் என் னும் பொருள் மெக்னீசியமாக உடலில் மாறும் போது, தலைவலி வரும். அதிலும் அதிக அளவு காபி குடித்தால், அதிகளவு தலைவலியானது வரக்கூடும்.
ஐஸ் கிரீம்: ஐஸ் கிரீம் என்று சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ள மா ட்டீர்கள். ஏனெனில் அதை சாப்பிடக்கூடாது என்று சொல்லி விடு வார்களோ. உங்களுக்கே தெரிகிறது, பின்னர் என்ன? உண்மையில் நாம் ஐஸ் கிரீமை அல்லது ஐஸ் கலந்த பானங்க ளை உடல் சூடாக இருக்கும் போது குடிப்போம். இதனால் உடலில் இருக்கும் இரத்தக் குழாய்க ள் சுருங்கி விடுகின்றன. ஆகவே அப்போது போதிய இரத்த சுழற்சி ஏற்படுவதில்லை. இத னால் தலைவலி ஏற்படுகிறது.
சோயா சாஸ்: இப்போதெல்லம் நிறைய உணவுகளில் சுவைக்காக சோயா சாஸ் பயன்படுத்துகின்றனர். இவ் வாறு அதிகளவு சோயா சாஸ் கலந்துள்ள உணவுகளை உண்டால், தலைவலி ஏற்படு ம். மேலும் சோயாசாஸில் மோனோ சோடி யம் குளுட்டமேட் என்னும் பொருள் உள்ள து. இது தலைவலியை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல், சோயா சாஸில் அதிகள வு உப்பு உள்ளது, இது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, தலைவலியை உண்டாக்கு ம்.
ஆகவே தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள் என்றால், மேற் கூறிய உணவுகளையெல்லாம் அதிக அளவு உண்ணாமல் இருந்தா ல், ஆரோக்கியமாக வாழலாம்.

No comments:

Post a Comment