Tuesday 17 April 2012

குழந்தை பிறந்தது முதல் போடப்படும் தடுப்பூசிகள்

Posted On April 17,2012,By Muthukumar
    வரும் முன் காப்போம் என்பது ஒரு பக்காவான திட்டமிடல் விஷயம்தான்.! இதனால் உருவானதுதான் இன்று நாம் குழந்தைகளுக்குப் போடும் அத்தனை தடுப்பூசிகளும். ,சொட்டுமருந்துகளும்...
ஏதோ, ஆஸ்பிடலில்  வற்புறுத்துவதால் தடுப்பூசிகளை குழந்தைகளுக்குத் தவறாமல் போட்டுவிடுகிறோம். சில சமயங்களில் அட்டவணைப்படி தடுப்பூசிகளை போடாமல் ,அலட்சியமாகக் கூட இருந்துவிடுவதுண்டு., பின்னால் வரப்போகும் பாதிப்புகளை அறியாமல். எனவேதான்,குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகள் பற்றி தெளிவாக விளக்கிக் கூறுகிறார்,நியோநேடாலஜிஸ்ட் டாக்டர் சுப்பிரமணி.
குழந்தை பிறந்தவுடனே என்ன தடுப்பூசி போடவேண்டும்?

         குழந்தை பிறந்ததிலிருந்து மூன்று,நான்கு நாட்களுக்குள் bacilus calmette guinine என்கிற தடுப்பூசி போடுவார்கள். ஏன் மூன்று , நான்கு நாட்களில் என்று சொல்கிறேன் என்றால்,இது ஆஸ்பிடலுக்கு ஆஸ்பிடல் வேறுபடும். சில ஆஸ்பிடல்களில் வாரத்தில் திங்கள்,புதன் என்று இரண்டு நாட்களும்..சில ஆஸ்பிடல்களில் வாரத்தில் புதன் சனி என்ற இரண்டு நாட்களும் என்று தடுப்பூசி மொத்த குழந்தைகளுக்கும் போடப்படும் நாட்கள் என்று வைத்திருப்பார்கள்..காரணம்,ஒருமுறை இந்த மருந்து பாட்டிலை பிரித்தால்,அதை பத்து குழந்தைகளுக்குப் போடுவார்கள். எனவே தனித் தனியாகப் பிரித்து என்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போடமுடியாது என்பதால்தான். ஒரு மருத்துவ மனையில் தடுப்பூசி போடப்படும் நாளன்று குழந்தை பிறந்தது என்றால்,உடனேகூட அந்த தடுப்போசியை போட்டுவிடுவார்கள்.,,இதுசரியானதும்கூட.

இந்த தடுப்பூசியை குழந்தைக்கு எந்த இடத்தில் போடவேண்டும்?

      குழந்தையின் இடதுகையில் தோள்பட்டைக்கு அருகில் போடுவார்கள்...இந்த தடுப்பூசியை சுருக்கமாக BCG தடுப்பூசி என்பார்கள். இது டிபி எனப்படும் காசநோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போரிட போடப்படுவது. இந்த தடுப்பூசி அனைத்துக் குழந்தைகளுக்கும் மிக அருமையாக வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து  BCG தடுப்பூசி வேலை செய்யும். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் BCG தடுப்பூசி போடப்படுவதில்லை. அவர்கள் நாட்டு சுழ்நிலைப்படி குழந்தைகளுக்கு இது அவசியம் என்று நினைக்காததே காரணம்..ஆனால் நம்நாட்டில் இந்த தடுப்பூசி அவ்வளவு தேவை என்று சொல்லமுடியாவிட்டாலும், குழந்தைகளுக்கு தொடர்ந்து போட வலியுறுத்தப் படுகிறது.காரணம், நாட்டுக்கு நாடு வியாதிகளின் தன்மை வேறுபடுகிறது.

குழந்தை பிறந்தவுடன் BCG தடுப்பூசி மட்டும் போட்டால் போதுமா?

       குழந்தைக்கு BCG தடுப்பூசி போடும்போதே,போலியோ சொட்டுமருந்தும்,ஹெபடைடிஸ் B இன்ஜெக்ஷனும் போடுவார்கள். இந்த மூன்றையுமே ஒன்றாக ஒரே நேரத்தில் போடுவார்கள். தவிர போலியோ சொட்டுமருந்து ஒன்றரை,இரண்டரை,மூன்றரை மாதங்களிலும் கண்டிப்பாக தருவார்கள். போலியோ சொட்டுமருந்து,ஊசி என்று இரண்டும் இருக்கிறது...நம்நாட்டில் போலியோ சொட்டு மருந்து மட்டுமே வலியுறுத்தப் படுகிறது.
காரணம் என்னவென்று சொல்லமுடியுமா?

       காரணம் குழந்தையின் வயிற்றில் போகும் போலியோ  சொட்டுமருந்து வைரஸ், குழந்தையின் கழிவு மூலம் வெளிவரும்போது வீரியமிக்க வைரஸாக வெளிவந்து காற்றில் பரவி . காற்றின் மூலம் போலியோ சொட்டுமருந்து கொடுக்காத குழந்தைகளுக்கும் கூட போலியோ தடுப்பு மருந்தாக வேலை செய்யும்...இதைத்தான் மந்தை எதிர்ப்புச் சக்தி என்பார்கள்...படிப்பறிவின்மை,அறியாமை காரணமாக நம் ஊரில் அலட்சியமாக யாராவது குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து தராமல் விட்டுவிட்டால் கூட இதுவே தடுப்பு மருந்தாக பயன்படட்டும் என்பதுதான் காரணம். இதன்மூலம் கட்டாயம் நூறு குழந்தைகளாவது பாதுகாக்கப் படுவார்கள்..பொதுவாகவே போலியோ வைரஸ் ,வெளியேறிப் பரவி, பல குழந்தைகளுக்கும் நனமி தரவேண்டும் என்பதால் நம் நாட்டில் வாய் மூலம் போலியோ சொட்டுமருந்து தருகிறார்கள்.,வெளிநாட்டில் போலியோ ஊசி போடுகிறார்கள்.
ஹெபடைடிஸ் B தடுப்பூசி எதுக்காக?

      மஞ்சள் காமாலைக்கு எதிர்ப்பு சக்தியாகத்தான் ஹெபடைடிஸ் B தடுப்பூசி போடப்படுகிறது. மஞ்சள் காமாலைக்கு A ,B ,G என்று மூன்று வகை தடுப்பூசி இருக்கிறது..இதில் B தான் ரொம்ப பவர்புல் ! மஞ்சள் காமாலை லிவரை உடனடியாக பாதிக்கும் என்பதால் , பிறந்த உடனேயே ஹெபடைடிஸ் B தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை பிறந்த ஆறுமாதத்தில் குறைந்தது ஒருமாதம் இடைவெளிவிட்டு  மூன்றுமுறை கட்டாயம் போடவேண்டும்.

No comments:

Post a Comment