Saturday, 20 September 2014

செக்ஸ் வேண்டாத இளைய தலை முறை


Posted By Muthukumar ,On September 20.

"'பிஞ்சிலை பழுத்திட்டுதுகுள். முளைக்க முதல் குஞ்சைப் பிடிச்சுக்கொண்டு திரியிதுகள். கொஞ்சம் வளர்ந்திட்டால் கடற்கரை பார்க் எல்லாம் முகம் உரச நாட்டியம் போடுதுகள். காலம் கெட்டுப் போச்சு".

இன்றைய இளைய தலைமுறையினர் பற்றிக் காட்டமாகப் பொரிந்து தள்ளினார் ஒருவர்.

உண்மைதான். மேலாடை தணிந்து இரு பூவுகுகள் மிதக்க, கீழாடை மேலேறி மதர்த்த தண்டங்கள் பளபளக்க தெருவெங்கும் இலவச கண்காட்சிகள் அரங்கேறும்போது, காலமும் நாமமும் நாறுவதை தவிர வேறு என்ன நடக்கும்.

ஆனால் அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? இன்றைய சூழலில் குழந்தைகள் விரைவிலே உடல் வளர்ச்சிடைகிறார்கள். பராயமடைவது முந்தி வருகிறது. கையைச் சூப்பி நிற்கும் காலத்திலேயே வேறெதையோ நாடும் காலமாகிவிட்டது.

உண்மையில் பாலுணர்வும் பாலுறவும் மனித வாழ்விற்கு இன்றியமையாதனவே.

காதல், காமம், புணர்வு, மகப்பேறு - இவை இல்லையேல் உயிரனத்தின் நீட்சி தடைப்பட்டுப் போகும். ஆனால் பாலுறவு ஆனாது மகப் பேற்றிற்கானது மாத்;திரமல்ல. அதற்கப்பாலும் அதன் மகத்துவம் தொடர்கிறது.

மனமகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சுயமதிப்பை மேம்படுத்துகிறது, பிறர்; மீதான அன்பிற்கும் காதலுக்கு வலுவூட்டுகிறது. மிக மகிழ்ச்சியான ஆரோக்கியமான பொழுதுபோக்காகவும் இருக்கிறது.


ஆனால் அண்மைய அறிக்கை ஒன்று பாலுறவு விடயத்தில் மனித சமுதாயத்திற்கு சிகப்பு சமிக்கை காட்டுகிறது.

செயற்பாட்டில் தளர்வு

இன்றைய இளைய சமுதாயத்தினர் பாலுறவில் ஈடுபடுவது படிப்படியாக் குறைந்து வருகிறதாம். முந்தைய தலைமுறையினரோடு ஒப்பிடும்போது இன்றைய தலைமுறையினர் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே செயலில் இறங்குகிறார்களாம். பார்க்கிறார்கள் பேசுகிறார்கள் ஆபாசமாகக் கிண்டலும் அடிக்கிறார்கள். வெளிப்படையாகக் கிலேசேமின்றி அது பற்றி கலந்துரையாடவும் செய்கிறார்கள்.

ஆனால் அதற்கு அப்பால் ..?

பிரித்தானியாவில் செய்யப்பட்ட 'வாழ்க்கை முறை மற்றும் பாலியல் மனப்பான்மை தொடர்பான கருத்து' ஆய்வில் இது கண்டறியப்பட்டது. ஆய்வைச் செய்தவர்கள் University College London ஆகும்.

16 முதல் 44 வயதுள்ளோர் உடலுறவில் ஈடுபடுவது கடந்த இரு தசாப்தங்களாகக் குறைந்து வருகிறதாம். இப்பொழுது பெண்கள் சராசரியாக மாதத்தில் 4.8 தடவையும் ஆண்கள் சராசரியாக 4.9 தடவைகளும் ஈடுபடுகிறார்களாம். பத்து வருடங்களுக்கு முன் இது முறைப்படி 6.3 ம், 6.2 ம் ஆக இருந்தததாம். அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதுவே முறையே 6.1ம் 6.4 லும் ஆக இருந்திருக்கிறது.


சரி முதியவர்கள் என்ன செய்கிறார்கள்?;. முதியவர்கள் எனும்போது 65 முதல் 74 வயதானவர்களை இங்கு குறிக்கிறது. 'தேவாரம் திருவாசகம் ஜபம் தியானம், ஸ்தோத்திரம் என முக்திக்கு வழி தேடிக்கொண்டிருப்பார்கள்' என நினைக்கிறீர்களா?

இல்லை. அவர்களும் பாலுறவு வைக்கிறார்கள். வயதான பெண்கள் சராசரியாக மாதத்தில் 1.4 தடவையும் ஆண்கள் சராசரியாக 2.3 தடவைகளும் ஈடுபடுகிறார்களாம். அவர்கள் வயதிற்கு அது போதுமானதாக இருக்கலாம். முந்தைய தசாப்தங்களில் அவர்களது செயற்பாடு பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

காரணங்கள் என்ன?

இன்றைய இளைய சமூதாயத்தினர் பாலுறவில் ஈடுபடும் எண்ணிக்கை குறைந்து செல்வதற்கு காரணம் என்ன?

நவயுகத்தின் அவசரமும், நேரமின்மையும் பன்முகமான சமூக ஈடுபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். தொழிலைத் தக்கவைத்திருக்க வேண்டியுள்ளது. பணத்தின் தேவைக்கு எல்லையே அற்றுப் போய்விட்டது. இதனால் ஏனையவற்றில் ஈடுபடுதல் குறைந்திருக்கலாம்.

அடுத்த காரணம் நவீன தொழில் நுட்ப வசதிகளாகும்.

ஒருவரில் ஒருவர் ஈடுபாடுள்ள இளைஞனையும் யுவதியையும் ஒரு அறையில் அடைத்து வைத்தால் என்ன நடக்கும்? கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து .... எல்லாம் நடக்கும்.

ஆனால் அந்த அறையிலேயே இணைய வசதியுடன் ஐபாட் அல்லது டப்லட் கிடைத்தால் நிலமை தழலகீழாக மாறிவிடும். டக் எனக் கிளிக் பண்ணி ஈ மெயிலை அல்லது மெசேஜைப் பார்ப்பார்கள். தனிப்பட்ட செய்திகள் முதல் உலக நிலவரங்கள் வரை எதையும் தான் தப்பவிட்டு விடக் கூடாது என்ற என்ற ஆழ்மன உந்துதல் காரணமாகும். ஆம் கம்பியில்லாமலே எங்கணும் கிடைக்கும் இணைய வசதி மனிதர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது.

இப்பொழுது பாலுறவு கொண்டால் எவற்றையெல்லாம் இணையத்தில் இழக்க நேரிடும். தப்பவிடக் கூடாதவற்றைக் கவனித்துவிட்டு சற்று நேரம் தள்ளி உறவு கொள்ளலாமா என்று பலர் யோசிக்கும் அளவிற்கு நவீன தொடர்பு சாதன வசதிகள் மனித வாழ்விற்குள் ஆழ ஊடுருவிவிட்டன.

பேஸ்புக், வட்ஸ்அப், ரூவீட்டர் போன்றவை எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் மனித உறவுகளை உள்ளங்கையிற்குள் நெருங்கிக் கொண்டு வருவது உண்மைதான். ஆனால் தத்தமது கணனிகளுக்குள்ளும் ஐபாட்களிலும் மூழ்கிக் கிடப்பதால் அருகில் இருக்கும் சகமனிதர்களுடனான உறவுகளில் பாரிய விரிசலை ஏற்படுத்தி விடுகின்றன.

இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக் காட்டலாம். பாலியல் இன்று மறைபொருளாக இல்லை. வெளிப்படையாகப் பேசப்படுகிறது. மேலை நாட்டு ரீவீ சனல்களில் (Girls,  This is England) மட்டுமின்றி நீயா நானா போன்றவற்றில் கூட பேசப்படுகிறது. ஒரு காலத்தில் பேசக் கூசப்பட்ட விடயங்களான (LGBT - lesbian, gay, bisexual, and transgender இப்பொழுது அலசி ஆராயப்படுகின்றன. கள்ளத் தொடுப்புகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன.

உணர்சியை முந்தும் அறிவியல்

பாலுறவு விடயத்தில் முற்காலத்தில் இருந்த ஒளிவு மறைவு, இரகசியத்தன்மை, பரஸ்பர அந்நியோன்யம் போன்றவை இன்று இல்லாமல் போய்விட்டது. அதிலிருந்த கள்ள நாட்டம் காணாதொழிந்துவிட்டது.

மறுவார்த்தையில் சொல்வதானால் பாலுறவு என்பது உணர்வு சார்ந்ததாக இருந்தமை குறைந்து அதில் அறிவியல் அம்சம் மேலோங்கி வருகுகிறது என்று சொல்லலாம். இவையும் பாலுறுவில் நாட்டம் குறைவதற்கு காரணமாகலாம்.

மிகையான எதிர்பார்ப்புகளும், அதீத சிந்தனைகளும் முன்பு வெளிப்பiடாயகப் பேசத் தயங்கிய விடயத்தை கூறுபோட்டு பகுத்தறிய விளையும் அறிவியல் தேடல்களும், செயலூகத்தைப் பின்தள்ளிவிட்டது.

"காமம் பாலுணர்வு புணர்தல் போன்ற செயற்பாடுகள் உயிரனத்தின் அடிப்படையான மிருக இயல்பு ஆகும். மனிதன் கூர்ப்பில் மிகவும் மூத்த உயிரினம். தனது மூளைத்திறனினல் தங்கியிருப்பவன் கீழே மறைந்து கிடக்கும் அசிங்கத்தை நாடுவது அவனது அறிவாற்றலுக்கு இழுக்கு" போன்றதான மறைமுக உணர்வும் இளைய சமுதாயத்தில் மேலோங்கி வருகிறது. இவையும் அவர்களது பாலியல் செயற்பாட்டை பின்தள்ளுவதாகக் கொள்ளலாம்.

காலையில் நல்லதா, கும்மிருட்டில் நல்லதா, மேலேயா கீழேயா உச்சம் கிடைக்கும், கண்களை மூடியிருப்பதா, விழித்திருப்பதா, கால்களை அகட்டி வைப்பதா ஒடுக்குவதா? இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளை இணையத்தில் தேடுவதும், டம்ளரிலும் ரூவீட்டரிலும் நண்பர்களிடம் விவாதிப்பதுமாக இருப்பார்கள்.

பாலுறவுச் செயற்பாடு பற்றிய மனப்பதற்றதைக் இவை கிளறிவிடுகின்றன. எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டு 100 சதவிகித பெறுபேறு கிட்டக் கூடிய நிலையில்தான் உடலால் சுகிக்க வேண்டும் என எண்ணினால் அது நடக்கக் கூடிய காரிணமா?

எனவேதான் மனிதனின் இயல்பான உயிரியல் செயற்பாடுகளை அறிவியல் ரீதியாக நுணிகி ஆயப் புகுவது தோல்வியிலேயே முடிகிறது. இன்னொரு சகமனிதரிலிருந்து பெறக் கூடிய இன்பங்கள் எவை என்பதையும், அவற்றின் பலாபலன்களையும், அதை எப்படிச் செய்தால் தனக்கும் மற்றவருக்கும் பூரண திருப்தி கிட்டும் என்பதை இணைங்களில் தேடிக்கொண்டிருந்தால் கணனியோடும் ஐபாட்டோடும் புணருவதல்தான் முடியும்.

மொத்தத்தில் பார்த்தால் இன்றைய இளைய தலைமுறையியனர் செக்ஸ் பற்றி அதிகமாகவே சிந்திக்கின்றனர். ஆனால் வேலையால் வீடு திரும்பியதும் ரீவீ பார்க்கிறார்கள், இணையத்தில் மூழ்குகிறார்கள். எல்லாம் முடிய கண்கள் சுழல சோர்ந்து படுத்துவிடுகிறார்கள்;. நேரமிருந்தால் மட்டுமே செக்ஸ் உறவு என்றாகிவிடுகிறது.

ஆய்வு தெளிவுறுத்தும் வேறு விடயங்கள்

பிரித்தானியாவில் செய்யப்பட்ட ஆய்வானது இளைஞர்களது பாலியல் நாட்டம் பற்றி மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் பாலியல் சம்பந்தமான வேறு பல விடயங்களையும் சுட்டிக் காட்டுகிறது.


  • மிக இளவயதிலேயே ஆரம்பித்துவிடும் செக்ஸ் உறவுகள் முதுமையிலும் (74வயது) தொடர்கிறது 
  • தன்னினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ளும் தன்மை அதிகரித்து வருகிறது. அதே நேரம்; திருமணத்திற்கு அப்பாலான பாலுறவை ஏற்கும் தன்மை குறைந்துவருகிறது. 
  • பாலியல் உறவுப் பிரச்சனைகள் இருபாலாரிலும்  10 ல் 4 பேருக்கு இருக்கிறதாம். இருந்தபோதும், 10ல் ஒருவரே அதனால் கவலைப்படுவதாகவோ மனஉழைச்சலுக்கு ஆளாவதாகவோ கூறினார்கள். பாலுறவில் நாட்டமின்மையையே 15 சதவிகிதமானவர்களின் முக்கிய பிரச்சனை இருந்திருக்கிறது. அதிலும் பெண்கள் ஆண்களை விட இரு மடங்காக பாலுறவு நாட்டமற்றுக் காணப்பட்டார்கள். 
  • விருப்பதிற்கு மாறாக உடலுறவு வைக்க வேண்டிய நிலை பலருக்கு ஏற்பட்டு இருந்திருக்கிறது. பெண்கள் அதிக பாதிப்பிற்கு ஆளான போதும் ஆண்களும் தப்பவில்லை. 10 பெண்களில் ஒருவர் இஷ்டமின்றி உடலுறுவு வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்த அதே நேரம், 70 ஆண்களில் ஒருவருக்கு அத்தகைய நிலை ஏற்பட்டதாம். எந்தப் பெண்ணைக் கண்டாலும் புணரும் வேட்கையோடு திரியும் எமது சமூகச் சூழலோடு ஒப்பிடும்போது இத்தகவல் ஆச்சரியம் அளிக்கிறது. 
  • பிரித்தானியாவில் ஏற்படும் கருத்தங்கல்களில் ஆறில் ஒரு பங்கு எதிர்பாராததாக (திட்டமிடப்படாததாக) இருக்கிறது. மற்றொரு விதத்தில் பார்த்தால் 60 பெண்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக கருத்தங்கலுக்கு ஆளாகிறார்கள். கருக்கலைப்பு சட்டபூர்வமாக இருக்கும் பிரித்தானியாவில் இது பாரிய சிக்கலை ஏற்படுத்தாது. 

ஆனால் மதம் புனிதத்துவம் கண்ணியம் எனப் மேடைக்கு மேடை பேசிக் கொண்டு இருளில் பெண்களைக் குதறி எடுக்கும் நம்நாட்டில் சட்டவிரோத கருக்கலைப்புகளால் பலியாகும் பெண்களின் எண்ணிக்கை தூய்மைவாதிகளின் கண்ணில் படுவதில்லை. 

No comments:

Post a Comment