Monday 12 September 2011

வயாகரா

                                                                         வயாகரா
Posted On Sep 12,2011,By Muthukumar

பொதுவாக erectile dysfunction ஏற்படக் காரணம் PDE5 -ன் செயல்பாடுகள் cGMP-க்கு எதிராக செயல்படுவதால் தான்.
வயாக்ரா, லெவிட்ரா மற்றும் சியாலிஸ் போன்ற மருந்துகள் PDE தடுப்பான்களாக செயல்பட்டு, உறுதியான விறைப்புத் தன்மையை உருவாக்குவதற்காக cGMP அதிகரித்து PDE5 தடை செய்கின்றன.
இதனால்தான் வயாகரா உட்கொண்டவர்களுக்கு விந்து வெளியாகிய பிறகும் விறைப்புத்தன்மை தொடர்ந்து நீடித்திருக்கிறது.
இது ஆணுறுப்பில் உள்ள மெல்லிய திசுக்களைப் பாதித்து நாளைடைவில் நிரந்தர ஆணுறுப்பு எழுசியின்மையை ஏற்படுத்திவிடும்.
வயாகராவில் உள்ள Sildenafil citrate நேரடியாக PDE5 ல் இணைந்து அதன் செயல்பாட்டை நிறுத்துவதில்லை. உடலில் உள்ள இரத்தம் முழுதும் பரவிவிடுவதால், இதயத் துடிப்பு அதிகரிக்கும். இதனால் இதய பாதிப்பு உள்ளவர்கள் மரணத்தைத் தழுவும் அபாயமும் வயாகராவில் உள்ளது.
வயாகராவைவிட சியாலிஸ் 36 மணி நேரங்களுக்கு ஆணுறுப்பின் விரைப்புத்தன்மையை நீடிக்கச் செய்கிறது.
ஆனால் இந்த மருந்துகள் பிரபலமடைந்துவிட்டதால், இவற்றில் போலித் தயாரிப்புக்கள் உருவாகி, மேலும் இதன் அபாயத்தை அதிகரித்துள்ளதால், இவற்றை வாங்க விரும்புபவர்கள், ஒரிஜினல் மருந்துதானா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment