Monday 22 August 2011

கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி

“கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி” – நடிகை பூர்ணா

பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!” என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ”அதே… என் முகம் பளிச் சுனு இருக்கிறதுக்குக் காரணமே பப்பாளி தான்!” என்கிறார். அசினை அச்சு வார் த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா… பழங்களின் ப்ரியை.
 ”என் காலை உணவே, பழங்களும் காய் கறிகளும்தான். ஜூஸ் சாப்பிடுவதில் விரு ப்பம் இல்லை. பழங்களைக் கட் பண்ணிச் சாப்பிடுறப்ப, அதோட முழுமையான சத்துக்கள் நமக்குக்கி டைக்கும். ஐஸ் மாதிரியான பொருட்களைச் சேர்க்கமா ட்டேன்.
பியூட்டி பார்லர் போய் ஃபேஷியல் பண்றதில் எனக்கு விருப் பம் இல்லை. பப்பாளி, ஆ ரஞ்சு, ப்ளம்ஸ் மாதிரியான எந்தப்பழம் கிடைத்தாலும், அதோட சாறையும் சக்கை யையும் அப்படியே முகத்தில் அப்ளை பண் ணு வேன். பப்பாளிப் பழத் தோட ஸ்பெஷல் என்னன்னா, முகத்தில் மாசு மரு எது இருந் தாலும், அரை மணி நேரத்தில் அதை கிளி யர் பண்ணிடும். அரை மணி நேரம் பப்பாளி யை முகத்தில் தேய்த்து ஈரம் காயாமல் வைத்திருந்து, பின்னர் கழுவினால் முகத்துக்கு வேறு மேக்கப்பே தேவை இல்லை. மார்க்கெட்டில் கிடைக்கும் அலங் காரப் பொருட்க ளால், தேவையற்ற ஸ்கின் பாதிப்புகள் உருவாக வாய் ப்பு இருக்கு. நம் முகத்தின் தன் மைக்கு ஏற்ற பொருட்களைத் தேர் ந்தெடுத்து அப்ளை பண்றதுதான் சரி!” – அழகுக் கலைப் பயிற்சிக்கு வகுப்பு எடுக்கும் கணக்காகக் கட கடக் கிறார் பூர்ணா.
”உடற்பயிற்சி?’
”சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னா ல், நல்ல வெயிட் போட்டு இருந் தேன். படிப்படியா 10 கிலோவுக்கும் மேல் குறைச்சு இருக்கே ன். ஷூட்டிங் நேரத்தில் மட்டும் உடம்பை ரொம்ப வருத்தி க்காத அளவுக்கு பிராக்டீஸ் பண்ணுவேன். க்ளாஸிக்கல் டான்ஸ்தான் பிரமாதமான பயிற்சி. ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி பண்றப்ப உடல் மட்டும்தான் பம்பரமா சுழலும். ஆனால், க்ளாஸிக்கல் டான்ஸ் பண்றப்ப, உடலுக்கும் மன சுக்கும் பேரானந்தம் கிடைக்கும். டான்ஸர் ஷோபனாவின் தீவிர விசிறி நான். டான்ஸ் பண்றப்ப மனசுக்குக் கிடைக்கிற சுகமும் அமைதி யும் எல்லாவிதக் கஷ்டங்களையும் மறக் கடிச்சிடும்!”
”தலைமுடியை ரொம்ப ஸ்டைலாப் பரா மரிக்கிறீங்களே?”
”தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவேன். நல்லா எண்ணெய் தேய்ச் சு, தலையில் சிறு இடம் கூடப் பாக்கி இல்லா மல் ரசிச்சு ரசிச்சு மசாஜ் பண்ணுவேன். பழம் பாசி மாதிரி யான மூலிகைகள் கிடைச்சா, தலைக்குத் தேய் த்துக் குளிப் பேன். மற்றபடி, தலை முடிக்காக பிரத் யேகமா எந்தப் பொரு ளும் நான் பயன்படு த்துறது இல்லை!”
”உணவுப் பழக்கம் எப்படி?”
”சாக்லேட்னா, எனக்கு உயிர். என் உடம்பு க்குத் தவறுன்னு தெரிஞ்சும், அந்தப் பழக்கத்தை மட்டும் விட முடியலை. ஒவ் வொரு பிறந்த நாளுக்கும் ஒரு உறுதி மொழி எடுப்பது என் வழக்கம். அடுத்த பிறந்த நாளில் நிச்சயம் சாக்லேட்டுக்குத் தடா போட்டு ருவேன். காய்கறி களைப் பச் சையா சாப்பிட்டே பழகிட்டேன். கொழுப்புச் சத்து உள்ள உணவுக ளுக்கு நோ. ஷூட்டிங் நேரங்களி ல் மட்டும் டயட் ஃபாலோ பண்ணுவேன். இரவு நேரங்களில் மிகக் குறைவான சாப்பாடுதான்.”
”அழகுக்கு அட்ரஸ் சொல்லுங்களேன்…’
”நல்லாத் தண்ணி குடிங்க. எவ்வளவு தண்ணி குடிக்கிறோ மோ, அந்த அளவு க்கு நம்ம உடம்பு ஃப்ரெ ஷ்ஷா இருக்கும். எந்த நேரமும் சிரிச்சு க்கிட்டே இருப்பது என்னோட ஸ்பெ ஷல். இடியே விழுந்தா லும் அஞ்சு நிமி ஷத்துக்கு மேல் என் முகத்தை இறுக்க மாப் பார்க்க முடியாது. எதுக்குக் கஷ்ப்படு றோம்; எதுக்குச் சம்பாதிக்கிறோம்? சந்தோஷமா இருக் கத்தானே!
‘வருத்தமான சூழலில், குழந்தைங்களோட ஐக்கியமாகிடுங் க; சந்தோஷமான சூழலில், பெரியவங்களோட ஐக்கியமா கிடுங்க!’னு ஒரு தத்துவம் படிச்சேன். இப்போ வரைக்கும் அதைத்தான் கடைப்பிடிக்கிறேன்!”

No comments:

Post a Comment