Wednesday, 18 July 2012

ஓரினச்சேர்க்கையாளர்களால் அதிகமாக பரவும் பால்வினை நோய்கள்..!!

ஓரினச் சேர்க்கையால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்க ளின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்க ளை விட 50 சதவிகிதம் அதிக மாக இருப்பது கண்டறியப்பட்டு ள்ளது. ‘எய்ட்ஸ் மற்றும் பால் வினை’ நோய்களால் பாதிக்கப் பட்டவர்களில் 53% பேர் 35 வய துக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக் கும் உண்மையும் தெரிய வந்து ள்ளது.
‘ஓரினச்சேர்க்கை’யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற் கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குறிப்பாக, எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ‘ஓரினசேர்க் கையில் ஈடுபடுவோரிடையே, இதே நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள சாதாரணமான ‘ஆண்-பெண்’ உடலுறவை மேற்கொள்ளும் மக்க ளைவிட பல மடங்கு அதிகமாக பாதிப்புள்ளது. இந்த புதிய ‘சிக்மா எயிட்ஸ் ஆய்வு குழுமத்தின்’ ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தா ண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கை யாளர்கள் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்ட றியப்பட்டுள் ளது. இவர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோ ற்றால் இறந்து போனதாக கணக் கெடுப் பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சத வீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்கா கியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையாளர்களால், எய்ட்ஸ் மற்றும் பால்வி னை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறிய ப்பட்டுள்ளது.
இதுபோன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மே ற்கொ ள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்சேர்க்கையால்’ எய்ட் ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது. குறிப்பாக ‘ஓரின ச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பி டத்தக்க அளவில் பெருகி வரும் லத்தின் அமெரிக்காவி ல், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தோற் றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களி டையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட் ஸ் நோய் தோற்று குறித்த இது வரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதிய உண்மைகள் வெளி வந்துள்ளன.
லத்தீன் அமெரிக்காவில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு முக் கிய காரணமாக ‘ஓரினச்சேர்க் கை’ விளங்குவது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. லத்தின் அமெரி க்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோ யால்’ தாக்கப் பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியு ள்ளனர்.
பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளில் ‘ஓரினச்சேர்க்கையாளர்களிடையே’ பரவும் எய்ட்ஸ் நோ ய் தாக்கம் மிக கடுமையாக இருப் பது தெரியவந்துள்ளது. இந்த நாடு களில் ஓரினச்சேர்க்கையாலர்களால் மறைமுகமாக, எய்ட்ஸ் நோ ய் தொற்றிற்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 10% முதல் 25% சதவீதமாக உள்ளது என்பதே யாகும். ‘ஓரினச்சேர்க்கையாளர்களை‘ திருமணம் செய்து கொண்டதால், எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ள னர் என இந்த ‘சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழுமத்தின்’ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Sunday, 15 July 2012

கர்பமான மனைவியை கவனமாக கையாள்வது எப்ப‍டி?

கர்ப்பகாலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என் பதுதான் மகப்பேறு மருத்துவர்களிடம் கர்பிணிப் பெண்கள் தயங்கி தயங்கி கேட் கும் கேள்வி. ஏனெனில் அந்த நேரத்தில் கர்ப்பிணிகளின் மனது கணவனின் அரு காமைக்காக ஏங்கும் எனவேதான் அந்த கேள்வியை பெரும்பாலான பெண்கள் மருத்துவர்களிடம் கேட்கின்றனர்.
பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோ ன் மாற்றங்கள். கருவில் ஏற்படும் குழந் தையின் படிப்படியான வளர்ச்சி போன்ற வை பெண்ணுக்குள் ஒருவித கிளர்ச்சி யை ஏற்படுத்தும். அதேபோல் பெண்மை யின் பூரிப்போடு திகழும் மனைவியின் அழகு கணவனுக்கு ஒருவித ஆசையை ஏற்படுத்தும் எனவே அந்த நேரத்தில் தாம்பத்ய உறவில் ஈடுபட வே ண்டும் என்ற எண்ணம் தம்பதியருக்குள் ஏற்படுவது இயல்புதான். எனினும் கர்ப்பகாலத்தில் குழந்தையின் நலனில்தான் அதிக அக்க றை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்குத்தான் முதலில் முக் கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தம்பதியர் இருவரும் இணைந்து ஒன்றாக கலந்து பேசி உடல் ரீதி யாகவும் மனரீதியாகவும் தயாராக வேண்டும். வயிற்றி ல் குழந்தை இருப்பதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உற வில் ஈடுபடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
கர்ப்பகாலத்தில் மூன்று பருவ நிலைகளில் முதல், இறுதி நிலைகளில் உறவில் ஈடுபடுவது சரியானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். முதல் மூன்று மாதங்களில் கருவின் வளர்ச்சி குறைவா ன அளவே இருக்கும். வாந்தி, தலைச் சுற்றல் போன்றவைகளினால் பெண்கள் அதிக சோர்வோடு காணப்படுவார்கள். எனவே அப்பொழுது உறவில் ஈடுபடுவ து பாதுகாப்பற்றது என்கின்றனர் மருத் துவர்கள்.
அதேபோல் மூன்றாவது பருவத்தில் பிரவசத்தை எதிர்நோக்கிக் கொண்டிரு க்கும் பெண்களுக்கு முதுகுவலி, கால்வலி போன்றவை ஏற்படும் அந்த சமயத்தில் உறவில் ஈடுபடுவதும் குழந்தைக்குப் பாதுகாப்பான தல்ல என்கின்றனர். நான்கு முதல் 7 மாதம் வரையில் பாதுகாப்பா ன முறையில் உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பகாலத்தில் சிரமமான பொஸிசன்களை தவிர்க்கவும். எளிதான வலி ஏற்படாத பொஸிசன்க ளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர் நிபு ணர்கள். அன்பான அரவ ணைப்பும், முத்தங்களும் கூட சில சமயங்களில் கர்ப்பி ணிப்பெண்ணுக்குப் போது மானதாக இருக்கும் என்கின் றனர். எனவே சிரமம் தராத தொடுகையையும், கணவரி ன் அருகாமையையும் மட்டுமே எதிர்பார்க்கும் பெண்கள் இருக்கத் தான் செய்கின்றனர். அதுமாதிரி நேரங்களில் மனைவியை கவனமா ய் கையாளவேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு சில சமயங்களில் அசதியும் சோர்வும் அதிகமாக இருக்கும். அப்பொழுது ஓய்வு நிலையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறு த்தியிருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் கர்ப்பிணி மனை வியை தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் நல் லது என்பது மருத்துவர்களின் அறிவுரை யாகும்.