Tuesday, 10 January 2012

ஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்து


வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோ லைப் போல் உலர்ந்து விடும். எவ் வளவுதான் எண்ணெய் தடவினா லும் போதாது. இப்படி இருந்தால், வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண் ணெயை, தலையில் நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின், தலைக்கு குளிக்கவும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல் லது தேங்காய் எண்ணெயில் நெல் லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி , மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட் டி வேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா, 10 கிராம் சேர் த்து, எண்ணெயில் போட்டு கொதி க்க வைக்கவும்.
இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைத்தால், சூரிய கதிர்கள் பட்டு, எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடி கட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால், முடி உதிர் தல், நரைமுடி குறையும். செ ம்பட்டை முடி கருமையாகும்; பொ டுகு நீங்கும்.
தினமும் தலைக்குக் கொஞ்சம் எண் ணெய் தடவி வர வேண்டும். அது, தேங்காய் எண்ணெயாக இருந்தால் நல்லது. எண்ணெய் தடவும் போது, விரல்களின் நுனியால் தலையில் அழு த்திப் பிடித்து விட்டுத் தேய்க்க வேண்டும். அப்படிச் செய்தால், கூந்த ல், எண்ணெய் பசையுடன் பார்ப்பத ற்கு அழகாக இருக்கும்.
வெந்தயத்தை விழுதாக அரைத்து, தலையில் தடவி ஊறவிட்டு, பின்னர் எலுமிச்சை சாறு கலந்த நீரில் குளிக்கவும். இது, குளிர்ச்சியை ஏற்படு த்தும். செம்பருத்தி பூக்களை பசை போல அரைத்துக் கொள்ளவும். இந்தக் கல வையை தலையில் தடவி பின்னர் அலசவும்.
சாதம் வடித்த நீருடன் சீகைக்காய் கலந்து. அதைக் கொண்டு முடியை தேய்த்து விட் டால், முடி பளபளக்கும்.
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ, 50 கிரா ம் வாங்கி, அதை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.
இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், பொ டுகு பிரச்னை தீரும். அதிகம் பொ டுகு உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ மூன்று வாரங்கள் குளித்தால், பொ டுகு சுத்தமாக நீங்கி விடும்.
வெந்தயம், வால் மிளகு, சீரகம் மூன் றையும் சம அளவு எடுத்து பொடி செ ய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர, இளநரை மறையும். கூந்தலுக்கு எப்போதும் எண்ணெய் பசை யும், நீர்ச் சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி, நரை முடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும் போது, முறையான பயிற்சி வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தும்போது, ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூ வைக் கலந்து, பின்பு பயன்படுத்த வேண்டும்.


Wednesday, 19 October 2011

ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் உள்ள‍ வித்தியாசம்


(டாக்டர். சு.ரகுபதி எம்.எஸ்., எம்.சி எச்., (இதயம்) ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை)
ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உட னே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்த னை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரி ந்து மனிதன் இறந்து போக நேரி டும். 1928வது வருடம் வரை இ தய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட் லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கரு வியுமில்லாமல் மார்பின் இடது புறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரி வடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவ தும் நடந்து கொண்டிருந்தன.
1956ம் வருடம் அமெரிக்க பேராசி ரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக் குப் பிறகு, இதய துடிப்பை (இயக்க த்தை) நிறுத்தி 5 மணி நேரம் கூட இத யத் துடிப்பில்லா மல் ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை முறையை முத லில் செய்து காண்பித்தார். இந்தியா வில், 1970 ல் சென்னை பொது மருத் துவமனையில் இந்தியாவின் முதல் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்யப் பட்டது.
ஓபன் ஹார்ட் ஆபரேஷன்:
இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது. சாதாரண மாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம். ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத் திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறு படியும் இதய இயக்க த்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடி யும்.
இந்த, ‘ஓபன் ஹார்ட்’ (திறந்த முறை) இத ய அறுவைச் சிகிச்சை முறையில் செயற் கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடி கிறது. இந்த சிறந்த முறை அறுவைச் சிகி ச்சை முறையில் உடம் பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசு த்த ரத்தம் செயற்கை நுரையீ ரல் மிஷினில் செலுத்தப்படுகிறது.
செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப் பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.
இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹை போதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப் படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும். அந்த சமயத்தில் ஆபரே ஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத் தன்மை  மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச் சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையு ம் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலி ருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத் தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணை த்துவிடலாம்.
ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வத ற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துக ளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றி லும் குணப்படுத்தி விடலாம்.
பைபாஸ் சர்ஜரி:
பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடு வதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இத ய ஆபரேஷன்.
இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற் கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம்.
இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்ய லாம்.
பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக் குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல் லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மை யைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப் படுகிறது.
பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்ய க்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொது வாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜ ரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொரு த்தமானதாக இருக்கும்.